சரியான
உணவு - நோயின்றி வாழ்வு
..
****************************************************************
சீப்பான
பொருட்களுக்கு எப்பவுமே மவுசு கம்மிதான். அதே
கதைதான் வாழைப்பழத்துக்கும். வெறும் 2 ரூபாய்தானே என நாம் நினைக்கும்
வாழைப்பழத்துக்குள்ளேயும் நிறைய விஷயங்கள் அடங்கியிருக்கு.
ஒரு வாழைப்பழத்தை சாப்பிடுவதால் நமக்கும் கிடைக்கும் நன்மைகள் பற்றியும் சின்ன லிஸ்ட்... நீர்ச்சத்து 61.4 கிராம்,
சர்க்கரை 36.4கி,
புரதம் 13கி,
தாதுப்பொருள் 0.7 மி.கிராம், கால்சியம்
17 மி.கி, இரும்பு
0.04 மைக்ரோ கிராம், மக்னீசியம்
41 மைக்ரோ கிராம், பாஸ்பரஸ் 36
மி.கி, சோடியம் 366
கி, வைட்டமின் ஏ, வைட்டமின் சி,
வைட்டமின் பி1, கலோரி 124.
================================================================
வெந்நீர் குடித்தால் என்னென்ன உபாதைகள் தீரும் படிச்சுபாருங்க……
நன்றி : http://tamilarkalinsinthanaikalam.blogspot.com/2012/07/blog-post_6938.html
இளநீர் இயற்கை தந்த பொக்கிஷம்
*மனித குலத்துக்கு இயற்கை தந்த பொக்கிஷம் இளநீர். சுத்தமான சுவையான பானம்.
*இளநீரில், செவ்விளநீர், பச்சை இளநீர், ரத்த சிவப்பில் உள்ள இளநீர் என பல்வேறு வகைகள் உள்ளன.
*இளநீரில் எல்லா வகையிலும் மருத்துவக் குணங்கள் நிறைந்துள்ளன. அளவுக்கு அதிகமாக உள்ள வாதம், பித்தம், கபத்தைத் தீர்க்கும் மருந்து இளநீர். வெப்பத்தைத் தணிக்கும். உடலில் நீர்ச் சத்து குறையும் நிலையில் அதைச் சரி செய்யும்.
*ஜீரண சக்தியை அதிகரிக்கும். சிறுநீரகத்தை சுத்திகரிக்கும். விந்துவை அதிகரிக்கும். மேக நோய்களைக் குணப்படுத்தும். ஜீரணக் கோளாறால் அவதிப் படும் குழந்தைகளுக்கு இளநீர் நல்ல மருந்து. உடலில் ஏற்படும் நீர் - உப்புப் பற்றாக்குறையை இளநீர் சரி செய்கிறது.
*இளநீர் குடல் புழுக்களை அழிக்கிறது. இளநீரின் உப்புத் தன்மை வழுவழுப்புத்தன்மை காரணமாக காலரா நோயாளிகளுக்கு நல்ல சத்து. ஆற்றல் வாய்ந்த கரிமப் பொருள்கள் இளநீரில் உள்ளன. அவசர நிலையில் நோயாளிகளுக்கு இளநீரை சிரை (Vein) மூலம் செலுத்தலாம்.
*இளநீர் மிக மிகச் சுத்தமானது. ரத்தத்தில் உள்ள பிளாஸ்மாவுக்கு சிறந்த மாற்றுப் பொருளாக இளநீர் பயன்படுத்தப்படுகிறது. ரத்தத்தில் கலந்துள்ள நச்சுப் பொருள்களை அகற்ற இளநீர் பயன்படுகிறது. இளநீரிலிருந்து தயாரிக்கப்படும் “ஜெல்” என்ற பொருள் கண் நோய்களுக்குச் சிறந்த மருந்து.
*இளநீரில் அதிக அளவில் சத்துகள் உள்ளன. சர்க்கரைச் சத்துடன் தாதுப் பொருள்களும் நிறைந்துள்ளன. பொட்டா ஷியம், சோடியம், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, செம்பு, கந்தகம், குளோரைடு போன்ற தாதுக்கள் இளநீரில் உள்ளன. இளநீரில் உள்ள புரதச்சத்து, தாய்ப்பாலில் உள்ள புரதச்சத்துக்கு இணையானது.
*இளநீரை வெறும் வயிற்றில் சாப்பிடக் கூடாது. ஏனெனில் அதில் உள்ள அமிலத் தன்மை வயிற்றில் புண்ணை உருவாக்கும். ஏதாவது ஆகாரம் எடுத்த பின்னரே சாப்பிட வேண்டும்.
நிம்மதியா தூங்க....
நிம்மதியா தூங்க என்ன செய்ய வேண்டும்.
தூக்கம் என்பது இரவானதும் நமது
உடல் இளைப்பாறக் கிடைத்த விஷயம் என்றுதான் பலரும் எண்ணிக்
கொண்டிருக்கிறார்கள். ஆனால், தூக்கத்திற்கு எத்தனையோ
விஷயங்கள் உள்ளன.
தூக்கம் என்பது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையில் அமையும். ஒரு சிலர் படுத்ததும் தூங்கி விடுவர். சிலர் மணி 12ஐ தாண்டினால் தான் தூங்கவே செல்வர். சிலர் புரண்டு புரண்டு படுத்து தூக்கத்துடன் போராடி கடைசியாக தூங்குவர். தூங்குவதிலும் பல வகைகள் உண்டு. ஆழ்ந்த உறக்கம், லேசான உறக்கம் போல பல உண்டு.
பொதுவாக கனவுகள் இல்லாத தூக்கமே சிறந்த தூக்கமாகும். கனவுகள் இல்லாமல் தூங்கி எழுந்தால்தான் உண்மையில் ஆழ்ந்த தூக்கத்தை தூங்கினீர்கள் என்று அர்த்தப்படும். கனவுகள் இல்லாத தூக்கத்தைக் கான சுவாசம் சீராக இருக்க வேண்டும். சீரான சுவாசம் இருப்பின் நல்ல தூக்கம் ஏற்படும். சுவாசத்தில் சிதைவு ஏற்பட்டால் தூக்கத்திலேயே மனம் அதிகம் வேலை செய்ய ஆரம்பித்து விடும். மனம் வேலை செய்வதுதான் கனவுகளின் அடிப்படையே நிம்மதியா தூங்க என்ன செய்யலாம் எனப் பார்ப்போம்
நிம்மதியா தூங்க...
மாத்திரைகள் இல்லாமலேயே நல்ல தூக்கம் கிடைக்க இந்த வழிமுறைகளைப் பரிந்துரைக்கிறது நித்ரா இன்ஸ்டிட்யூட்.
* தினமும் காலையில் குறைந்தது 15 நிமிடமாவது வெளிச்சத்தில் நடைப் பயிற்சி செய்ய வேண்டும்.
* காபி, டீ முதலானவற்றை மாலை 4 மணிக்கு மேல் எடுத்துக் கொள்ளக் கூடாது.
* மாலை அலுவலகம் முடிந்து திரும்பியதும் ஒரு முறை குளிப்பது சிறந்தது.
* தூங்குவதற்கு இரண்டு மணி நேரத்துக்கு முன்பாக இரவு உணவு இருக்க வேண்டும்.
* தூங்கும் முன் பால், பழம் ஏதாவது எடுத்துக் கொள்ளலாம்.
* தூங்கும் அறையில் வெளிச்சம் மிகவும் குறைவாக இருக்கும்படி பார்த்துக் கொள்ள வேண்டும்.
தூக்கம் கெட்டு எந்தப் பணியை செய்தாலும் அது வெற்றிகரமாக முடியாது. எனவே, தூக்கத்திற்குத் தேவையான விஷயங்களை நாம் சரியான முறையில் பின்பற்ற வேண்டும்.
நன்றி : http://www.dinakaran.com/Medical_Detail.asp?Nid=1442&cat=500

நச்சுக்கடி முறிவு மருத்துவம்
மாற்றம் செய்த நேரம்:6/27/2012 5:14:33 PM
மருத்துவரை
உடனடியாக அணுக முடியாத நிலையில் மட்டுமே கீழ்க்கண்ட அவசர மருத்துவதத்தைப்
பின்பற்றவும். பின்னர் மருத்துவர் ஆலோசனை அவசியம்
கண்ணாடி விரியன்: பாகல் இலைச்சாற்றை நிறையக் குடித்து வாந்தி எடுக்கவும்.
நல்ல பாம்பு: வாழைப்பட்டைகளைப் பாய் போல் பரப்பி படுக்க வைத்து, வாழைப்பட்டைச் சாறு உட்கொள்ளச் செய்க.
தேள்: கொட்டிய இடத்தில் வெங்காயத்தையும் சுண்ணாம்பையும் ஒன்றாகக் கலந்து தேய்க்கவும்.
வண்டு: கார வெற்றிலை 2 எடுத்து, 8 மிளகு சேர்த்து உண்க. சாரத்தை விழுங்குக. தெரியாத பூச்சுக்கடிக்கும் இம்மருந்தையே பயன்படுத்துவ.
சிலந்தி: ஆடாதொடை இலை, பச்சை மஞ்சள், மிளகு சேர்த்து அரைத்துக் கடிவாயில் கட்டவும்.
வெறிநாய்: மஞ்சளையும் பிரண்டையையும் சம அளவாக எடுத்து மைபோல் வைத்து நல்லெண்ணெயில் வதக்கி கடிபட்ட இடத்தில் கட்டவும்.
எலி: வெள்ளெருக்கம் பாலைத் தடவினால் அந்த இடம் புண்ணாகிவிடும். பின்னர் ஆற்றிவிட விஷம் நீங்கும். நாய்க்கடிக்கும் இது உகந்தது.
பூனை: தூய்மையாக்கிய குப்பமேனி வேரை அம்மியில் வைத்து, பசும்பால் விட்டு வெண்ணெய் பதமாக அரைத்தெடுத்து காய்ச்சின பசும்பாலில் கரைத்துப் பருகுக. ஒரு வாரம் காலை மாலை பருகுக.
பூரான்: பஞ்சை மண்ணெண்ணெயில் நனைத்துக் கடிபட்ட இடத்தில் பரபரவென்று தேய்க்கவும். நெருப்புப் பக்கம் போகக்கூடாது.
நட்டுவாக்காலி: கொப்பரை அல்லது முற்றிய தேங்காயை மென்று விழுங்கவும். குழந்தையாயின் தேங்காய்ப்பாலைப் பிழிந்து தரவும்.

No comments:
Post a Comment