WEL COME...Tamilnet Live...தமிழ்நெட் லைவ் ..வருக வருக ...

Select Your Language

பிலிப் காட்லர்


#‘மார்க்கெட்டிங் துறையின் தந்தைஎன்று அழைக்கப்படுபவர் பிலிப் காட்லர். இப்போது கெல்லாக்ஸ் ஸ்கூல் ஆஃப் மேனேஜ்மென்டில் சர்வதேச மார்க்கெட்ங் துறையின் பேராசியராக இருக்கிறார்.

#சிகாகோ பல்கலைக்கழகத்தில் பி.ஹெச்டி. முடித்தவர். சர்வதேச அளவில் 12 கௌரவ டாக்டர் பட்டங்களைப் பெற்றிருக்கிறார்.

#மார்க்கெட்டிங் துறையில் 50க்கும் மேற்பட்ட புத்தகங்களும், பல கட்டுரைகளும் எழுதி இருக்கிறார். மார்க்கெட்டிங் சம்பந்தமாக இவர் எழுதிய புத்தகத்தைதான் உலகம் முழுக்க நிர்வாகம் படிக்கும் மாணவர்கள் படிக்கிறார்கள்.

#ஹனிவெல், ஜி.இ., ஐ.பி.எம். பேங்க் ஆஃப் அமெரிக்கா, ஃபோர்டு, மோட்டரோலா உள்ளிட்ட பல நிறுவனங்களுக்கு ஆலோசகராக இருந்திருக்கிறார். மேலும் சில அரசு நிறுவனங்களுக்கும் ஆலோசகராக இருந்திருக்கிறார்.

#உலகம் முழுக்க இருக்கும் பிஸினஸ் சிந்தனையாளர்களில் முக்கியமானவர்.

#இவருடைய 75-வது பிறந்த நாளுக்கு இந்தோனேஷிய அரசாங்கம் தபால்தலை வெளியிட்டு க் கௌரவித்திருக்கிறது.


#‘கம்பெனிக்கு குறைந்த தலைவர்களும், தானாக முடிவெடுக்கும் மேனேஜர்களும் தான் தேவைஉள்ளிட்ட இவருடைய பல கருத்துகள் மிகவும் பிரபலம்.
நன்றி : தமிழ்.ஹிந்து நாளிதழ் 

விஜய் கோவிந்தராஜன்



#1969-ம் வருடம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பி.காம் படித்தவர். 72-ம் வருடம் நடந்த சி.ஏ. தேர்வில் இந்திய அளவில் முதல் இடம்பிடித்த மாணவர். பிறகு ஹார்வேர்டு பிஸினஸ் ஸ்கூலில் எம்.பி.ஏவும், முனைவர் பட்டமும் பெற்றார்.

#இப்போது டக் ஸ்கூல் ஆஃப் பிஸினஸில் சர்வதேச பிஸினஸ் துறையின் பேராசிரியராக இருக்கிறார். இதற்கு முன்பு ஹார்வேர்டு பிஸினஸ் ஸ்கூல் மற்றும் ஐ.ஐ.எம். ஆமதாபாதில் துணைப்பேராசிரியராக பணிபுரிந்தவர்.

#நிர்வாகத்துறையில் பல புத்தகங்களை எழுதி இருக்கிறார். குறிப்பாக இன்னோவேஷன்குறித்து இவர் எழுதிய புத்தகங்கள் எம்.பி.ஏ. படிக்கும் மாணவர்கள் மற்றும் தொழில் அதிபர்கள் மத்தியில் மிக பிரபலம்.

#முன்னணி பிஸினஸ் இதழ்களான ஹார்வேர்டு பிஸினஸ் ரிவ்யூ, பிஸினஸ் வீக் இதழ்களில் தொடர்ந்து கட்டுரை எழுதி வருகிறார்.

#உலகின் முக்கியமான சி.இ.ஓ.கள் பலரும் இவருடன் இணைந்து பணியாற்றி இருக்கிறார்கள். குறிப்பாக ஜி.இ. நிறுவனத்தில் முதன்மை இன்னோவேஷன் கன்சல்டன்டாக இருந்திருக்கிறார்.


#சர்வதேச அளவில் இருக்கும் நிர்வாகவியல் சிந்தனையாளர்களில் முக்கியமானவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி : தமிழ்.ஹிந்து நாளிதழ் 

பணிந்திரா சாமா


#பிர்லா இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலாஜியில் (பிட்ஸ்) எலெக்ட்ரிக்கல் என்ஜினீயரிங் படித்தவர்.

#டெக்சாஸ் இண்ஸ்ட்ருமெண்டல் நிறுவனத்தில் வேலை பார்த்தபோது, தீபாவளி விடுமுறைக்காக ஹைதராபாத் (பெங்களூரூவிலிருந்து) செல்வதற்கு டிக்கெட் கிடைக்காமல் தடுமாறினார். அப்போது உதித்த ஐடியாதான் ரெட்பஸ்.

#தனது இரு நண்பர்களுடன் சேர்ந்து ரெட்பஸ் (ஆன்லைனில் பஸ்டிக்கட் புக் செய்யும் நிறுவனம்) நிறுவனத்தை ஆரம்பித்தார். சாமா. இப்போது இந்த நிறுவனத்தின் சி.இ.ஓ. ஆவார்.

#இவரது நிறுவனம் ஆண்டுக்கு 600 கோடி ரூபாய் அளவுக்கு டிக்கெட் விற்பனை செய்கிறது. இதில் 80 சதவிகிதம் நேரடியாக மக்களாகவே புக் செய்கிறார்கள்.

#கம்ப்யூட்டர் மூலம் இணையத்தை பயன்படுத்துபவர்கள் குறைந்து, மொபைல் மூலம் இணையத்தை பயன்படுத்துபவர்கள் இப்போது அதிகரித்துள்ளார்கள். இவர்களுக்கு ஏற்றதுபோல சேவை கொடுப்பதுதான் இப்போது உள்ள சவால் என்று சொல்லி இருக்கிறார்.

#இவரது நிறுவனத்தை ஐபிஐபிஒ குழுமம் (ibiboGroup) வாங்கி இருக்கிறது. இருந்தாலும் இந்த இணைப்பு எங்களை பாதிக்காது என்று சொல்லி இருக்கிறார் சாமா. மேலும், கோககோலா நிறுவனத்தில் வாரன் பஃபெட்டுக்கு கணிசமான பங்கு இருக்கிறது. இதை வைத்து அவர் நிறுவனத்தில் அதிகாரம் செய்யவில்லை. அதுபோலதான் இங்கும் என்று சொல்லி இருக்கிறார்.


#இவரது நிறுவனம் ஒரு மாதத்துக்கு 10 லட்சம் டிக்கட்களை விற்கிறது.
நன்றி : தமிழ் ஹிந்து நாளிதழ் 

ஏழில் (7-ல்) அடங்கிய வாழ்க்கை தத்துவம்:-


நன்மை தரும் ஏழு

1)
ஏழ்மையிலும் நேர்மை
2)
கோபத்திலும் பொறுமை
3)
தோல்வியிலும் விடாமுயற்ச்சி
4)
வறுமையிலும் உதவிசெய்யும் மனம்
5)
துன்பத்திலும் துணிவு
6)
செல்வத்திலும் எளிமை
7)
பதவியிலும் பணிவு

வழிகாட்டும் ஏழு...

1) சிந்தித்து பேசவேண்டும்
2)
உண்மையே பேசவேண்டும்
3)
அன்பாக பேசவேண்டும்.
4)
மெதுவாக பேசவேண்டும்
5)
சமயம் அறிந்து பேசவேண்டும்
6)
இனிமையாக பேசவேண்டும்
7)
பேசாதிருக்க பழக வேண்டும்

நல்வாழ்வுக்கான ஏழு...

1) மகிழ்ச்சியாக இருக்க பழகுங்கள்
2)
பரிசுத்தமாக சிரிக்ககற்று கொள்ளுங்கள்
3)
பிறருக்கு உதவுங்கள்
4)
யாரையும் வெறுக்காதீர்கள்
5)
சுறுசுறுப்பாக இருங்கள்
6)
தினமும் உற்சாகமாக வரவேற்க தயாராகுங்கள்
7)
மகிழ்ச்சியாக இருக்க முயற்சி மேற்கொள்ளுங்கள்

கவனிக்க ஏழு...

1) கவனி உன் வார்த்தைகளை
2)
கவனி உன் செயல்களை
3)
கவனி உன் எண்ணங்களை
4)
கவனி உன் நடத்தையை
5)
கவனி உன் இதயத்தை
6)
கவனி உன் முதுகை
7)
கவனி உன் வாழ்க்கையை




 நன்றி :FB 

ஆனந்த் மஹிந்த்ரா




#ஹார்வேர்ட் பிஸினஸ் ஸ்கூலில் எம்பிஏ படித்தவர். 1981-ம் ஆண்டு மஹிந்த்ரா நிறுவனத்தில் நிதித்துறை இயக்குனரின் உதவியாளராகச் சேர்ந்தார்.

#1991-ல் நிறுவனத்தின் துணை நிர்வாக இயக்குனராக பொறுப்பேற்றார். 1997-ம் ஆண்டு நிர்வாக இயக்குனராக பொறுப்பேற்றுக்கொண்டார். 2012-ம் ஆண்டு முதல் நிறுவனத்தின் தலைவராகச் செயல்பட்டு வருகிறார்.

#2013-ம் ஆண்டின் சிறந்த தொழில்முனைவோருக்கான விருதினை இவருக்கு வழங்கி இருக்கிறது ஃபோர்ப்ஸ் இந்தியா பத்திரிகை. தொழிலதிபர்களுகாக மேலும் சில விருதுகளையும் இவர் வாங்கி இருக்கிறார்.

#கடந்த 10 வருடங்களில் நிறுவனத்தின் மதிப்பை 10 மடங்குக்கு மேல் உயர்த்தி இருக்கிறார்.

#ட்விட்டர் சமூகவலைதளத்தில் மட்டும் 9.5 லட்சம் பேர் இவரை பின் தொடர்கிறார்கள். சமூக வலைதளத்தை உலகளவில் அதிகம் பயன்படுத்தும் சி.இ.ஒ.க்களில் மூன்றாம் இடத்தில் இருக்கிறார்.

#"எப்போதெல்லாம் என் பிஸினஸ் வாழ்க்கையில் சந்தோஷம் இல்லாமல் இருக்கிறேனோ அப்போதெல்லாம், போதுமான அளவு நான் ரிஸ்க் எடுக்க வில்லை" என்று உணர்ந்தேன் என்று சமீபத்தில் இவர் கொடுத்த பிரபலமான ஸ்டேட்மென்ட்.
நன்றி : தமிழ் ஹிந்து நாளிதழ் 

வினிதா பாலி




#பிரிட்டானியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர். இப்போது இந்த நிறுவனத்தின் வெளிநாட்டு வியாபாரத்தில் மட்டுமே கவனம் செலுத்துகிறார்.

#டெல்லியில் இருக்கும் ஸ்ரீராம் கல்லூரியில் பொருளாதாரம் படித்தவர். ஐ.எஃப்.எஸ். முடிப்பதுதான் லட்சியமாக இருந்ததால், அதற்கு முதுநிலை பட்டம் தேவைப்பட்டது. அதனால் எம்.ஏ பொருளாதாரம் படிப்பதற்கான வேலைகளில் ஈடுபட்டார். அதே சமயத்தில் மும்பையில் இருக்கும் ஜம்னாலால் இன்ஸ்டிடியூட்டிலும் படிக்க வாய்ப்பு கிடைத்ததால் அங்கு சேர்ந்தார்.

#ஐ.எஃப்.எஸ். லட்சியத்தோடு இருந்தாலும், படிப்பு முடியும் முன்னரே வோல்டாஸ் நிறுவனத்தில் வேலை கிடைத்தது. அங்கு ரஸ்னா குளிர்பானத்தை அறிமுகப்படுத்தியது இவர்தான்.

#வோல்டாஸுக்குப் பிறகு கேட்பரி இந்தியா நிறுவனத்தில் சேர்ந்தார். அதன்பிறகு கோககோலா நிறுவனத்துக்கு மாறினார். கோககோலாவுக்காக பல நாடுகளில் வேலை பார்த்திருக்கிறார். 45க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு சென்று வந்திருக்கிறார்.

#2005-ம் ஆண்டு இந்தியாவுக்கு வந்து பிரிட்டானியா நிறுவனத்தில் சேர்ந்தார். மேலும் பிரமல் கிளாஸ், டைட்டன் உள்ளிட்ட நிறுவனங்களில் இயக்குனர் குழுவிலும் இருக்கிறார்.


#2011-ம் ஆண்டு ஆசியாவின் சக்திவாய்ந்த பெண் பிஸினஸ் தலைவர்கள் என்ற பட்டியலை போர்ஃப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டது. இந்த பட்டியலில் வினிதாவும் இருக்கிறார்.
நன்றி : தமிழ் ஹிந்து நாளிதழ் 

ஜெஃப்ரி பிஜோஸ்



#ஒரு நீண்ட பயணம் செல்லும்போது, தன்னுடைய நிறுவனத்துக்கான ஐடியா இவருக்கு உதயமானது. 1994-ம் ஆண்டு தன்னுடைய கரேஜில் அமேஸான் நிறுவனத்தை ஆரம்பித்தார்.

#ஆரம்பத்தில் புத்தகங்களை மட்டுமே விற்றுவந்த இந்த நிறுவனம் இப்போது எலெக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர், வாட்ச்கள் உள்ளிட்ட பல பொருள்களையும் விற்றுவருகிறார்கள். எலெக்ட்ரானிக் புத்தகங்களை விற்பதற்கு கிண்டி”-லை அறிமுகப்படுத்தி இருக்கிறார்.

#இதுவரை பிஸினஸ் டு கஸ்டமர் விற்பனை செய்துவந்த இந்த நிறுவனம் இப்போது கிளவுட் கம்யூட்டிங் உள்ளிட்ட பிஸினஸ் டு பிஸினஸ் சேவைகளையும் செய்கிறது.

#ஆன்லைன் வணிக நிறுவனங்களின் முன்னோடி. இவரின் சொத்து மதிப்பு. ஃபோர்ப்ஸ் நிறுவனத்தின் அறிக்கைபடி 27.2 பில்லியன் டாலர்கள்.

#100 வருடங்களுக்கு மேல் செயல்பட்டு வந்த வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகையை வாங்கி இருக்கிறார்.


#எகானாமிஸ்ட், ஃபார்சூன், டைம், ஹார்வேர்ட் பிஸினஸ் ரிவ்யூ உள்ளிட்ட அமெரிக்காவின் முக்கிய பத்திரிகைகள் அனைத்தும் எதாவது ஒரு வகையில் இவரைக் கௌரவித்திருக்கின்றன.
நன்றி : தமிழ் ஹிந்து நாளிதழ்

வி.ஜி. சித்தார்த்தா



#காஃபி விற்பனையில் ஈடுபட்டிருக்கும் இந்தியாவின் மிக முக்கிய நிறுவனமான கஃபே காஃபி டேயின் நிறுவனர். இவரது குடும்பம் 130 வருடங்களாக காஃபி விவசாயத்தில் ஈடுபட்டுள்ளது.

#கர்நாடக முன்னாள் முதல்வரான எஸ்.எம்.கிருஷ்ணாவின் மாப்பிள்ளை.

#பெங்களூரைச் சேர்ந்த இவர் படித்து முடித்தவுடன் மும்பையில் இருக்கும் ஜே.எம். நிறுவனத்தில் இரண்டு வருடம் வேலைபார்த்தார்.

#பங்குச்சந்தை தரகு நிறுவனமான வே டு வெல்த் நிறுவனமும் இவருடையதுதான்.

#இந்தியா முழுக்க 1,500 க்கு மேற்பட்ட காஃபி டே கடைகள் உள்ளன. மேலும் காஃபி ஏற்றுமதியிலும் இவரது நிறுவனம் ஈடுபட்டுள்ளது.

#பெங்களூரில் இருக்கும் ஐ.டி. நிறுவனமான மைண்ட்ட்ரீயிலும் இவருக்குக் கணிசமான பங்குகள் உள்ளன..

#ஸ்டார் பக்ஸ் உள்ளிட்ட பெரிய நிறுவனங்களின் போட்டியைச் சமாளிக்க மைண்ட்ட்ரீ-யில் 1.5 சதவிகித பங்குகளை விற்றுவிட்டு காஃபி வியாபாரத்தை விரிவுபடுத்த உள்ளதாகத் தெரிகிறது.

நன்றி : தமிழ் ஹிந்து நாளிதழ் 

எஸ்.ராமதுரை



#பொறியியல் படித்துவிட்டு 1969-ம் ஆண்டு டி.சி.எஸ். நிறுவனத்தில் சேர்ந்தார். பல படிகளைத் தாண்டி இந்த நிறுவனத்தின் சி.இ.ஓ.வாக 1996-ம் ஆண்டு முதல் 2009-ம் ஆண்டு வரை இருந்தார்.

#இப்போது டி.சி.எஸ். நிறுவனத்தின் துணைத்தலைவராக இருக்கும் இவர், டாடா குழுமத்தில் டாடா எலெக்ஸி உள்ளிட்ட சில நிறுவனங்களுக்குத் தலைவராகவும், சில நிறுவனங்களில் இயக்குநர் குழுவிலும் இருக்கிறார்.

#தவிர, பாம்மே ஸ்டாக் எக்ஸேஞ்ச், ஹிந்துஸ்ஹான் யுனிலிவர் உள்ளிட்ட நிறுவன ங்களின் இயக்குநர் குழுவிலும் இருக்கிறார். மேலும் சமீபத்தில் அமைக்கப்பட்ட ஏர் ஏசியா விமான நிறுவனத்துக்கும் இவர்தான் தலைவர்.

#இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம பூஷண் விருதைப் பெற்றவர்.

#டி.சி.எஸ். நிறுவனத்தின் வளர்ச்சி பற்றிய புத்தகம் ஒன்றை எழுதி இருக்கிறார்.


#இப்போது மத்திய அரசின் தேசிய திறன் வளர்ப்பு குழுவுக்கு ஆலோசகராக இருக்கிறார்.

நன்றி : தமிழ் ஹிந்து நாளிதழ் 

கார்லோஸ் ஸ்லிம்




#ஃபோர்ப்ஸ் பத்திரிகை அறிக்கையின்படி உலகின் முதலாவது பணக்காரர் இவர்தான். இவருக்கு பிறகுதான் பில் கேட்ஸ் வாரன் பஃபெட் போன்றவர்கள் வருகிறார்கள். இவரின் சொத்துமதிப்பு 73 பில்லியன் டாலர்கள்.

#யார் மெக்ஸிகோவில் இருந்தாலும், இவரது நிறுவனத்துக்கு எதாவது ஒரு வகையில் வாடிக்கையாளர்களாக இருப்பார்கள். டெலிகாம், சுற்றுலா, எண்ணெய் என 200க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இவருக்கு இருக்கிறது.

#14 வயதில் லெபனான் நாட்டில் இருந்து இடம் பெயர்ந்தவர்.

#சமூக சேவையிலும் ஆர்வம் மிக்கவர். சில பில்லியன் டாலருக்கு மேல் தொண்டு நிறுவனங்களுக்குக் கொடுத்துள்ளார். செல்வம் என்பது பழத்தோட்டம் போல, பழங்களை கொடுக்கவேண்டுமே தவிர மரத்தை வெட்டக்கூடாது என்று சொல்லுவார்.


#’’பணம் கம்பெனியை விட்டு செல்லும் போது, அது காணாமல் போய்விடும். அதனால் லாபத்தை மீண்டும் மறுமுதலீடு செய்யவேண்டும்என்பது இவரது பிரபலமான ஸ்டேட்மெண்ட்.

நன்றி : தமிழ் ஹிந்து நாளிதழ் 

ரிச்சர்ட் பிரான்சன்




#சரியாக படிக்கமுடியாமல் பள்ளிப்படிப்பை பாதியில் விட்டவர் இவர். 16 வயதில் ஸ்டுடண்ட் என்ற பத்திரிகை மூலம் தொழில் முனைவோராக வாழ்க்கையை ஆரம்பித்தார்.

ஆரம்பத்திலேயே 50,000 பிரதிகளை அச்சடித்து இலவசமாகக் கொடுத்தார். இதற்கான செலவை விளம்பரங்கள் மூலம் சரிக்கட்டினார்.

#விமானம், சுற்றுலா, நிதி, ரிடெய்ல், குளிர்பானம் என 400க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் என இவரது பிஸினஸ் 30 நாடுகளில் பறந்து விரிந்திருக்கிறது.

#அடுத்த 10 வருடங்களில் 300 கோடி டாலர் அளவுக்கு சமூக சேவைக்கு பயன்படுத்தப் போவதாக சொல்லி இருக்கிறார்.

#தொழில்முனைவு பற்றிய இவரது கருத்துகள் மிக பிரபலம். ஒரு உதாரணம். தொழில்முனைவு என்பது, சொந்தக் காலில் நிற்பதோ, அதிக பணம் சம்பாதிப்பதோ இல்லை. உங்களது உற்சாகமான வாழ்க்கையையே முதலீடு செய்வதுதான்.

#பிரச்னை என்று வரும் போது ஓடி ஒளியாமல் மீடியாக்களிடம் நேரடியாகப் பேசி உண்மையை விளக்குவார்.


#தன் வாழ்க்கையைப் பற்றி பல புத்தகங்கள் எழுதி இருக்கிறார். தொழில் முனைவோர்களுக்கு இவர் சொல்லும் ஆலோசனை ஏற்கெனவே இருக்கும் பிஸினஸை வாங்கவேண்டாம். அந்த நிழலில் இருக்காமல் சொந்தமாக ஆரம்பியுங்கள் என்பதுதான்.

நன்றி : தமிழ் ஹிந்து நாளிதழ் 

ஜேக் வெல்ஷ்



#கெமிக்கல் என்ஜினீயரிங்கில் பி.ஹெச்.டி. முடித்து, ஜி.இ. நிறுவனத்தில் வேலைக்குச் சேர்ந்தார். 1979-ம் ஆண்டு துணைத்தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர், 1981-ம் ஆண்டு தலைவர் மற்றும் சி.இ.ஓ.வாக நியமிக்கப்பட்டார்.

#ஜி.இ. நிறுவனத்தின் சி.இ.ஓ.வாக 20 வருடங்களாக பணிபுரிந்து 2001-ம் ஆண்டு ஓய்வு பெற்றார்.

#இவர் சி.இ.ஓ.வாக பொறுப்பேற்கும் போது 14 பில்லியன் டாலராக இருந்த ஜி.இ. நிறுவனத்தின் மதிப்பு, பணியில் இருந்து ஓய்வு பெறும்போது 410 பில்லியன் டாலராக இருந்தது.

#நிர்வாக கல்லூரியில் இருக்கும் மாணவர்கள் இவரது உத்திகளை விழுந்து விழுந்து படித்துக்கொண்டிருக்கிறார்கள்.

#ஓய்வு பெற்ற பிறகு, இவர் இரண்டு புத்தகங்களை எழுதி இருக்கிறார். ஆனால் இவரின் நிர்வாக கொள்கைகளை பற்றி 25க்கும் மேற்பட்ட புத்தகங்கள் எழுதப்பட்டிருக்கின்றன.

#அமெரிக்காவில் இருக்கும் 35க்கும் மேற்பட்ட சி.இ.ஓ.கள் இவரிடம் வித்தை கற்றவர்கள். இதில் 3 பேர் 30 முன்னணி நிறுவனங்களில் இருக்கிறார்கள்.

#சமீபத்தில் ஜாக்வெல்ஷ் மேனேஜ்மெண்ட் இன்ஸ்டிடியூட் ஒன்றை ஆரம்பித்திருக்கிறார்.

நன்றி : தமிழ் ஹிந்து நாளிதழ் 

ஹோவர்ட் ஷூல்ட்ஸ்



#ஏழை யூத குடும்பத்தில் ஜூலை 19, 1953-ல் பிறந்தவர்.

#குடும்பத்தில் கல்லூரிக்குச் சென்ற முதலாமவர். சிறந்த விளையாட்டு வீரர். நார்தர்ன் மிச்சிகன் கல்லூரியில் விளையாட்டு வீரர்களுக்கான உதவித் தொகை பெற்றவர்.

#ஜெராக்ஸ் கார்ப்பரேஷனில் விற்பனைப் பிரதிநிதியாக வாழ்க்கையைத் தொடங்கினார்.

#ஸ்வீடனின் ஹாமர்பிளாஸ்ட் காபி தயாரிப்பு நிறுவனத்தில் பொது மேலாளராக சேர்ந்தவர்.

#ஸ்டார் பக்ஸ் நிறுவனத்தில் விற்பனைப் பிரிவு இயக்குநராக சேர்ந்தார். 1985-ல் தனியாக காபி விற்பனை நிலையத்தைத் தொடங்கினார். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஸ்டார்பக்ஸ் நிர்வாகம் காபி விற்பனையகத்தை இவருக்கு விற்பனை செய்தது. இதை அமெரிக்கா முழுவதும் சங்கிலித் தொடர் நிறுவனமாக விரிவுபடுத்தினார் ஷுல்ட்ஸ். ஃபிரான்சைஸிங்கில் நம்பிக்கையில்லாததால் அனைத்து விற்பனைக் கிளைகளையும் தனது நேரடி கட்டுப்பாட்டில் நடத்தினார்.

#1997 மற்றும் 2001-ல் ஸ்டார் பக்ஸ் நிறுவனம் தொடர்பாக இரண்டு புத்தகங்களை எழுதியுள்ளார்.


#2013 மார்ச் நிலவரப்படி இவரது சொத்து மதிப்பு 160 கோடி டாலராகும்.

நன்றி : தமிழ் ஹிந்து நாளிதழ் 

அருந்ததி பட்டாச்சார்யா



#1977-ம் ஆண்டு புரபேஷனரி அதிகாரியாக ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில் பணிக்குச் சேர்ந்தார்.

#கடந்த 36 வருடங்களாக எஸ்.பி.ஐ.யில் பல முக்கியமான பொறுப்புகளில் இருந்துள்ளார். மேலும், நியூயார்க்கில் இருக்கும் எஸ்.பி.ஐ. வங்கிக் கிளையிலும் பணிபுரிந்துள்ளார்.

#206 வருட எஸ்.பி.ஐ. வரலாற்றில், முதல் பெண் தலைவராக நியமிக்கப்பட்டிருக்கிறார் பட்டாச்சார்யா. இதற்கு முன்பு நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை நிதி அதிகாரியாக இருந்தார்.

#எஸ்.பி.ஐ.யின் தலைவராக இன்னும் மூன்று வருடங்கள் பதவியில் இருப்பார்.


#துணை வங்கிகளை இணைப்பது, வாராக்கடனை குறைப்பது உள்ளிட்ட பல சவாலான பணிகள் இவருக்காக காத்திருக்கின்றன.

நன்றி : தமிழ் ஹிந்து நாளிதழ்