#‘மார்க்கெட்டிங் துறையின் தந்தை’
என்று அழைக்கப்படுபவர் பிலிப் காட்லர். இப்போது
கெல்லாக்ஸ் ஸ்கூல் ஆஃப் மேனேஜ்மென்டில் சர்வதேச மார்க்கெட்ங் துறையின் பேராசியராக
இருக்கிறார்.
#சிகாகோ பல்கலைக்கழகத்தில் பி.ஹெச்டி.
முடித்தவர். சர்வதேச அளவில் 12 கௌரவ டாக்டர் பட்டங்களைப்
பெற்றிருக்கிறார்.
#மார்க்கெட்டிங் துறையில் 50க்கும் மேற்பட்ட புத்தகங்களும், பல கட்டுரைகளும் எழுதி இருக்கிறார். மார்க்கெட்டிங் சம்பந்தமாக இவர்
எழுதிய புத்தகத்தைதான் உலகம் முழுக்க நிர்வாகம் படிக்கும் மாணவர்கள்
படிக்கிறார்கள்.
#ஹனிவெல், ஜி.இ., ஐ.பி.எம். பேங்க் ஆஃப் அமெரிக்கா,
ஃபோர்டு, மோட்டரோலா உள்ளிட்ட பல நிறுவனங்களுக்கு ஆலோசகராக இருந்திருக்கிறார்.
மேலும் சில அரசு நிறுவனங்களுக்கும் ஆலோசகராக இருந்திருக்கிறார்.
#உலகம் முழுக்க இருக்கும் பிஸினஸ்
சிந்தனையாளர்களில் முக்கியமானவர்.
#இவருடைய 75-வது பிறந்த நாளுக்கு இந்தோனேஷிய அரசாங்கம் தபால்தலை வெளியிட்டு க்
கௌரவித்திருக்கிறது.
#‘கம்பெனிக்கு குறைந்த தலைவர்களும்,
தானாக முடிவெடுக்கும் மேனேஜர்களும் தான் தேவை’
உள்ளிட்ட இவருடைய பல கருத்துகள் மிகவும்
பிரபலம்.
நன்றி : தமிழ்.ஹிந்து நாளிதழ்
No comments:
Post a Comment