1.
குறிஞ்சித் திணை
முதற்பொருள்
நிலம் - மலையும் மலையைச் சார்ந்த
இடமும்
பொழுது -
அ) பெரும்பொழுது - கூதிர்காலமும்,
முன்பனிக்காலமும்
ஆ) சிறு பொழுது - யாமம்
கருப்பொருள்கள்
1. தெய்வம் -
சேயோன்
2. உணவு - ஐவன நெல் (மலை நெல்), தினை, மூங்கிலரிசி, கிழங்கு
3. விலங்கு - புலி,
யானை, கரடி, பன்றி
4. மரம் - அகில்,
ஆரம், தேக்கு, வேங்கை
5. பறவை - கிளி,
மயில்
6. பறை - முருகியம்,
தொண்டகப் பறை
7. தொழில் -
தேனெடுத்தல், கிழங்கு அகழ்தல், தினை
விதைத்தல், வேட்டையாடுதல்
8. யாழ் - குறிஞ்சி
யாழ்
9. பண் -
குறிஞ்சிப் பண்
10. ஊர் - சிறுகுடி,
குறிச்சி
11. நீர் - அருவி
நீர், சுனை நீர்
12. மலர் - காந்தள்,
வேங்கை, குறிஞ்சி
உரிப்பொருள் : புணர்தலும் புணர்தல் நிமித்தமும் (நிமித்தம் = காரணம்)
2. முல்லைத் திணை
முதற்பொருள்
நிலம் - காடும் காட்டைச் சார்ந்த
இடமும்
பொழுது -
அ) பெரும்பொழுது : கார்காலம்
ஆ) சிறுபொழுது : மாலை
கருப்பொருள்கள்
1. தெய்வம் -
மாயோன்
2. உணவு - வரகு,
சாமை
3. விலங்கு - மான்,
முயல்
4. மரம் - தோன்றி,
காயா, பிடவம், குருந்தம்
5. பறவை -
காட்டுக்கோழி, சேவல்
6. பறை - ஏறுகோட்
பறை
7. தொழில் - ஆநிரை மேய்த்தல்,
ஏறு தழுவல்
8. யாழ் - முல்லை
யாழ்
9. பண் -
குறிஞ்சிப் பண்
10. ஊர் - பாடி,
சேரி
11. நீர் -
குறுஞ்சுனை, கான்யாறு
12. மலர் - முல்லை,
குல்லை, தோன்றி, பிடவம்
உரிப்பொருள் : இருத்தலும்
இருத்தல் நிமித்தமும்.
3. மருதத் திணை
முதற்பொருள்
நிலம் - வயலும் வயல்சார்ந்த இடமும்
பொழுது -
அ) பெரும்பொழுது - ஆண்டு முழுதும்
ஆ) சிறுபொழுது - வைகறை, விடியல்
கருப்பொருள்கள்
1. தெய்வம் -
இந்திரன் (வேந்தன்)
2. உணவு - செந்நெல்,
கரும்பு
3. விலங்கு - எருமை,
நீர்நாய்
4. மரம் - வஞ்சி,
காஞ்சி, மருதம்
5. பறவை - தாரா,
நீர்க்கோழி
6. பறை - மணமுழவு,
நெல்லரி கிணை
7. தொழில் -
விதைத்தல், விளைத்தல்
8. யாழ் - மருத
யாழ்
9. பண் - மருதப்
பண்
10. ஊர் - ஊர்கள்
11. நீர் -
ஆற்றுநீர், பொய்கை நீர்
12. மலர் - தாமரை,
கழுநீர்
உரிப்பொருள்
ஊடலும் ஊடல்
நிமித்தமும்.
4. நெய்தல் திணை
முதற்பொருள்
நிலம் - கடலும் கடல் சார்ந்த இடமும்
பொழுது -
அ) பெரும்பொழுது - ஆண்டு முழுதும்
ஆ) சிறுபொழுது – எற்பாடு
கருப்பொருள்கள்
1. தெய்வம் -
வருணன்
2. உணவு - மீன்,
உப்பு
3. விலங்கு -
உமண்பகடு (உப்பு வாணிகனின் மூட்டை சுமக்கும்
எருது), சுறா
4. மரம் - புன்னை,
ஞாழல், கண்டல்
5. பறவை - அன்றில்,
அன்னம்
6. பறை - மீன்கோட்
பறை
7. தொழில் - மீன் பிடித்தல், மீன் உலர்த்தல், உப்பு, விளைவித்தல், நாவாய் ஓட்டல்
8. யாழ் - நெய்தல்
யாழ்
9. பண் - நெய்தல்
பண்
10. ஊர் - பட்டினம்,
பாக்கம்
11. நீர் - உவர்க்குழி
(ஊற்றுநீர்), மணற்கிணறு
12. மலர் - நெய்தல்,
கைதை (தாழை)
உரிப்பொருள்
இரங்கலும்
இரங்கல் நிமித்தமும்
5.பாலைத் திணை
முதற்பொருள்
நிலம் - பாலை நிலம்
பொழுது -
அ) பெரும்பொழுது - வேனிற் காலம்,
பின்பனிக் காலம்
ஆ) சிறுபொழுது - நண்பகல்
கருப்பொருள்கள்
1. தெய்வம் -
கொற்றவை
2. உணவு - வழிப்போக்கரிடம் திருடிய உணவு
3. விலங்கு - யானை,
புலி, செந்நாய்
4. மரம் - இருப்பை,
உழிஞை
5. பறவை - கழுகு,
பருந்து, புறா
6. பறை - சூறை கோட்
பறை
7. தொழில் -
வழிப்பறி, சூறையாடல்
8. யாழ் - பாலை
யாழ்
9. பண் - பாலைப்
பண்
10. ஊர் - பறந்தலை
11. நீர் - கூவல்
(கிணறு, குழி)
12. மலர் - மரா,
குரா
உரிப்பொருள்
பிரிதலும் பிரிதல் நிமித்தமும்.
இவ்வாறு வரும்
திணைக் கருப்பொருள்கள் தத்தம் திணையில் இடம்பெறுவதுடன் பிற திணையிலும் இடம்
பெறுவதுண்டு.அதற்குத் திணை மயக்கம் என்று பெயர்.
1 comment:
Thank You Bro. It will very Useful for Every one.
Post a Comment