இதென்ன
நியாயம்...:
ஏழாவதாக
சமையல் கேஸ் கேட்டால் தொலைச்சப்புடுவோம்,தொலைச்சு என்று சொல்லாத குறையாக
மத்திய அரசு மிரட்டு,மிரட்டென்று
மிரட்டிவருகிறது.அப்படி மீறி கேட்டால்
மூணு மடங்கு விலை கொடுக்குணுமாக்கும்
என்று வேறு சொல்லிவருகிறது. சாதாரண,சாமானிய மக்கள் ஒரு
மாதத்திற்கு ஒரு கேஸ் சிலிண்டர்
கூடவா உபயோகிக்காமலா இருப்பார்கள்,என்ன கொடுமை இது?
மக்களை இந்த மிரட்டு மிரட்டும்
மத்திய அரசில் அங்கம் வகிக்கும்
அதிகாரவர்கத்தினர்,அரசியல்வாதிகள் எந்த அளவிற்கு கேஸ்
சிலிண்டர் உபயோகிக்கிறார்கள் என்று ஒரு பட்டியல்
கோவையில் ஒட்டப்பட்டு உள்ளது.
குடியரசு
துணைத்தலைவர் ஹமீது அன்சாரி வீட்டில்
ஒரு கிராமமே இருக்கும் போலும்,ஜனவரி 1 முதல் மே31
வரை அதவாது ஐந்து மாத
காலத்திற்கு மட்டும் 171 சிலிண்டர்கள் உபயோகித்து உள்ளனர். முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா சிறையில் இருக்கும்
போது அவரது வீட்டினர் வீட்டில்
அடுப்பு கூட பற்றவைக்கமுடியாத சோகத்தில்
இருந்திருப்பார்களோ என்று யாரும் எண்ணிவிடாதீர்கள்,
அவர்கள் வீட்டிலும் இந்த ஐந்து மாத
காலத்திற்கு மட்டும் 89 சிலிண்டர்கள் உபயோகித்து உள்ளனர். இது எந்த விதத்தில்
நியாயம் என்பதுதான் புரியவில்லை.
இந்த
பட்டியலை பார்க்கும் போது அனைவருமே சராசரியாக
எந்த குறையும் இல்லாமல் மாதத்திற்கு பத்து சிலிண்டருக்கு குறைவில்லாமல்
உபயோகித்துள்ளனர்.இவர்களிடம் எல்லாம் கேஸ் நிறுவனம்
இனி ஏழாவது சிலிண்டருக்கு கூடுதலாக
பணம் கேட்டு வாங்கப்போகிறதா என்ன?வீட்டு வாடகையையும்,டெலிபோன்
செலவையுமே கொடுக்காதவர்கள் இதை கொடுத்துவிட்டுதான் மறுவேலை
பார்ப்பார்கள் என்று எண்ணுவது சுத்த
மடத்தனம். தலையில் மிளகாய் அரைக்க
கிடைத்தவர்கள் மாட்சிமை தாங்கிய மகாஜனங்களாகிய நாம்தான்
.முடிந்தால் பாருங்கள், இல்லையேல் இயற்கை உணவிற்கு பழகிற்கு
கொள்ளுங்கள்.,அதுவும் முடியாவிட்டால் சுள்ளி
பொறுக்க பழகிக்கொள்வோம்.
படம்:கோவை சிவா
நன்றி : http://www.dinamalar.com/photogallery_detail.asp?id=833&nid=5464&cat=Album
படம்:கோவை சிவா
நன்றி : http://www.dinamalar.com/photogallery_detail.asp?id=833&nid=5464&cat=Album
No comments:
Post a Comment