WEL COME...Tamilnet Live...தமிழ்நெட் லைவ் ..வருக வருக ...

Select Your Language

கண்முன் கொண்டு வரும் கூகுள் கிளாஸ்


கூகுள் கிளாஸ் - தொழில்நுட்ப உலகில் இன்று பரபரப்பாக பேசப்படும் 
கண்ணாடி. இது மூக்கு கண்ணாடி அல்ல. கண்ணாடி போன்று அணிந்து கொள்ளக்கூடிய கம்ப்யூட்டர். இதை கூகுள் நிறுவனம் தயாரித்து, இந்தாண்டு துவக்கத்தில் அறிமுகப்படுத்தியது. மொபைல் தொழில்நுட்பத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் சென்றுள்ளது. இதை பயன்படுத்தி சென்னை டாக்டர் ராஜ்குமார் செய்த "ஆபரேஷன்' நேரடியாக, உலகம் முழுவதும் நேரடியாக ஒளிபரப்பப்பட்டு, பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்த கண்ணாடியால் இது எப்படி சாத்தியம்:

* இதில் வை-பை, புளூடூத், டச் ஸ்கிரீன், இன்டர்நெட் வசதிகள் உள்ளன.

* வீடியோ எடுக்கலாம், போட்டோ எடுக்கலாம். இவ்வாறு எடுக்கப்படும் படங்கள், வீடியோக்கள், அக்கண்ணாடியில் உள்ள "மெமரி கார்டில்' சேமிக்கப்படும். இதை சமூக வலைதளங்கள் மற்றும் இ-மெயில் ஆகியவற்றுடன் "ஷேர்' செய்து கொள்ளலாம்.

* உங்களுக்கு வரும் இ-மெயில்களை இக்கண்ணாடி காண்பிக்கும். இதற்கு வாய்மொழி மூலம் பதிலளித்தால், அது எழுத்துகளாக மாறிவிடும்.

* ஏதாவது சந்தேகம் ஏற்பட்டு, கண்ணாடியிடம் கேட்டால், உடனே பதில் தந்து விடும். உதாரணமாக தாஜ்மகால் பற்றிய சில படங்கள் வேணடும் எனக் கேட்டால், இன்டர்நெட்டில் தேடி, அதற்குரிய தகவல்களை உடனே நமது கண் முன்னே, கண்ணாடியின் சிறிய ஸ்கிரீனில் காண்பிக்கும்.

* பயணிக்கும் போது, செல்லும் பகுதிக்கு வழி கேட்டால், "மேப்' ஸ்கிரீனில் காண்பிக்கும்.

* உலகில் எங்கு சென்றாலும் அங்கு நாம் காண்பதை, உடனே நேரடியாக, நமக்கு வேண்டியவர்களுக்கு காண்பிக்கலாம் (ஒளிபரப்பலாம்).

* இதில் உள்ள தொழில்நுட்பம், அன்றாட பழக்க வழக்கங்களை கவனிக்கிறது. உதாரணத்துக்கு அலுவலகம் செல்லும் நேரம், செல்லும் வழி, காலநிலை போன்றவற்றை தெரிவிக்கிறது.

* எல்லாவற்றுக்கும் மேலாக, வெளிநாடு செல்லும் போது, அந்நாட்டு மொழியை நமது மொழிக்கு மாற்றியும் தருகிறது. இதன் விலை, 95 ஆயிரம் ரூபாய் மட்டுமே ..!

நன்றி : தினமலர்