WEL COME...Tamilnet Live...தமிழ்நெட் லைவ் ..வருக வருக ...

Select Your Language

இன்டர்வியூ-வில் கேட்கப்படும் கேள்விகள் – ஒரு அலசல்





வேலைநிமித்தமா ஏதாவது இன்டர்வியூவுக்குப் போகும்போது, வழக்கமா நம்மளோட Resume கொண்டு போவோம். அதை மட்டும் பார்த்துட்டு நமக்கு யாரும் வேலை தரப்போறது கிடையாது. அதையும் தாண்டி பல கேள்விகள் நம்மகிட்ட கேட்பாங்க. அதுக்கு நாம எப்படி பதில் சொல்றோம்குறத பொறுத்து, நம்மளோட திறமை, மனஉறுதினு பல விசயங்கள தீர்மானிப்பாங்க. வழவழனு பதில் சொல்லாம, சுருக்கமாவும் தீர்க்கமாவும் நம்மளோட பதில் இருக்கணும்னு அவங்க எதிர்பார்ப்பாங்க.

அப்படி இன்டர்வியூ போகும்போது என்ன மாதிரியான கேள்விகள் பொதுவா கேட்கப்படும்னு அலசலாம் வாங்க..

1. உங்களைப் பற்றிய விபரம் கூறுங்கள்?
இந்தக் கேள்வி, உங்களைப் பற்றிய சுய விபரம் சம்பந்தப்பட்டதா இருக்கும். அதாவது உங்களோட பேரு, இடம், கல்வித் தகுதி, தொழில்நுட்பத் தகுதி பற்றி நீங்களே தொகுத்து சொல்லணும். (அதுக்காக உங்க வரலாறு முழுக்க சொல்லி போர் அடிச்சிடாதீங்க..)

2. உங்களைப் பற்றி சிறு விளக்கம் கூறுங்கள்?
இதுவும் முதல் கேள்வியும் ஒரே மாதிரியா தோணலாம். ஆனா இது உங்க சுய விபரம் பற்றி அல்ல, உங்கள் குணநலன் பற்றியது. அதாவது நீங்க எப்படிப்பட்டவர்னு சுருக்கமா சொல்லணும். (எதுக்கும், போறதுக்கு முன்னாடி உங்க நண்பர்கள்கிட்ட கேட்டுத் தெரிஞ்சு வச்சுக்கங்க..)

3. இதற்கு முன் பணிபுரிந்த அனுபவம் பற்றி கூறுங்கள்?
அனுபவம்ங்குறது பெரும்பாலான நிறுவனங்கள்ல அவசியமானதா மாறிடுச்சு. இதைப் பொறுத்து வேலை வாய்ப்புகள் அமையும் சூழலும் உருவாகிடுச்சு. (இஷ்டத்துக்கு அள்ளி விடக்கூடாது.. அதுக்கான சான்றிதழும் இருக்கணும்..)

4. பொழுதுபோக்கு அம்சங்கள் என்ன?
தூங்குவேன், டிவி பாப்பேன்னு கேனத்தனமா பதில் சொல்லாம, அவங்களை கவர்ற மாதிரியான, உறுப்படியான பொழுதுபோக்கு அம்சங்கள சொல்லனும். அதுக்காக நமக்குத் தெரியாத விசயங்களப் பத்தி பந்தாவா சொல்லிட்டு முழிக்க்க்கூடாது. ஏன்னா கேள்விகள் அதப்பத்தியும் வரக்கூடும்.

5. ஏற்கனவே பணி செய்த நிறுவனத்திலிருந்து விலகக் காரணம்?
அதிகமா லீவு போட்டேன், அதுனால அவங்களே தொரத்திட்டாங்கனு ரொம்ம்ம்ம்ப நேர்மையா பதில் சொல்லக்கூடாது. உங்கள ரொம்ம்ம்ப நல்ல்ல்ல்லவர்னு நெனைக்கிற மாதிரியான காரணத்தை சொல்லணும்.

6. இந்த நிறுவனத்தில் உங்களது பங்களிப்பு என்னவாக இருக்கும்?
இது உங்களோட உழைப்பு பற்றிய கேள்வி. நீங்க இதுக்குக் கொடுக்கும் பதில் அவங்களுக்கு உங்க மேல நல்ல அபிப்ராயத்தை ஏற்படுத்தணும். (அதுக்காக ஓவர் ஆக்டிங் குடுக்கக்கூடாது.. அடக்கிவாசிங்க..)

7. என்ன சம்பளம் எதிர்பார்க்குறீர்கள்?
இது ரொம்பவே முக்கியமான கேள்வி. கூடுமானவரை நாம வாய திறக்காம இருக்குறதே நல்லது. ஏன்னா நாம குறிப்பிடும் தொகை, ஒருவேளை அவங்க நிர்ணயிச்சு வச்சிருக்குறத விட குறைவானதா இருக்கலாம். (பெர்ஃபார்மன்ஸப் பொறுத்து சம்பளம் குடுங்கனு சொல்லிட்டு பம்மிடலாம்..)

8. உங்கள் பலம், பலவீனமாக எதனைக் கருதுகிறீர்கள்?
இது உங்கள நீங்க எந்த அளவுக்குப் புரிஞ்சு வச்சிருக்கீங்கங்குறத காட்ட உதவும். அதுமட்டுமில்லாம, உங்களோட நடத்தையை எடைபோட உதவும்.. ஜாஆஆஆஆக்கிரதை. (அதுக்காக தம் அடிக்கிற பழக்கம் பத்தியெல்லாம் ஓப்பனா சொல்லப்படாது..)

9. இந்த நிறுவனம் பற்றி உங்களுக்குத் தெரிந்த தகவல்கள் என்ன?
இது ரொம்பவே முக்கியமான கேள்வி. குறிப்பிட்ட வேலைக்கு விண்ணப்பிக்கும்போது, அந்த நிறுவனம் பத்தியும், அந்த வேலை பத்தியும் தெளிவா தெரிஞ்சுவச்சுக்குறது அவசியமானது. (ஜஸ்ட்.. விளம்பரம் பாத்தேன், அப்ளை பண்ணேன், தட்ஸ் ஆல்னு தெனாவெட்டா பதில் சொல்லி ஆப்பு வாங்காதீங்க..)

10. பணிநிமித்தம் பயணம் செய்ய சம்மதிப்பீர்களா?
வேலை காரணமா, சில நாள் வெளியூர் செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்படலாம். அதுக்கு நீங்க தயாரா இருக்கிங்களானு முன்னாடியே தீர்மானிச்சு வச்சுக்குறது அவசியம். (கூட வேலைபாக்குற பொண்ணை துணைக்கு அனுப்புவீங்களானு கேட்றாதீங்க...)

11. முந்தைய நிறுவனத்தில் ஏதேனும் இக்கட்டான சூழ்நலையை கையாண்ட அனுபவம் உண்டா?
வேற நிறுவனத்துல வேலைபார்த்த அனுபவம் இருந்துச்சுனா, இந்தக் கேள்விக்கான பதில், நம்மளோட திறமையை யூகிக்கச் செய்யும். (ஆபீசுக்கு லீவு போட்டுட்டு, பாட்டி செத்துப்போய்ட்டாங்கனு சமாளிச்ச அனுபவத்த சொல்லி வச்சுடாதீங்க..)

12. தனித்து செயல்பட விருப்பமா? அல்லது குழுவாக செயல்பட விருப்பமா?
இது அவங்கவங்க, தன்மேல வச்சிருக்குற நம்பிக்கையப் பொறுத்து பதிலளிக்கணும். (நா தனியா தான் வருவேன்.. ஆனா தனியாள் இல்லேனு பன்ச் அடிச்சுடாதீங்க..)

13. இங்கு வேலை கிடைக்காதபட்சத்தில் உங்களுடைய பிரதிபலிப்பு என்னவாக இருக்கும்?
மனசுக்குள்ள கெட்ட வார்த்தைல திட்டுவேன்னு சொல்லத் தோணும். ஆனா சொல்லிடாதீங்க.. இது உங்க விடா முயற்சி, நம்பிக்கை பத்தின கேள்வியா இருக்கும். இந்த பதிலை வச்சுக்கூட வேலை கிடைக்கலாம்.

14. எவ்வளவு காலம் இங்கே பணி செய்யத் தயாராக இருக்கிறீர்கள்?
ஃப்ரெண்ட் கம்பெனில அப்ளை பண்ணிருக்கேன். கிடைச்சதும் ஓடிடுவேன்னு அதிமேதாவித்தனமா பதில் சொல்லக் கூடாது. இதுக்கு குறிப்பிட்ட காலவரையறை எதுவும் சொல்லாம, கடைசிவரைக்கும் இருப்பேன்னு சொல்லணும். தொடர்ந்து வேலைசெய்ய முன்வரும்பட்சத்துல வாய்ப்புகள் தரப்படலாம்.

15. உங்களுக்கு, எங்களிடத்தில் கேட்கவேண்டிய கேள்விகள் ஏதாவது இருக்கின்றனவா?
இது, நிறுவனம் அல்லது பணி பற்றி, நமக்கு ஏதாவது சந்தேகங்கள் இருக்காங்குற நோக்கத்துல கேட்கப்படுது. திறம்பட கேட்டுத் தெளிவுபடுத்திக் கொள்ளலாம். இந்தக் கேள்வியில இருந்தும் நம்மளோட, தெரிந்துகொள்ளும் ஆர்வம் ஆராயப்படும். (இங்க எத்தன பொண்ணுங்க வேலை பாக்குறாங்கனு கேட்டுறாதீங்க...)

**********************************************
நிறுவனங்களப் பொறுத்து, இன்னும் பல கேள்விகள் கேட்கப்படலாம். கேள்விகள் எதுவாகயிருந்தாலும் தைரியமா, தடுமாற்றமில்லாமல நாம கூறும் பதில்கள் ரொம்பவே அவசியம். நம்மகிட்டயிருந்து வெளிப்படும் பதில்கள், சம்பந்தப்பட்டவர்க்கு திருப்தியளிக்கும் பட்சத்துல, அதற்கான பலன் நிச்சயம் பாசிடிவ்வாக அமையும்.
வாழ்த்துக்கள்.

நன்றி :http://chellakirukkalgal.blogspot.in

எம்.ஜி.ஆர் - M.G.R


            எம்.ஜி.ஆர் (MGR) நடித்த மொத்தப் படங்கள் 136. முதல் படம் சதிலீலாவதி(1936). கடைசிப் படம் மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் (1977).




      பெரும்பாலும் (60 படங்கள்) தெலுங்குப் படங்களைத்தான் ரீ-மேக் செய்வார் எம்.ஜி.ஆர். அத்தனையும் என்.டி.ஆர். நடித்ததாகவே இருக்கும். ‘உரிமைக்குரல்மட்டும் விதிவிலக்கு. அது நாகேஸ்வர ராவ் நடித்த தெலுங்குப் படம் !

      எம்.ஜி.ஆரின் முதல் மனைவி தங்கமணி. இரண்டாவதாக சதானந்தவதியைத் திருமணம் செய்தார். அவரது மறைவுக்குப் பிறகு வி.என்.ஜானகி !

      எம்.ஜி.ஆர்.நடித்த 50 படங்களுக்குப் பாடல்கள் எழுதியவர் கண்ணதாசன். அவரின்அச்சம் என்பது மடமையடா... அஞ்சாமை திராவிட உடைமையடாபாட்டு எம்.ஜி.ஆரின் காரில் எப்போதும் ஒலிக்கும் !

      சிகரெட் பிடிப்பது மாதிரி நடிப்பதைத் தவிர்த்தார். நினைத்ததை முடிப்பவன்படத்தில் சிகரெட்டை வாயில் வைப்பார். இழுக்க மாட்டார். மலைக்கள்ளனில்ஹீக்காபிடித்தது மாதிரி வருவார். இந்தக் காட்சியை வைப்பதா, வேண்டாமா என்ற குழப்பத்திலேயே படம் ரிலீஸ் ஆவதில் தாமதம் ஏற்பட்டதாம் !

      முதலமைச்சர் பதவியை ஏற்றுக்கொண்டால் ஷீட்டிங் போக முடியாது என்பதால், பதவியேற்பு விழாவையே 10 நாட்கள் தள்ளிப்போட்டுமதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்படத்தை முடித்துக் கொடுத்தார் !

      ‘கர்ணன்படத்தில் சிவாஜிக்கு முன்னதாக எம்.ஜி.ஆரைத்தான் கேட்டார்கள். ‘புராணப் படம் பண்ண வேண்டாம்என்று அண்ணா சொன்னதால் மறுத்துவிட்டார் எம்.ஜி.ஆர் !

      நம்பியாரும் அசோகனும் தான் எம்.ஜி.ஆருக்குப் பிடித்த வில்லன்கள். பி.எஸ்.வீரப்பாவும், ஜஸ்டினும் இருந்தால் சண்டைக் காட்சிகளில் குஷியாக நடிப்பார்

      எம்.ஜி.ஆருடன் அதிக படங்களில் ஜோடியாக நடித்தவர் சரோஜா தேவி. அடுத்தது ஜெயலலிதா !

      எம்.ஜி.ஆர் - கருணாநிதி இணைந்து வெற்றி பெற்ற படம்மலைக்கள்ளன்’. ஜனாதிபதி விருது வாங்கிய முதல் தமிழ் சினிமா. இந்தியாவில் உள்ள பெரும்பாலான மொழிகளில் எடுக்கப்பட்ட படம் இது !

      காஞ்சித் தலைவனில் இருந்து தனது கட்டுமஸ்தான உடம்பைக் காண்பித்து நடிக்கத் தொடங்கினார்.எண்ணெய் தேய்த்துக் குளிக்கும்உரிமைக் குரல்காட்சி பெண்களை அவர் பக்கம் ஈர்ப்பதில் பெரும் பங்கு வகித்தது !

      நாடோடி மன்னன், உலகம் சுற்றும் வாலிபன்,மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் - மூன்றும் எம்.ஜி.ஆர் டைரக்ஷ்ன் செய்த படங்கள் !

      சினிமாவில் அதுவரை கட்சிக் கருத்துக்களைப் புகுத்துவார்கள்.ஆனால் எம்.ஜி.ஆர் காட்சிகளையே புகுத்தினார். தி.மு.க கொடி, உதயசூரியன் சின்னம், அண்ணா படம் இல்லாத படமே இல்லை என்ற அளவுக்கு வைத்தார் !

      எம்.ஜி.ஆர் எத்தனையோ குழந்தைகளுக்குப் பாதுகாவலராக இருந்து படிக்கவைத்தார். அதில் முக்கியமான இரண்டு பேர், அரசியலைக் கலக்கிய துரைமுருகன். சினிமாவில் வலம் வந்த கோவை சரளா !

      தமிழ் சினிமா ரசிகர்கள் பற்றி 1970 - ம் ஆண்டு எம்.ஜி.ஆர். அடித்த கமென்ட் இதுதானஅந்தக் காலத்து ரசிகர்கள் மாதிரி இப்ப உள்ளவங்க இல்லை. 10 நிமிஷங்களுக்கு ஒரு க்ளைமாக்ஸ் கேட்குறாங்க அப்படி வெச்சாத்தான் படம் ஓடும்’.

      ‘பொன்னியின் செல்வன்கதையைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் எடுக்க நினைத்தார் எம்.ஜி.ஆர். ஆங்கில வசனத்தை அண்ணாவை எழுதவும் கேட்டுக் கொண்டார். ஆனால், ஆசை நிறைவேறவில்லை !

      அறிமுகம் இல்லாதவராக இருந்தால், உடனே கை கொடுத்துநான் எம்.ஜி.ராமச்சந்திரன் - சினிமா நடிகர்என்று அறிமுகம் செய்துகொள்வார் !

      ராமாவரம் தோட்டத்தில் ஆடு, மாடு, கோழி, நாயுடன் ஒரு கரடியும், சிங்கமும் வளர்த்தார் எம்.ஜி.ஆர். இவற்றைக் கவனிக்க தனி டாக்டர் வைத்திருந்தார் !

      ரொம்பவும் நெருக்கமானவர்களைஆண்டவனே !’ என்றுதான் அழைப்பார் !

      அடிமைப் பெண் பட ஷீட்டிங்குக்காக ஜெய்ப்பூர் போன எம்.ஜி.ஆர்.குளிருக்காக வெள்ளைத் தொப்பி வைக்க ஆரம்பித்தார். பிடித்துப்போகவே அதைத் தொடர்ந்து பயன்படுத்த ஆரம்பித்தார் !

      எம்.ஜி.ஆர்.பகிரங்கமாகக் காலில் விழுந்து வணங்கிய பெருமை இரண்டு பேருக்கு உண்டு. ஒருவர், நடிகர் எம்.கே.ராதா. கத்திச் சண்டை, இரட்டை வேடங்களுக்கு இவர்தான் எம்.ஜி.ஆரூக்கு இன்ஸ்பிரேஷன். இரண்டாமவர், ஹிந்தி டைரக்டர் சாந்தாராம். இவரது படங்களைத்தான் நிறையப் பின்பற்றினார் எம்.ஜி.ஆர் !

      முழுக்கை சில்க் சட்டை, லுங்கியுடன் தொப்பி, கண்ணாடி இல்லாமல் தன் காரை தானே டிரைவ் செய்து எப்போதாவது சென்னையை வலம் வருவது எம்.ஜி.ஆரின் வழக்கம். ‘யாருக்கும் என்னைத் தெரியலை. தொப்பி, கண்ணாடி இருந்தாதான் கண்டு பிடிப்பாங்க போலஎன்பாராம் !

      அன்னை சத்யாவை வணங்க ராமாவரம் தோட்டத்துக்குள்ளேயே கோயில் வைத்திருந்தார் !

      நான் ஏன் பிறந்தேன்?’ - ஆனந்த விகடனில் எம்.ஜி.ஆர் எழுதிய சுயசரிதைத் தொடர்.அதை அவர் முழுமையாக எழுதி முடிக்கவில்லை. அடுத்ததாகத் தொடங்கியஎனது வாழ்க்கை பாதையிலேதொடரும் முற்றுப் பெறவில்லை. இன்றும் அவர் வாழ்ந்து கொண்டு இருப்பதாகவே நினைக்கும் ரசிகர்கள் இருக்கிறார்கள். முற்றும் பெறவில்லை அவர் பெருமைகள் !

இன்று நான் பேச மாட்டேன்



என் நண்பன், ஒரு தொழிலதிபர். என்னை விட ஐந்து வயது இளையவன். ஐந்து ஆண்டுகளுக்கு 

முன், அவன் உயிர்க்கொல்லி நோய் ஒன்றால் பீடிக்கப்பட்டு, தெய்வாதீனமாய் தப்பினான். நேரம் 

கிடைக்கும் போதெல்லாம், அவனுடன் போனில் பேசுவேன்.



ஒரு ஞாயிறு, காலை 8.00 மணிக்கு அவனுக்கு போன் பண்ணினேன். நண்பனின் மகன் போனை 

எடுத்தான். "அப்பா இப்ப பேசமாட்டாரு...' என்றான். "நான் அவனின் <உயிர் நண்பன்...' என்றேன்

"கடவுளே பேசினாலும், அப்பா பேசமாட்டார். ஏன்னா ஞாயிற்றுகிழமை அப்பா மவுன விரதம் 

இருக்காரு...' என்றான்.



இன்னொரு நாள், நண்பனை நேரில் சந்தித்து, இது பற்றி வினவினேன். அதற்கு அவன், "உயிர் 

பிழைக்க வைத்த கடவுளுக்கும், எமனுடன் போராடி, என்னுயிரை மீட்ட என் மனைவிக்கும், நான் 

உயிர் பிழைக்க வேண்டும் என பிரார்த்தித்த நல்லுள்ளங்களுக்கும் நன்றி செலுத்த, இந்த மவுன 

விரதம். இந்த மவுன விரதம், உயிர் காக்கும் தொடர் மருந்தாக செயல்படுகிறது.


"தவிர, மன உறுதியை வளர்க்க, கோபம் குறைக்க, நன்றியுணர்வு பேண, இவ்வுலகில் இருந்தும்

இல்லாமல் வாழ்ந்து பார்க்க, என் மவுனவிரதம் பயன்படுகிறது...' என்றான். இப்போதெல்லாம்

வாரம் ஒரு முறை, நானும் மவுன விரதம் இருக்கிறேன்.


பரந்தாமன், செய்யாறு.


நன்றி  : http://www.dinamalar.com/Supplementary_detail.asp?id=13319&ncat=2

முடியாதது முயலாதது மட்டுமே ...


முடியாதது முயலாதது மட்டுமே  


ஒரு மைல் தூரத்தை ஓடிக் கடக்க குறைந்த பட்சம் நான்கு நிமிடங்கள் வேண்டும் என்று பல காலமாக எல்லாரும் நம்பி இருந்தார்கள். 1954 ஆம் ஆண்டு வரை வெளியான எல்லா அறிவியல் ஆராய்ச்சிக் கட்டுரைகளும் மனித உடலால் அதற்கு மேல் வேகமாக ஓட முடியாது என்று ஒருமித்த கருத்தை அறிவித்தன. ஆனால் 1954 ஆம் ஆண்டு மே மாதம் ஆறாம் தேதி ரோஜர் பேனிஷ்டர் என்பவர் ஒரு மைல் தூரத்தை நான்கு நிமிடங்களுக்கு முன்னதாக ஓடிக் கடந்து அது வரை நிலவிய அறிவியல் நம்பிக்கையைப் பொய் ஆக்கினார்.



அவர் பயிற்சியின் போது தன் இலக்கான மைலை நான்காகப் பிரித்துக் கொண்டார். ஒவ்வொரு கால் மைலையும் 58 வினாடிகளுக்கு முன் கடக்க வேகத்தை மேற்கொண்டார். மிகவும் கஷ்டமான அந்த வேக இலக்கை எட்டி சிறிது ஓய்வு எடுத்துக் கொள்வார். பின் அடுத்த கால் மைலைக் கடப்பார். பல முறை பயிற்சி எடுத்து சிறிது சிறிதாக வேகத்தைக் கூட்டி, ஓய்வைக் குறைத்துக் கொண்டு வந்தார். கடைசியில் அவர் பந்தயத்தில் 3 நிமிடம் 59.6 வினாடிகளில் அந்த மைல் இலக்கைக் கடந்தார். அடுத்த நான்கு வருடங்களில் அவரைப் போல் 46 பேர் அந்த "ஓரு மைல்-நான்கு நிமிடம்" என்ற உடற்கூறு ஆராய்ச்சியளர்களின் கருத்தை முறியடித்தார்கள்.

ஆகவே, எதையும் இது வரை சாதித்தவர்களை வைத்தோ, வல்லுனர்களின் கருத்தை வைத்தோ தீர்மானிக்காதீர்கள். முடியாதது என்பது முயலாதது மட்டுமே. மனித சக்தி எல்லை இல்லாதது. அதன் எல்லைகளைக் கண்டவர்கள் இன்று வரை இல்லை. முடியாதது என்பது கிடையாது. எல்லா சாதனையாளர்களும் "முடியாது" என்ற கருத்தை ஏற்றுக் கொள்ளாமல் தொடர்ந்து முயன்றவர்கள் தான். சுற்றிலும் "முடியாது, ஆகாது" என்று பலரும் சொல்லும் போதும், ஆரம்பத் தோல்விகள் அடைந்த போதும், தொடர்ந்து முயன்றவர்களுக்குள் சாதித்துக் காட்ட வேண்டும் என்ற ஒரு அக்னி இருந்திருக்கிறது.

ஒவ்வொருவரும் அப்படியொரு அக்னியை உங்களுக்குள் வளர்த்துக் கொள்ளுங்கள். அந்த அக்னி உங்களைச் சோம்பி இருக்க விடாது. சலிப்படைய விடாது. அரை குறை முயற்சிகளோடு திருப்தியடைய விடாது. விதியையோ, அடுத்தவர்களையோ தடையாக நினைக்க விடாது. அப்படி ஒரு அக்னி உங்களுக்குள்ளும் இருக்குமானால் வானம் கூட உங்களுக்கு எல்லையல்ல.

உங்கள் இலக்குகள் பெரிதாக இருக்கட்டும். ஆனால் அந்தப் பெரிய இலக்கை ரோஜர் பேனிஷ்டர் செய்து கொண்டது போல சிறு சிறு இலக்குகளாய் பிரித்துக் கொள்ளுங்கள். ஒவ்வொன்றையும் உற்சாகமாக அணுகுங்கள். முழு மனதுடன் முயலுங்கள். இலக்கு பெரியதாக இருக்கும் பட்சத்தில் கண்டிப்பாக தோல்விகள் வரலாம். எங்கு தவறு செய்தோம் என்று ஆராய்ந்து அடுத்த முயற்சியின் போது திருத்திக் கொள்ளுங்கள். ஒவ்வொரு முயற்சியிலும் முந்தியதை விட சற்று அதிக முன்னேற்றம் இருக்கும் படி பார்த்துக் கொள்ளுங்கள். இதை மட்டும் உங்களால் செய்ய முயன்றால் உங்களால் முடியாதது என்று எதுவும் இல்லை. முடியாது என்று நீங்களாக பின் வாங்கினால் ஒழிய நீங்கள் என்றுமே தோல்வி காணப் போவதில்லை.

-    மு. சரவணன் , எம்.சி.ஏ

==============================================================================================

ஒரு நிமிடம் நில்லுங்கள்!


ஒரு நிமிடம் நில்லுங்கள்!

மகனே... நீ எனக்கு உதவும் பட்சத்தில், நாம் நமது நிலத்தில் மிக சிறப்பாக விவசாயம் செய்து செழித்து வாழ முடியும். ஆனால், நீ உன்னுடைய கண்டுபிடிப்புக்காக உழைக்க போவதாய் சொல்கிறாய். உனது வெற்றி அவ்வளவு எளிதும் அல்ல, நிச்சயமும் அல்ல என்பதை மறவாதே!"

"அப்பா, நான் வெற்றி வெறுவேன் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. நீங்கள் என்னை பார்த்து பெருமைப்பட போகும் நேரம் வரும். என்னை ஆசிர்வதியுங்கள் தந்தையே!"

அறை மனதுடன் அவனை ஆசிர்வதித்த தந்தைக்கு தெரியாது, அமெரிக்க சரித்தரத்தின் அழிக்க முடியாத சக்தியாக இவன் உருவெடுக்க போகிறான் என்று.அவர் தான்...

"நீ நினைக்கிறாய் உன்னால் முடியும், நீ நினைக்கிறாய் உன்னால் முடியாது, இரண்டும் சாத்தியமே - உன் எண்ணங்கள் உன் வெற்றிக்கு உந்து சக்தி," என்று கூறியவர்.

அவருக்கு பிசினஸ் என்றால் என்னவென்று தெரியாது, ஆனால் தன்னால் அவற்றைக் கற்று கொள்ள முடியும் என்று தெரியும்.

அவருடன் படித்த இளைஞர்கள் கை நிறைய சம்பாதித்தபோது, அவரால் சம்பாதிக்க முடியவில்லை. ஆனால் ஒரு நாள் அவர்களை வேலைக்கு அமர்த்தும் அளவுக்கு, தன்னால் பணம் சம்பாதிக்க முடியும் என்ற நம்பிக்கை அவரிடம் இருந்தது.

அவர் தான் Ford கம்பெனியை நிறுவிய ஹென்றி போர்ட்




உலகில் மிக குறைந்த விலையுடைய காரை எல்லோரும் பயன்படுத்தும் வண்ணம் நான் தயாரிக்கிறேன் என்று சொல்லி, 1903 ஆம் ஆண்டு மாடல் டீ19 காரை வெறும் 280 டாலருக்கு விற்றார்.

உலகமே வியந்தது. அதன் விற்பனை எவ்வளவு தெரியுமா?

ஒரு கோடியே ஐம்பைதைந்து லட்சம்!

வெறும் அமெரிக்காவில் மட்டுமே இந்த விற்பனை சதவீதம் என்றால் பார்த்து கொள்ளுங்கள்.

அவர் வாழ்க்கையில் இருந்து நாம் கற்க வேண்டிய 5 முக்கிய விஷயங்கள் இதுவே...

1. என்னால் முடியும்... என்னால் முடியும்...
2. யார் என்னை ஏசினாலும் என்னுடைய முயற்சியில் இருந்து நான் பின் வாங்க மாட்டேன்.
3. தோல்வியை நான் பாடமாக மட்டுமே கருதுகிறேன். அனைவரின் சிறந்த கருத்துக்களை நான் பொறுமையாக கேட்கிறேன். அவற்றில் சிறந்தனவற்றை மட்டுமே எடுத்து கொள்கிறேன்.
4. தோற்றவுடன் விட்டுவிடாதீர்கள் இன்னும் வெறியுடன் வெற்றி கிடைக்கும் என்று போராடுங்கள்.
5. ஒரு சிறந்த நிறுவனத்தை நடத்த முக்கிய தேவை - தற்போதைய உலகின் தேவை என்ன என்பதை கண்டறிய வேண்டும். அதற்கானதாக இருக்க வேண்டும் நம் அடுத்த தயாரிப்பு!

நம்மால் முடியும்... நம்மால் முடியும்... மற்றவை, நம் காதில் விழாது விழக்கூடாது!

-    மு. சரவணன் , எம்.சி.ஏ

=============================================================================================