WEL COME...Tamilnet Live...தமிழ்நெட் லைவ் ..வருக வருக ...

Select Your Language

எந்தவொரு மென்பொருளின் உதவியும் இல்லாமல் இரகசிய தகவல்களை பாதுகாக்க

கணணியில் உங்களது இரகசிய தகவல்களை மறைத்து வைப்பதற்கு ஏதேனும் ஒரு மென்பொருளை பயன்படுத்துவீர்கள். அந்த மென்பொருளில் ஏதேனும் பிரச்னை வந்தால், உங்களது இரகசிய தகவல்களை மீளப்பெறுவது சிரமம்தான். இதற்கு தீர்வாக எந்தவொரு மென்பொருளின் உதவியும் இல்லாமல், உங்களுடைய தகவல்களை எவ்வாறு மறைக்கலாம் என்று இந்த பதிவில் பார்க்கப்போகின்றோம்.

இதற்கு முதலில்


Start => Run => cmd 


என்ற படிமுறையில் சென்று command Prompt ஐ ஓபன் செய்யவும். இதில்


C:Documents and Settings


இதற்கு அடுத்து D: என்று Type செய்யுங்கள். (எந்த Drive க்குள் நீங்கள் Folder வைத்து உள்ளீர்களோ அந்த லெட்டர் கொடுக்கவும். Ex: E:, F:, G:, etc) இப்போது அடுத்த வரியில் நீங்கள் தெரிவு செய்த டிரைவ் வந்து இருக்கும்.


இப்போது

D:/>attrib +h +s Folder Name (Your Folder Name). 

அவ்வளவு தான் உங்களது கோப்பறை இனிமேல் மறைத்து வைக்கப்படும். தற்போது உங்களது கோப்பறையை மீண்டும் தெரிய வைக்க,


D:/>attrib -h -s Folder Name 

கொடுத்தால் போதும். இந்த முறையில் C டிரைவில் உள்ள கோப்புகளை மட்டும் மறைத்து வைக்க இயலாது.


இந்த பதிவில் ஏதேனும் பிழை அல்லது உங்களுக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் Comment மூலம் தெரியப்படுத்தவும். 


எமது பயனுள்ள பதிவுகளை மின்னஞ்சல் மூலம் பெற்றுக்கொள்ள கீழே உள்ள பெட்டியினுள் உங்களுடைய மின்னஞ்சல் முகவரியை கொடுத்து Subscribe என்பதை click செய்யவும். 

நன்றி : http://palathum10m.blogspot.in

No comments: