#பிரிட்டானியா
நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர். இப்போது இந்த நிறுவனத்தின் வெளிநாட்டு
வியாபாரத்தில் மட்டுமே கவனம் செலுத்துகிறார்.
#டெல்லியில்
இருக்கும் ஸ்ரீராம் கல்லூரியில் பொருளாதாரம் படித்தவர். ஐ.எஃப்.எஸ். முடிப்பதுதான்
லட்சியமாக இருந்ததால், அதற்கு
முதுநிலை பட்டம் தேவைப்பட்டது. அதனால் எம்.ஏ பொருளாதாரம் படிப்பதற்கான வேலைகளில்
ஈடுபட்டார். அதே சமயத்தில் மும்பையில் இருக்கும் ஜம்னாலால் இன்ஸ்டிடியூட்டிலும்
படிக்க வாய்ப்பு கிடைத்ததால் அங்கு சேர்ந்தார்.
#ஐ.எஃப்.எஸ்.
லட்சியத்தோடு இருந்தாலும்,
படிப்பு
முடியும் முன்னரே வோல்டாஸ் நிறுவனத்தில் வேலை கிடைத்தது. அங்கு ரஸ்னா
குளிர்பானத்தை அறிமுகப்படுத்தியது இவர்தான்.
#வோல்டாஸுக்குப்
பிறகு கேட்பரி இந்தியா நிறுவனத்தில் சேர்ந்தார். அதன்பிறகு கோககோலா நிறுவனத்துக்கு
மாறினார். கோககோலாவுக்காக பல நாடுகளில் வேலை பார்த்திருக்கிறார். 45க்கும்
மேற்பட்ட நாடுகளுக்கு சென்று வந்திருக்கிறார்.
#2005-ம் ஆண்டு
இந்தியாவுக்கு வந்து பிரிட்டானியா நிறுவனத்தில் சேர்ந்தார். மேலும் பிரமல் கிளாஸ், டைட்டன்
உள்ளிட்ட நிறுவனங்களில் இயக்குனர் குழுவிலும் இருக்கிறார்.
#2011-ம் ஆண்டு ஆசியாவின் சக்திவாய்ந்த பெண் பிஸினஸ்
தலைவர்கள் என்ற பட்டியலை போர்ஃப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டது. இந்த பட்டியலில்
வினிதாவும் இருக்கிறார்.
நன்றி : தமிழ் ஹிந்து நாளிதழ்
No comments:
Post a Comment