தனிநபர் பெர்சனல் கம்ப்யூட்டர்கள் சிறிய ஊர்களில் விற்பனை செய்யப்படுகையில், விண்டோஸ் நகலெடுத்துப் பதிந்து விற்பனை செய்வதால், விண்டோஸ் லைசன்ஸ் என்றால், அது உண்மையா? என்று கேட்கும் அளவிற்குப் போய்விட்டது. இதற்கான சரியான விளக்கத்தைத் தருகிறேன்.
கம்ப்யூட்டர்களில் இயங்கும் விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை மைக்ரோசாப்ட் நிறுவனம் தயாரித்து விற்பனை செய்து வருகிறது. இதனைக் கட்டணம் செலுத்தி வாங்கி, இன்ஸ்டால் செய்து பயன்படுத்த வேண்டும். இல்லை எனில், ட்ரெயினில் டிக்கட் இல்லாமல் செல்வது போல ஆகிவிடும். டி.டி.ஆர். பிடித்தால், தண்டனை அல்லது அபராதம் உண்டு. லைசன்ஸ் ஒப்பந்தம் என்பது உங்களுக்கும் மைக்ரோசாப்ட் கார்ப்பரேசனுக்கும் ஏற்படுத்தப்படும் காண்ட்ராக்ட். நீங்களே ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் சில்லரை விற்பனையாளரிடம் வாங்கினால், இந்த வகையில் காண்ட்ராக்ட் மற்றும் லைசன்ஸ் தரப்படும். அல்லது கம்ப்யூட்டரைத் தயாரித்து வழங்கும் நிறுவனம், இதற்கான ஒப்பந்தத்தினை, மைக்ரோசாப்ட் நிறுவனத்திடம் மேற்கொண்டு, உங்கள் கம்ப்யூட்டரில் சிஸ்டத்தினைப் பதிந்து கொடுக்கும். அப்போது
Certificate of Authenticity (COA) எனப்படும், உரிமத்திற்கான சான்றிதழ் வழங்கப்படும். கம்ப்யூட்டரின் சிபியுவில் இது ஒட்டித் தரப்படும். கம்ப்யூட்டருக்கான பில்லிலும் இது சில வேளைகளில் காட்டப்படும். கட்டணம் பெற்றுக் கொண்டு நீங்களாக வாங்கும் விண்டோஸ் பதிப்பிற்கு ஒரு ப்ராடக்ட் கீ வழங்கப்படும். அதனைப் பயன்படுத்தியே நீங்கள் விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை பதிய முடியும்.
பின்னர், நீங்கள் கம்ப்யூட்டரை இயக்கி இணையத்தில் செல்கையில், கம்ப்யூட்டரில் உள்ள ஆப்பரேட்டிங் சிஸ்டம் தானாகவே, மைக்ரோசாப்ட் தளத்தினை, அப்டேட் பைல்களுக்காகவும், உங்கள் கம்ப்யூட்டரில் இருக்கும் விண்டோஸ் சிஸ்டம் கட்டணம் செலுத்திப் பெற்ற உண்மையானதுதானா என்ற சோதனையை நடத்துவதற்காகவும் அணுகும். அப்போது உண்மை நிலையை அது கண்டறியும். எந்த அப்டேட் பைல்களும் இறங்காது.
""உங்கள் சிஸ்டம் உண்மையானது அல்ல; பக்கத்திலிருக்கும் விண்டோஸ் டீலரிடம் இதற்கான கட்டணத்தைச் செலுத்தவும்'' என கேட்டுக்கொள்ளும். விண்டோஸ் சிஸ்டம் இயங்குவது கட்டுப்படுத்தப்படும்.
சட்டவிதிமுறைகளின் படி, விற்பனை செய்யப்படும் எந்த சாப்ட்வேர் தொகுப்பினையும் முறையான உரிமம் இல்லாமல் பயன்படுத்துவது குற்றமாகும். ஒரு நிறுவனத்தினர், கம்ப்யூட்டரைப் பயன்படுத்து பவரிடம் இந்த சோதனையை நடத்தி, தவறு இருப்பதாகத் தெரிந்தால், காவல்துறையின் உதவியுடன், பயன்படுத்துவோரைக் கைது செய்து, நீதிமன்றத்தில் வழக்கு தொடரலாம்.
மற்றவர்களின் உழைப்பைத் திருடிப் பயன் அடைவது குற்றம்; பெரிய பாவம். எனவே கட்டணம் செலுத்திப் பெறுவதே நல்லது. விண்டோஸ் சிஸ்டத்தினை புதுப்பிக்க வேண்டி யதில்லை. அடுத்த பதிப்பிற்கு மாற எண்ணம் இருப்பின், அதற்கான கட்டணத்தை செலுத்தி அப்டேட் செய்து கொள்ளலாம்.
நன்றி : (தினமலர் )
No comments:
Post a Comment