#சரியாக
படிக்கமுடியாமல் பள்ளிப்படிப்பை பாதியில் விட்டவர் இவர். 16 வயதில்
ஸ்டுடண்ட் என்ற பத்திரிகை மூலம் தொழில் முனைவோராக வாழ்க்கையை ஆரம்பித்தார்.
ஆரம்பத்திலேயே 50,000 பிரதிகளை
அச்சடித்து இலவசமாகக் கொடுத்தார். இதற்கான செலவை விளம்பரங்கள் மூலம்
சரிக்கட்டினார்.
#விமானம், சுற்றுலா, நிதி, ரிடெய்ல், குளிர்பானம்
என 400க்கும்
மேற்பட்ட நிறுவனங்கள் என இவரது பிஸினஸ் 30 நாடுகளில் பறந்து விரிந்திருக்கிறது.
#அடுத்த 10 வருடங்களில் 300 கோடி டாலர்
அளவுக்கு சமூக சேவைக்கு பயன்படுத்தப் போவதாக சொல்லி இருக்கிறார்.
#தொழில்முனைவு
பற்றிய இவரது கருத்துகள் மிக பிரபலம். ஒரு உதாரணம். தொழில்முனைவு என்பது, சொந்தக்
காலில் நிற்பதோ, அதிக பணம்
சம்பாதிப்பதோ இல்லை. உங்களது உற்சாகமான வாழ்க்கையையே முதலீடு செய்வதுதான்.
#பிரச்னை என்று
வரும் போது ஓடி ஒளியாமல் மீடியாக்களிடம் நேரடியாகப் பேசி உண்மையை விளக்குவார்.
#தன் வாழ்க்கையைப் பற்றி பல புத்தகங்கள் எழுதி இருக்கிறார்.
தொழில் முனைவோர்களுக்கு இவர் சொல்லும் ஆலோசனை ஏற்கெனவே இருக்கும் பிஸினஸை
வாங்கவேண்டாம். அந்த நிழலில் இருக்காமல் சொந்தமாக ஆரம்பியுங்கள் என்பதுதான்.
நன்றி : தமிழ் ஹிந்து நாளிதழ்
No comments:
Post a Comment