WEL COME...Tamilnet Live...தமிழ்நெட் லைவ் ..வருக வருக ...

Select Your Language

ரூபாயின் மதிப்பை உங்களாலும் உயர்த்த முடியும் !


நம்மால் 120,00,00,000 கோடி டாலர்களை சேமித்து

ஒரு டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பை ரூ 20 ஆக உயர்த்த முடியும்.


நண்பர்களே, உங்களாலும் இந்த சரிவைத் தடுக்க முடியும். உள்ளூர் பொருள்களை வாங்குவீர்.

சுதேசி சிந்தனைகள்.......

டாலருக்கான இந்திய ரூபாயின் மதிப்பு நேற்றைய தினம் அதல பாதாளத்திற்கு வீழ்ந்தது. அதாவது ஒரு டாலரின் இந்திய மதிப்பு ரூ 68.xx.

இதனால் ஏற்படும் விளைவுகள் பற்றி:

இன்னும் ஒரே வாரத்தில் டீசல், பெட்ரோல் மற்றும் சமையல் எரிவாயு விலை உயரலாம். தினசரி உபயோகிக்கும் அந்நிய நாட்டுப் பொருட்கள் விலை ஏறலாம். (அவ்வாறு ஏறாவிட்டால் அவர்களின் இலாபம் எத்தனை என்பதை எண்ணிப் பார்க்கலாம்). மோட்டார் வாகன உதிரிபாகங்களின் விலை ஏறும். அதே நேரம், ஏற்றுமதியாளர்களுக்கு இது பொன்னான வாய்ப்பு. தங்களுக்கு கிடைக்கும் டாலர் ஆர்டர்கள். அரசாங்கத்தின் புண்ணியத்தில், தானாகவே கிடைக்கும் 10% அதிக லாபம்.

புதிய ஏற்றுமதி ஆர்டகளை விலை குறைத்து எடுக்கலாம். இதனால் வெளிநாட்டு கம்பெனிகள் இந்தியக் கம்பெனிகளை விட அதிகமாக பாதிக்கப்படுவார்கள். இது ஒன்றும் கட்டுப்படுத்த முடியாத விஷயம் அல்ல. அரசாங்கம் ஒரு மாத காலத்திற்கு கீழ்கண்ட நடவடிக்கைகளை எடுத்தால், விரைவில் நிலைமை சரியாகி விடும்.

தங்க இறக்குமதியை ஒரு மாத காலத்திற்கு நிறுத்தி வைக்க வேண்டும். மிகப் பெரிய அளவில் அந்நிய செலாவணியாக டாலர் வீணாவது இதில் தான்.
உள்நாட்டில் மக்களை பெட்ரோல் மற்றும் டீசலை குறைத்து உபயோகிக்கும் முறைகளை அறிமுகப்படுத்தலாம். பூலிங் எனப்படும் கூட்டுப் பிரயாண முறை, ஒற்றைப் படை எண் மற்றும் இரட்டைப் படை எண் கொண்ட வண்டிகளை சுழற்சி முறையில் சாலையில் ஓட விடலாம்.

வாரம் ஒரு முறை அனைவரும் தமது சொந்தப் பிரயாணங்களை பொதுத்துறை வண்டிகளில் பிரயாணிக்க நிர்ப்பந்திக்கலாம். வாரம் இரண்டு நாள் நகைக் கடைகளுக்கு கட்டாய விடுமுறை அளிக்கலாம். ஆதார் அட்டை, ஓட்டுனர் உரிமம், குடும்ப அட்டைப் போன்ற யுனிக் அடையாள அட்டை கொண்டு பெட்ரோல், தங்கம், மற்றும் இறக்குமதி சார்ந்த பொருள்களுக்கு தனி மனித உச்ச வரம்பு கொண்டு வந்து, இறக்குமதியைக் கட்டுப்படுத்தலாம்.
ரூபாயின் டாலருக்கு எதிராக மதிப்பை அரசாங்கமே நிர்ணயித்து, அதற்கான விலையை நிலை நிறுத்தலாம்.

ரூபாய் டிவேல்யுவேஷன் எனும் பொருளாதார உத்தியை இதுவரை அரசாங்கம் கையாண்டதாகத் தெரியவில்லை. அதையும் முயற்சி செய்யலாம். FDI க்கான டிவிடெண்டுகள் மற்றும் வெளிநாட்டு பங்கீடுகளின் லாபங்களை ஆறு மாதம் கழித்தே இந்தியாவிலிருந்து வெளியே அனுப்ப தடை போடலாம். இதற்கெல்லாம் வெளிப்படையான உலக வர்த்தகம் மற்றும் திறந்து விடப்பட்ட சந்தைதான் காரணம். பின் விளைவுகளை ஆராயாமல் செய்யப்பட்ட முடிவுகளால் ஏற்படுகிறது. அதே நேரம் வெளிப்படையான மற்றும் சுதந்திரமாக திறந்து விடப்பட்ட சந்தைகளால் உண்டான இலாபம் மற்றும் பொருட்களால் நாள் நிறைய அனுபவிக்கப் பழகி விட்டோம்.

வெளிநாட்டுக் கார்கள், பெப்சி, கோலா, சீனப் பொருட்கள், கம்ப்யூடர், மடிக்கணினி, சோப்பு, என்று வரிசையாக நிறைய சொல்லலாம். இவைகள் இல்லாமல் நம்மால் வாழ முடியமா? இது தான் திறந்த வெளி சந்தையின் சோக முடிவு. பழக்கப்பட்ட பின் இவை இல்லாமல் நம்மால் வாழ முடியாது.

இந்த சந்தைகளால் அழிந்து கெட்ட நாடுகள், லெபனான் மற்றும் பிரேசில் . இதில் இரண்டாவது நாடு தங்களின் தொழில் புரட்சியால் முன்னேறி விட்டது. ஓரு டாலருக்கு நிகரான பிரேசில் ரியல் 2.17. லெபனான் மட்டுமே இன்னமும் அப்படியே இருக்கிறது. ஒரு டாலரின் மதிப்பு அங்கே 1511 லெபனான் லிரா. நாம் எவ்வளவோ பரவாயில்லை.

நம் நாட்டிற்கு இப்போது தேவை, நல்ல ஒரு நிதி அமைச்சர்.

சாதாரண ஒரு குடிமகனான எனக்கே இவ்வளவு விஷயம் தெரிகிறது என்றால் ஒரு கஜானாவை நிர்வகிக்கும் அமைச்சருக்கு எவ்வளவு தெரிந்திருக்க வேண்டும்? பங்குச் சந்தையை மட்டும் அளவு கோலாக வைத்து செயல்படும் மத்திய நிதி அமைச்சருடைய அளவு கோலும் பீர்பாலுக்கு முகம் மழிக்கும் நாவிதனின் அளவுகோலும் ஒன்றாகவே இருக்கிறது என்பது சந்தர்ப்ப சூழ்நிலையால் ஏற்பட்ட ஒற்றுமையா?

நண்பர்களே, உங்களாலும் இந்த சரிவைத் தடுக்க முடியும். உள்ளூர் பொருள்களை வாங்குவீர்.

சோப்பு என்றால் சந்திரிகா , சிந்தால், மைசூர் சாண்டல், ஷாம்பு என்றால் டாபர், குளிர் பானம் என்றால் இளநீர், மற்றும் சாத்துக்குடி ஜூஸ். இப்படி பல வழிகளில் நீங்களும் அந்நிய பொருள்களை சிறுக சிறுக நிராகரித்து, நாட்டு நலனில் அமைச்சரை விட அதிகமாக பங்கு கொள்ளலாம்.


இன்றைய நாளில் நீங்கள் உபயோகிக்கும் வெளிநாட்டுப் பொருள்களில் ஒன்றையேனும் தவித்து, ஒரே ஒரு டாலரை மிச்சப்படுத்துங்கள். ஒரு வேளை இந்தியர்கள் அனைவரும் ஒரு சேர அப்படியே செய்தால் ஒரே நாளில் நம்மால் 120,00,00,000 கோடி டாலர்களை சேமித்து ஒரு டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பை ரூ 20 ஆக உயர்த்த முடியும். — with Sundara Moorthy

நன்றி : I love Tamilnadu

TNPSC GROUP IV Answer key

 TNPSC GROUP IV Answer key Update : 27/08/2013



General English       CLICK

General Tamil          CLICK

General Knowledge  CLICK




ATM /BANK சம்பந்தப்பட்டது மறக்காமல் படித்து விட்டு ....

அன்புள்ள நண்பர்களே... மிக மிக முக்கியமான செய்தி

ATM /BANK சம்பந்தப்பட்டது மறக்காமல் படித்து விட்டு பகிரவும்



இதுவரை அதிகாரவர்கத்தினர் அலட்சியபோக்கால் பாதிக்கப்பட்டு வந்த அப்பாவிகள், சாமானியர்கள், வாடிகையளர்கள், படிப்பறிவு குறைவானவர்கள் என பல்வேறு தரப்பினர் இனி பாதிக்கபடுவது குறைந்து கொண்டே வரும் என்பது தான் மறுக்க முடியாத உண்மை.

அதன் முதல் அங்கம், இந்தியாவில் அனைத்து வங்கிகளையும் தனது கட்டுபாட்டுக்குள் வைத்திருக்கும் RBI (இந்தியன் நடுவண் வங்கி) யின் "ஒபட்சு மேன்" { Ombudsman } என்ற திட்டம் பயனாளர்களுக்கு மிகுந்த சாதகமாகாவும், அசுர வேகத்தில் வாடிக்கையாளர்களின் குறைகளை நிவர்த்தி செய்து சிறப்பாக செயலாற்றுகிறது என்பது பெரும் மகிழ்ச்சி அளிக்கும் உண்மை.

அப்படியொரு சுவாரசியமான செய்தி தான் நேற்று சென்னையில் நடந்தது. xxxxxxxxxxx(பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற வாடிக்கையாளர் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அரசு உடமையாக்கப்பட்ட வங்கி கணக்கிலிருந்து ரூபாய் 3000/- பணம் எடுபதற்கு ATM சென்று உள்ளார்.
அப்போது பணம் வராமல் உங்கள் வங்கி கணக்கிலிருந்து பணம் எடுக்கப்பட்டுவிட்டது என்ற குறுந்தகவல் (SMS ) வந்துள்ளது.

உடனே அந்த வாடிக்கையாளர் மிகுந்த ஏமாற்றத்துடன் வங்கியை அணுகி உள்ளார்.

வங்கியில் ஒரு கடிதம் எழுதி கொடுங்கள் பணம் வந்தால் தருகிறோம் மேலும் அந்த பணம் எடுத்த சீட்டை இதோடு இணைத்து தாருங்கள் என்று கூறியுள்ளனர்.

இவரும் கடிதம் கொடுத்து காத்திருந்து காத்திருந்து பொறுமை இழந்து பலமுறை வங்கியை முறையிட்டும் எந்த பலனும் இல்லை.
சம்பவம் நடந்த நாள் ஏப்ரல் 10 ம் தேதி,மே 10ம் தேதி வரை காத்திருந்து பலன் இல்லாமல் கடைசியாக மே 28ம் தேதி இறுதியாக வங்கியை தொடர்பு கொண்டார்.

அப்போதும் எந்தபலனும் இல்லை, பொறுமை இழந்த XXXXXXX தனது நண்பர் திரு YYYYYYY (பெயர் மாற்றப்பட்டுள்ளது) தனியார் வங்கியில் வேலை செய்பவரும் ஆன அவரிடம் தனக்கு நடந்த இந்த அவல நிலையை சொல்லி உள்ளார்.

அவர் தான் முதன் முதலில் "ஒபட்சு மேன்" { Ombudsman } பற்றி சொல்லி உள்ளார்.

அதை கேள்வி பட்ட அதே நாளில் தனது அவலத்தை பின்வரும் இணையம் வாயிலாக
ஆதங்கமாக தெரிவித்துள்ளார்.

மே 29 அன்று ரூபாய் 3000/- வங்கி கணக்கில் சேர்ந்துள்ளது.
பின்னர் ஜூன் 18ம் தேதி அவருக்கு நஷ்ட ஈடு தொகை ரூபாய் 525/-ம் செலுத்தி உள்ளனர்.

அந்த சம்பந்த பட்ட வங்கி பலமுறை தொலைபேசியில் தொடர்புகொண்டு நேரில் அழைத்து கைப்பட கடிதமும் வாங்கி உள்ளனர்.

மேலும் சகல மரியாதையும் செய்துள்ளனர் என்பது குறிப்பிடதக்கது .
இனி உங்கள் வங்கியும் இதுபோன்ற தவறுகளை செய்தால் நீங்களும் யோசிக்காமல் "ஒபட்சுமேன் { Ombudsman }

சொடுக்கி உங்கள் குற்றங்களை பதிவு செயுங்கள்.

நீங்கள் கூறும் குற்றம் உண்மை என்று நிருபணம் செய்யபட்டால் சமந்தப்பட்ட அதிகாரி பணியிடை நீக்கம் செய்யபடும் அளவிற்கு "ஒபட்சு மேன்" க்கு { Ombudsman } அதிகாரம் உள்ளது.

மேலும் வங்கி அதிகாரிகளின் குற்றம் தொடர்ந்து அதிகமாக இருந்தால் சமந்தப்பட்ட வங்கி கிளை மூடப்படும் அளவிற்கு "ஒபட்சு மேன்" அதிகாரம் உள்ளது.

இதை பார்கையில் எத்தனை காலம் தான் ஏமாற்றுவாய் இந்த நாட்டிலே என்ற பாடல் வரி ஞாபகம் வருகிறது.

எல்லாதிற்கும் ஒரு முடிவு வரும் இனி வரும் காலங்களின் ஒவ்வொரு துறைளும் இதுபோன்ற வாடிக்கையாளர் ஆதரவு நிலையம் இயங்கும் காலம் தொலைவில் இல்லை என்பது மட்டும் உண்மை

TO READ MORE { Ombudsman }


PL CLICK THIS LINK TO LOG YOUR COMPLAINTS



===========================================================

வெளிநாடுகளில் பணிபுரியும் இந்தியர்களுக்கு பிரச்னையா..?


வெளிநாடுகளில் பணிபுரியும் இந்தியர்களுக்கு ஏற்படும் பிரச்னை 

குறித்து உலகின் எந்த பகுதியில் இருந்தும் உதவி கோர இந்திய 

அரசு 12 X 7 Help Line ஐ அறிமுகப்படுத்தியுள்ளது:

தொலை பேசி எண்:

1800113090,

+911140503090

நண்பர்கள் அனைவருக்கும் பகிரவும்...!



நன்றி : 
http://www.tjtnptf.com

Call 24 x 7 for help!
1800 11 3090 – Toll free from BSNL/MTNL phones in India.
Help line for Indian workers established by Overseas workers Resource center

For assistance in following regards, OWRC can be called:
* Information about recruiting agents.
* Information on Immigration procedure, necessary documentations and others.
* Details of the precautions to be taken by NRIs.
* Counseling on do and don’ts of NRIs.
* Information on disadvantages of Illegal immigrations.
* Solving NRIs difficulties.
Ministry for Indian Overseas affairs official website: www. moia.gov.in

Number that can be called from any mobile or landline from any place of the world is +91 11 4050 3090
Keep a set of all necessary documents photocopies at your home before leaving for abroad.
==================================================================

சார்லி சாப்ளின் வரலாறு

அவமானம் ஒரு மூலதனம்...

கவிஞர் கண்ணதாசன் வாழ்வில்..அவமானம் ஒரு மூலதனம்...


செட்டிநாட்டிலிருந்து எழுத்துக் கனவுகளுடன் 14 வயதுப் பையனாகச் சென்னை வந்தார் கவிஞர். அன்று இரவு படுக்க இடமின்றி மெரினா பீச்சில் காந்தி சிலைக்குப் பின்னால் பெட்டியைத் தலைக்கு வைத்துப் படுத்துக் கொண்டிருக்கிறார் கவிஞர்.

நள்ளிரவு போலீஸ்காரரின் உருட்டுத்தடி அவரைத் தட்டி மிரட்டியது. காலையில் நகரத்தார் விடுதிக்குப் போக வேண்டும்.
இரவு மண்ணடி வரை நடந்து போக முடியாது. அதனால் பீச்சில் படுத்துக் கொள்ள அனுமதிகேட்ட அந்தப் பதினாறு வயதுப் பையனின் கோரிக்கையைப் போலீஸ் நிராகரித்தது.

""படு...படுக்கணும்னா நாலணா கொடு'' என்று காவல் மிரட்டியது.
நாலணாவுக்கு வழியின்றி கலங்கிய கண்களுடன் காந்தி சிலையிலிருந்து நடந்திருக்கிறார் கவிஞர்.

அவர் வளர்ந்து கவியரசர் கண்ணதாசன் என்று பெயர் பெற்று "சுமைதாங்கி' என்ற சொந்தப்படம் எடுக்கிறார்.

கதாநாயகனாக நடித்த ஜெமினி கணேசனை எங்கிருந்து நடக்க விடுவது என்று யோசித்த கவிஞர் அதே காந்தி சிலையைத் தேர்ந்தெடுத்தார்.
நள்ளிரவு ஷூட்டிங்.

ஆனால் படத்தில் இரவு 7 மணி மாதிரி இருக்க பீச் ரோட்டில் நிறைய கார்கள் வரிசையாக வர வேண்டும்.

ஏழு கார்களை நிற்க வைத்து மாறி மாறி ஒன்றன் பின் ஒன்றாக வருகிற மாதிரி படம் எடுக்கிறார்கள்.

வீட்டில் இந்தப் படத்தைப் போட்டுப் பார்த்துக் கொண்டிருந்த கவிஞர் தன் பின்ளைகளைப் பார்த்துச் சொல்லியிருக்கிறார்.

""இந்தக் கார்களை கவனித்தீர்களா..?

இவை எல்லாமே நம்முடைய கார்கள்.

வாழ முடியும் என்று நம்பிக்கையோடு சென்னை வந்த என்னை இந்த இடத்தில்தான் நாலணா இல்லை என்பதற்காகப் போலீஸ் நடக்கவிட்டது.
இதே இடத்தில் என் ஏழு கார்களை ஓடவிட்டுப் படம் எடுத்திருக்கிறேன்.
நம்பிக்கை என்னை ஜெயிக்க வைத்துவிட்டது!'' என்றாராம்!
எங்கு அவமதிக்கப்பட்டாரோ அங்கு கவிஞர் தம் வெற்றியை அரங்கேற்றியிருக்கிறார்.

அவமானம் ஒரு மூலதனம்...

இது புரிந்தால் வெற்றி நிச்சயம்!

("வெற்றி நிச்சயம்' என்ற புத்தகத்தில் "அவமானம் ஒரு மூலதனம்' என்ற கட்டுரையில் சுகி.சிவம்..)..

நன்றி : தமிழ் -கருத்துக்களம்

வாழ நினைத்தால் வாழலாம் வழியா இல்லை பூமியில்

ஆழககடலும் சோலையாகும் ஆசையிருந்தால் நீந்தி வா

வாழ நினைத்தால் வாழலாம் வழியா இல்லை பூமியில்ஆழககடலும் சோலையாக ஆசையிருந்தால் நீந்தி வா

பார்க்கத் தெரிந்தால் பாதை தெரியும் பார்த்து நடந்தால் பயணம் தொடரும்

பயணம் தொடர்ந்தால் கதவு திறக்கும் கதவு திறந்தால் காட்சி கிடைக்கும்காட்சி கிடைத்தால் கவலை தீரும் கவலை தீர்ந்தால் வாழலாம்

வாழ நினைத்தால் வாழலாம் வழியா இல்லை பூமியில்...

ஐந்திணைகள் - குறிச்சி முல்லை மருதம் நெய்தல் பாலை


1.      குறிஞ்சித் திணை

முதற்பொருள்

நிலம் - மலையும் மலையைச் சார்ந்த இடமும்

பொழுது -
அ) பெரும்பொழுது - கூதிர்காலமும், முன்பனிக்காலமும்

ஆ) சிறு பொழுது - யாமம்


கருப்பொருள்கள்

1. தெய்வம் - சேயோன்

2. உணவு - ஐவன நெல் (மலை நெல்), தினை, மூங்கிலரிசி, கிழங்கு

3. விலங்கு - புலி, யானை, கரடி, பன்றி

4. மரம் - அகில், ஆரம், தேக்கு, வேங்கை

5. பறவை - கிளி, மயில்

6. பறை - முருகியம், தொண்டகப் பறை

7. தொழில் - தேனெடுத்தல், கிழங்கு அகழ்தல், தினை
விதைத்தல், வேட்டையாடுதல்

8. யாழ் - குறிஞ்சி யாழ்

9. பண் - குறிஞ்சிப் பண்

10. ஊர் - சிறுகுடி, குறிச்சி

11. நீர் - அருவி நீர், சுனை நீர்

12. மலர் - காந்தள், வேங்கை, குறிஞ்சி

உரிப்பொருள்  :  புணர்தலும் புணர்தல் நிமித்தமும் (நிமித்தம் = காரணம்)



2. முல்லைத் திணை

முதற்பொருள்

நிலம் - காடும் காட்டைச் சார்ந்த இடமும்

பொழுது -

அ) பெரும்பொழுது : கார்காலம்
ஆ) சிறுபொழுது : மாலை


கருப்பொருள்கள்

1. தெய்வம் - மாயோன்

2. உணவு - வரகு, சாமை

3. விலங்கு - மான், முயல்

4. மரம் - தோன்றி, காயா, பிடவம், குருந்தம்

5. பறவை - காட்டுக்கோழி, சேவல்

6. பறை - ஏறுகோட் பறை

7. தொழில் - ஆநிரை மேய்த்தல், ஏறு தழுவல்

8. யாழ் - முல்லை யாழ்

9. பண் - குறிஞ்சிப் பண்

10. ஊர் - பாடி, சேரி

11. நீர் - குறுஞ்சுனை, கான்யாறு

12. மலர் - முல்லை, குல்லை, தோன்றி, பிடவம்



உரிப்பொருள்இருத்தலும் இருத்தல் நிமித்தமும்.


3. மருதத் திணை

முதற்பொருள்

நிலம் - வயலும் வயல்சார்ந்த இடமும்

பொழுது -

அ) பெரும்பொழுது - ஆண்டு முழுதும்
ஆ) சிறுபொழுது - வைகறை, விடியல்


கருப்பொருள்கள்

1. தெய்வம் - இந்திரன் (வேந்தன்)

2. உணவு - செந்நெல், கரும்பு

3. விலங்கு - எருமை, நீர்நாய்

4. மரம் - வஞ்சி, காஞ்சி, மருதம்

5. பறவை - தாரா, நீர்க்கோழி

6. பறை - மணமுழவு, நெல்லரி கிணை

7. தொழில் - விதைத்தல், விளைத்தல்

8. யாழ் - மருத யாழ்

9. பண் - மருதப் பண்

10. ஊர் - ஊர்கள்

11. நீர் - ஆற்றுநீர், பொய்கை நீர்

12. மலர் - தாமரை, கழுநீர்


உரிப்பொருள்

ஊடலும் ஊடல் நிமித்தமும்.



4. நெய்தல் திணை

முதற்பொருள்

நிலம் - கடலும் கடல் சார்ந்த இடமும்

பொழுது -

அ) பெரும்பொழுது - ஆண்டு முழுதும்

ஆ) சிறுபொழுது – எற்பாடு

கருப்பொருள்கள்

1. தெய்வம் - வருணன்

2. உணவு - மீன், உப்பு

3. விலங்கு - உமண்பகடு (உப்பு வாணிகனின் மூட்டை சுமக்கும்
எருது), சுறா

4. மரம் - புன்னை, ஞாழல், கண்டல்

5. பறவை - அன்றில், அன்னம்

6. பறை - மீன்கோட் பறை

7. தொழில் - மீன் பிடித்தல், மீன் உலர்த்தல், உப்பு, விளைவித்தல், நாவாய் ஓட்டல்

8. யாழ் - நெய்தல் யாழ்

9. பண் - நெய்தல் பண்

10. ஊர் - பட்டினம், பாக்கம்

11. நீர் - உவர்க்குழி (ஊற்றுநீர்), மணற்கிணறு

12. மலர் - நெய்தல், கைதை (தாழை)


உரிப்பொருள்

இரங்கலும் இரங்கல் நிமித்தமும்
5.பாலைத் திணை
முதற்பொருள்
நிலம் - பாலை நிலம்

பொழுது -

அ) பெரும்பொழுது - வேனிற் காலம்,
பின்பனிக் காலம்
ஆ) சிறுபொழுது - நண்பகல்

கருப்பொருள்கள்

1. தெய்வம் - கொற்றவை

2. உணவு -  வழிப்போக்கரிடம் திருடிய உணவு

3. விலங்கு - யானை, புலி, செந்நாய்

4. மரம் - இருப்பை, உழிஞை

5. பறவை - கழுகு, பருந்து, புறா

6. பறை - சூறை கோட் பறை

7. தொழில் - வழிப்பறி, சூறையாடல்

8. யாழ் - பாலை யாழ்

9. பண் - பாலைப் பண்

10. ஊர் - பறந்தலை

11. நீர் - கூவல் (கிணறு, குழி)

12. மலர் - மரா, குரா

உரிப்பொருள்

பிரிதலும் பிரிதல் நிமித்தமும்.



இவ்வாறு வரும் திணைக் கருப்பொருள்கள் தத்தம் திணையில் இடம்பெறுவதுடன் பிற திணையிலும் இடம் பெறுவதுண்டு.அதற்குத் திணை மயக்கம் என்று பெயர்.