#பிர்லா
இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலாஜியில் (பிட்ஸ்) எலெக்ட்ரிக்கல் என்ஜினீயரிங்
படித்தவர்.
#டெக்சாஸ்
இண்ஸ்ட்ருமெண்டல் நிறுவனத்தில் வேலை பார்த்தபோது, தீபாவளி
விடுமுறைக்காக ஹைதராபாத் (பெங்களூரூவிலிருந்து) செல்வதற்கு டிக்கெட் கிடைக்காமல்
தடுமாறினார். அப்போது உதித்த ஐடியாதான் ரெட்பஸ்.
#தனது இரு
நண்பர்களுடன் சேர்ந்து ரெட்பஸ் (ஆன்லைனில் பஸ்டிக்கட் புக் செய்யும் நிறுவனம்)
நிறுவனத்தை ஆரம்பித்தார். சாமா. இப்போது இந்த நிறுவனத்தின் சி.இ.ஓ. ஆவார்.
#இவரது
நிறுவனம் ஆண்டுக்கு 600 கோடி ரூபாய்
அளவுக்கு டிக்கெட் விற்பனை செய்கிறது. இதில் 80 சதவிகிதம்
நேரடியாக மக்களாகவே புக் செய்கிறார்கள்.
#கம்ப்யூட்டர்
மூலம் இணையத்தை பயன்படுத்துபவர்கள் குறைந்து, மொபைல் மூலம் இணையத்தை பயன்படுத்துபவர்கள்
இப்போது அதிகரித்துள்ளார்கள். இவர்களுக்கு ஏற்றதுபோல சேவை கொடுப்பதுதான் இப்போது
உள்ள சவால் என்று சொல்லி இருக்கிறார்.
#இவரது
நிறுவனத்தை ஐபிஐபிஒ குழுமம் (ibiboGroup) வாங்கி இருக்கிறது. இருந்தாலும் இந்த இணைப்பு
எங்களை பாதிக்காது என்று சொல்லி இருக்கிறார் சாமா. மேலும், கோககோலா
நிறுவனத்தில் வாரன் பஃபெட்டுக்கு கணிசமான பங்கு இருக்கிறது. இதை வைத்து அவர்
நிறுவனத்தில் அதிகாரம் செய்யவில்லை. அதுபோலதான் இங்கும் என்று சொல்லி இருக்கிறார்.
#இவரது நிறுவனம் ஒரு மாதத்துக்கு 10 லட்சம் டிக்கட்களை
விற்கிறது.
நன்றி : தமிழ் ஹிந்து நாளிதழ்
No comments:
Post a Comment