இங்கிலாந்து நாட்டின் லண்டன் நகரில் வீடுகளுக்கு குழாய் மூலம் குடிநீர் சப்ளை
செய்யப்படுகிறது. இது தவிர பாட்டில்களில் அடைத்தும் விற்பனை செய்யப்படுகிறது.
அங்கு பொதுமக்கள் பாட்டில் தண்ணீரையே விரும்புகிறார்கள்.
இதில் எது சிறந்தது என்பது பற்றி லண்டன் கிளாஸ்கோ பல்கலைக்கழக பேராசிரியர்
பால் யங்கர் தலைமையிலான குழு ஆய்வு நடத்தி முடிவுகள் வெளியிட்டுள்ளது. அதன் விவரம்
வருமாறு:-
குழாய்களில் வரும் தண்ணீரை விட பாட்டில்களில் அடைக்கப்பட்டு விற்பனை யாகும்
தண்ணீர்தான் பாதுகாப்பானது என்று பலரும் நம்பிக்கொண்டு இருக்கிறார்கள். ஆனால்
பாட்டில் தண்ணீரை விட குழாய் தண்ணீரே சிறந்தது.
குழாய் தண்ணீரில் தொற்று பரவாமல் இருக்க குளோரின் கலக்கப்படுகிறது. ஆனால்
மினரல் வாட்டர் எனப்படும் பாட்டில் தண்ணீரில் அது இல்லை. பாட்டில் தண்ணீரை மூடியை
திறந்தவுடன் சில மணி நேரத்துக்குள் குடித்துவிட வேண்டும். இல்லையெனில்
நோய்த்தொற்று பரவ வாய்ப்பு இருக்கிறது.
ஒரே பாட்டில் தண்ணீரை பலர் பயன்படுத்தும்மோது அவர்களது கை, முகத்தில் இருந்து பாக்டீரியாக்கள் பரவும்.
மேலும் தண்ணீர் பாட்டில்கள் தயாரிக்கப்பட்டவுடன் விற்பனைக்கு வருவது இல்லை. சில
மாதங்கள் வரை தொழிற்சாலைகளிலும், விற்பனை
நிலையங்களிலும் இருப்பு வைக்கப்படுகிறது.
ஆனால் குழாய் தண்ணீர் அப்படி இல்லை. உடனுக்குடன் பயன்பாட்டிற்கு வந்து
விடுகிறது. இதுவே பாதுகாப்பானது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
லண்டனில் கடந்த ஆண்டு பல்வேறு இடங்களில் வீடுகளுக்கு விநியோகிக்கப்பட்ட 40
லட்சம் லிட்டர் குழாய்
தண்ணீரை பரிசோதித்துப்பார்த்தபோது அவை 99.96 சதவீதம் தரம் உறுதி செய்யப்பட்டதாக லண்டன்
குடிநீர் பாதுகாப்பு வாரியம் தெரிவித்துள்ளது.
ஆனால் இங்கு ....!!!
நன்றி : http://www.maalaimalar.com/2013/01/03124415/pipe-water-best-with-bottle-wa.html
No comments:
Post a Comment