ஆழியாறில் கேரளத்துக்கு 1.25 டி.எம்.சி. தண்ணீர் வழங்க ஒப்புதல்!!
வரும் டிசம்பர் 15ம் தேதிக்குள் ஆழியாறு மணக்கடவு தடுப்பணையில்
இருந்து கேரளத்துக்கு 1.25 டி.எம்.சி.
தண்ணீர் வழங்க தமிழகம் ஒப்புக் கொண்டுள்ளது.
தமிழக, கேரள அதிகாரிகளுக்கு இடையிலான நதி நீர் இணை
நிர்வாகப் பங்கீட்டுக் குழுக் கூட்டம் கோவை பொதுப்பணித்துறை அலுவலகத்தில் நடந்தது.
இதில், கோவை பொதுப்பணித் துறை தலைமைப் பொறியாளர்
கே.ரங்கநாதன், மின்வாரிய
கண்காணிப்புப் பொறியாளர் கிருஷ்ணமூர்த்தி, கேரள நீர்ப் பாசனத்துறை தலைமைப் பொறியாளர்
லத்திகா, கேரள மின்வாரிய
தலைமைப் பொறியாளர் விஸ்வநாதன் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட பொறியாளர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
பரம்பிக்குளம்- ஆழியாறு பாசனத்திட்ட
ஒப்பந்தப்படி ஆழியாறு அணையில் இருந்து மணக்கடவு தடுப்பணை மூலம் ஆண்டுக்கு 7.25 டி.எம்.சி. தண்ணீரும், தமிழக சோலையாறு அணையில் இருந்து ஆண்டுக்கு 12.3 டி.எம்.சி. தண்ணீரும் கேரளத்துக்கு வழங்க
வேண்டும்.
2011-12ம் ஆண்டில் ஒப்பந்தப்படி தமிழகத்தில் இருந்து
கேரளத்துக்குத் தண்ணீர் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த ஆண்டு தென்மேற்குப் பருவ
மழை பொய்த்து விட்டதால் தமிழகப் பகுதிகளில் வறட்சி நிலவுகிறது.
இருந்தாலும் ஒப்பந்தப்படி கேரளத்துக்கு வரும்
டிசம்பர் 15ம் தேதிக்குள் 1.25 டி.எம்.சி. தண்ணீரை வழங்க தமிழகம் ஒப்புக்
கொண்டுள்ளது.
தமிழகத்திடமிருந்து கர்நாடகமும், கேரளமும் பாடம் கற்க வேண்டியது அவசியம்!
No comments:
Post a Comment