1) தமிழகத்தில் எங்கேனும் குழந்தைகள் பிச்சை
எடுத்து வாழ்க்கை நடத்துகிறார்கள் என்ற அவல நிலையைக் கண்டால் உடனே "RED
Society" யின் 9940217816 என்ற எண்ணில் அழையுங்கள். அவர்கள்
அக்குழந்தைகளின் கல்விக்கு வழி வகுப்பார்கள்.
2)
மாற்றுத்திறனாளிகளுக்கான
இலவச கல்வி, இலவச விடுதி
குறித்து தகவலைப் பெற 9842062501 & 9894067506 என்ற எண்களில் தொடர்பு கொண்டு அறிந்து
கொள்ளலாம்.
3)
தீ விபத்துக்களினாலோ
அல்லது பிறக்கும் போதே வாய், காது , மூக்கு போன்ற
உறுப்புக்களின் வளர்ச்சி குறைந்த நிலையில் இருந்தாலோ இலவசமாக ப்ளாஸ்டிக் சர்ஜரி
செய்து கொள்ள முடியும். வரும் மார்ச் மாதம் 23 ம் தேதி முதல் ஏப்ரல் மாதம் 4ம் தேதி வரை ஜெர்மானிய மருத்துவர்கள் PASAM
Hospital , Kodaikanal மருத்துவமனைக்கு
வரவிருக்கின்றார்கள். மேலும் தகவல்களைப் பெற 045420 240668,245732 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
4) வாகனம் ஓட்டும் உரிமை அட்டை, குடும்ப அட்டை, பாஸ்போர்ட், வங்கிக் கணக்குப் புத்தகம்... போன்ற முக்கிய
ஆவணங்கள் ஏதேனும் கீழே கண்டெடுத்தால் அருகில் உள்ள அஞ்சற்பெட்டியில்
இட்டுவிடுங்கள். அது தானாக உரியவரிடம் சேர்ந்து விடும். அதற்குரிய அஞ்சற்செலவுத்
தொகையை சம்பந்தப் பட்ட நபரிடமிருந்து அஞ்சலகங்கள் பெற்றுக் கொள்ளும்.
5)
அடுத்த 10 மாதங்களில் நம் பூமியின் வெப்ப நிலை கூடுதலாக 10டிகிரி உயர்ந்து இப்போதிருக்கும் வெப்பத்தை விட
அதிகமான வெப்பம் இருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கருத்து தெரிவிக்கின்றார்கள்.
நமது இமயமலையில் உள்ள பனிப் பாளங்கள் கொஞ்சம் கொஞ்சமாக உருக ஆரம்பித்து
விட்டனவாம். ஆகையினால் நாம் புவி வெப்ப மயமாதலை எதிர்த்துப் போராட வேண்டிய
தருணத்திலிருக்கின்றோம் என்பது நாமறிந்த செய்தியே! அதனால் நம்மால் முடிந்த வரை
மரங்களை நட்டு அதனைப் பேணிக் காக்கலாம் **நீரினையும், இன்ன பிற சக்திகளையும் (மின்சாரம் உள்பட) தேவையில்லாமல்
செலவழிப்பதை நிறுத்திக் கொள்ளலாம் **ப்ளாஸ்டிகை பயன்படுத்தாமலும் அவற்றின்
கழிவுகளை எரித்து நாசம் செய்யாமலும் இருக்க முயற்சிக்கலாம்.
6) இப்போதிருக்கும் மனித இனம் ஆறு மாத
காலங்களுக்கு சுவாசிக்கத் தேவையான பிராண வாயு தயாரிக்க 38 ட்ரில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும் என்று
ஒரு ஆய்வில் தெரிவிக்கப் பட்டுள்ளது. இத்தனை சிரமம் இல்லாமல் நமக்காக பிராண வாயு
அளிக்கும் மரங்களை நட்டு அவற்றிற்கும் மரியாதை செய்வோமே!!
7)
கண் வங்கி, கண் தானம் குறித்து தகவல்களை அறிந்து கொள்ள
சங்கர நேந்த்ராலயா கண் வங்கியின் சிறப்புத் தொடர்பு எண்களையும் குறித்து வைத்துக்
கொள்ளுங்கள். தேவைப் படும் சமயம் நிச்சயமாக உதவும். 044 28281919 மற்றும் 044 282271616 மேலதிக விபரங்களுக்கும் எப்படி கண் தானம்
செய்வது குறித்த தகவல்களுக்கும். http://ruraleye.org/
8) பத்து வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு இருதய
அறுவைச் சிகிச்சை வேண்டின் அதனை இலவசமாகப் பெற ஸ்ரீ வள்ளி பாபா இன்ஸ்டியூட்
பெங்களூர் நிறுவனம் உதவி செய்கின்றது. மேலும் விபரங்கள் பெற 9916737471
9) இரத்தப் புற்று நோய்: "Imitinef
Merciliet" என்ற மருந்தின்
மூலமாக இரத்தப் புற்று நோயை குணப்படுத்தலாம். இது அடையார் புற்றுநோய் ஆராய்ச்சி
மருத்துவமனையில் இலவசமாகக் கிடைக்கின்றது. மேலும் விபரங்களுக்கு வகை : புற்றுநோய்
முகவரி: East Canal Bank Road, Gandhi Nagar, Adyar Chennai - 600020 Land
mark: மிக்கேல் பள்ளிக்கு
அருகில் தொலைபேசி இலக்கம் : 044 - 24910754, 044-24911526, 044-22350241
10) விசேஷ வைபவங்களில் மீதம் ஆகும் உணவை கீழே போட
வேண்டாம். தயவு செய்து தயங்காமல் 1098 இலக்கத்தில் அழைக்கவும் (இந்தியா மட்டும்).
இந்த எண் சிரமத்தில் சிக்கித்தவிக்கும் குழந்தைகளுக்கு ஆதரவு தரும் எண் என்று
அனைவரும் அறிந்ததே. பசியால் வாடும் குழந்தைகளுக்கு அவர்கள் பகிர்ந்தளிப்பார்கள்.