WEL COME...Tamilnet Live...தமிழ்நெட் லைவ் ..வருக வருக ...

Select Your Language

விண்ணப்பிக்க வேண்டிய நேரம் இது -அக்டோபர் 2012



  • அக்டோபர் மாதத்தில் நடைபெறவுள்ள தேர்வுகள், நுழைவுத்தேர்வுகள், விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதிகள் ஆகியவற்றை காட்டும் காலண்டர் இது. தனியே எடுத்து பத்திரப்படுத்துங்கள்.


  • மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் இந்தியன் எகனாமிக்ஸ் மற்றும் இந்தியன் ஸ்டாட்டிஸ்டிக்கல் சர்வீஸ் தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி: அக்டோபர் 1.


  • ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கான மறுதேர்வு நடைபெறும் தேதி: அக்டோபர் 3.


  • பல்கலைக்கழக அளவில் முதுநிலை பட்டதாரி மாணவர்களில் முதலிடம் பெற்றவர்களுக்கு பல்கலைக்கழக  மானியக் குழு வழங்கும் உதவித்தொகை பெற விண்ணப்பிக்க கடைசி தேதி: அக்டோபர் 3.


  • சிவில் சர்வீஸ் மெயின் தேர்வு தொடங்கும் நாள்: அக்டோபர் 5.


  • கோவை பாரதியார் பல்கலைக்கழகம் நடத்தும் மாநில அளவிலான கல்லூரி விரிவுரையாளர் தகுதித் தேர்வு (SET) நடைபெறும் தேதி: அக்டோபர் 7.


  • தமிழ்நாடு அக்ரிகல்ச்சுரல் என்ஜினீயரிங் துறையில் அசிஸ்டெண்ட் ஜியாலஜிஸ்ட் பணியை நிரப்புவதற்காக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வு எழுத விண்ணப்பிக்க கடைசி தேதி: அக்டோபர் 8.


  • லக்னோவில் உள்ள சி.எஸ்..ஆர். - சென்ட்ரல் டிரக் ரிசர்ச் இன்ஸ்டிட்யூட்டில் பிஎச்.டி. படிக்க ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க கடைசி தேதி: அக்டோபர் 8.


  • இந்திய ராணுவத்தின் ஜட்ஜ் அட்வகேட் ஜெனரல் டிபார்ட்மெண்டில் பணிபுரிவதற்காக சட்டம் படித்த ஆண் மற்றும் பெண்கள் விண்ணப்பிக்கக் கடைசி தேதி: அக்டோபர் 12.


  • கொல்கத்தாவிலுள்ள தி ஆர்மி இன்ஸ்டிட்யூட் ஆஃப் மேனேஜ்மெண்ட் மற்றும் கிரேட்டர் நொடாவிலுள்ள தி ஆர்மி இன்ஸ்டிட்யூட் ஆஃப் மேனேஜ்மெண்ட் அண்ட் டெக்னாலஜியில் எம்.பி.. படிக்க விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படும் நாள்: அக்டோபர் 15.


  • என்.பி.சி..எல். நிறுவனத்தில் ஃபயர்மேன் பணிக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி: அக்டோபர் 16.


  • மேனேஜ்மெண்ட் பொது நுழைவுத் தேர்வு (CMAT) முடிவுகள் வெளியிடப்படும் தேதி: அக்டோபர் 17.


  • மத்திய அரசின் நீர் வளத்துறை அமைச்சகம் தேசிய அளவில் நடத்தும் பள்ளி மாணவர்களுக்கான தேசிய அளவிலான ஓவியப் போட்டிக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி: அக்டோபர் 19.


  • மத்திய அரசின் சமூக நலம் மற்றும் அதிகாரமளித்தல் துறை சார்பில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் .பி.சி. மாணவர்களுக்கான இலவச பயிற்சி பெற விண்ணப்பிக்க கடைசி தேதி: அக்டோபர் 22.


  • தமிழ்நாடு கல்வி அறக்கட்டளை வழங்கும் கல்வி உதவித் தொகை பெற இளங்கலை, முதுநிலை, மருத்துவம், பொறியியல், பிஎச்.டி., தொழில்நுட்பப் பட்டப் படிப்பு படிக்கும் மாணவர்கள் விண்ணப்பிக்க கடைசி தேதி: அக்டோபர் 31.


  • ஹைதராபாத்திலுள்ள தி இங்கிலீஷ் அண்ட் பாரின் லேங்குவேஜஸ் பல்கலைக்கழகத்தின் தொலைநிலைக் கல்வித் திட்டத்தின்கீழ் எம்.. ஆங்கிலம் மற்றும் ஆங்கிலம் பயிற்றுவித்தலில் முதுநிலை டிப்ளமோ படிக்க விண்ணப்பங்களை அனுப்பக் கடைசி தேதி: அக்டோபர் 31.


  • ஒரு பெண் குழந்தை உள்ளோருக்கான சி.பி.எஸ்.. மெரிட் ஸ்காலர்ஷிப் பெற விண்ணப்பிக்க கடைசி தேதி: அக்டோபர் 31.


  • நேஷனல் இன்ஸ்டிட்யூட் ஆஃப் எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி நடத்தும் எழுத்துத் தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி: அக்டோபர் 31. 
  நன்றி : புதியதலைமுறை கல்வி 

No comments: