கோப்புகளை தானாக சேமிக்கும் மென்பொருள்...
திடீரென ஏற்படும் மின்தடையால் நீங்கள் பாவித்துக்கொண்டிருக்கும் கோப்புகளை சேமிக்க இயலாமல் போகும். இதுபோன்ற சமயங்களில் கோப்புகளை தானாகவே சேமிக்க உதவுகிறது இம்மென்பொருள். இது நம்முடைய கோப்புகளை தானாக சேமிக்கிறது(Automatic Save).
மென்பொருளின் பெயர்: AutoSave Essentials
இம்மென்பொருளின் மூலம் Music, Photos, Documents என்ற மூன்று பிரிவுகளில் அடங்கும் கோப்புகளை சேமிப்பதற்கான வசதிகள் உள்ளடங்கி இருக்கின்றன.
எந்த வகையான கோப்பை நாம் மேற்கொள்கிறோமோ அதை ஆட்டோமேட்டிக்காக சேமிக்க இந்த மென்பொருளில் வசதி தரப்பட்டிருக்கிறது. சேமிக்க வேண்டிய கோப்புகளை மற்ற சாதனங்களிலும் சேமிக்குமாறும் அமைத்துக்கொள்வது கூடுதல் வசதி. அதாவது Pendrive, Hard drive, போன்ற External Device களிலும் சேமித்துக்கொள்ளலாம்.
சேமிக்க வேண்டிய கோப்புகளை தேர்ந்தெடுத்தல் |
மேற்கண்ட படத்தில் இருப்பதைப் போன்று உங்கள் கோப்புகள் Videos, Sound and Music, Picutres and Photos, Documents and Presentations ஆகிய கோப்புகளனைத்தையும் தேர்ந்தெடுப்பதன் மூலம், நீங்கள் வேலைசெய்யும் கோப்புகள் சேமிக்கப்படும். இடையில் திடீரென ஏதாவது தடங்களால் உங்கள் கணினி நின்றுவிட்டால் நீங்கள் கடைசியாக வேலைசெய்த வரை உங்கள் கோப்புகளானது பாதுகாப்பாக சேமிக்கப்பட்டிருக்கும்.
சேமிக்க வேண்டிய நாட்களை தேர்ந்தெடுத்தல் |
உங்கள் கணினியில் உள்ள, நீங்கள் தேர்வு செய்த தரவுகளை எத்தனை நாட்களுக்கொரு முறை பேக்கப் எடுத்து வைக்க வேண்டும் என்பதை தீர்மானிக்கும் வசதி மேற்கண்ட படத்தில் காட்டப்பட்டுள்ளது.
சேமிக்கப்பட வேண்டிய இடத்தைத் தேர்ந்தெடுத்தல். |
உங்கள் கோப்புகள் சேமிக்கப்பட வேண்டிய டிரைவ் தேர்ந்தெடுக்கும் வசதியைத்தான் மேற்கண்ட படம் காட்டுகிறது. மேற்கண்ட வசதிகளை நீங்கள் எப்போது வேண்டுமானால் பயன்படுத்தவும், தேவையில்லாத சமயங்களில் இவ்வசிதிகளை நிறுத்தி வைக்கவும், தேவையில்லை என நினைப்பதை அழிக்கவும்(Delete) செய்யும் வசதியும் உள்ளடங்கியிருப்பதால் இம்மென்பொருள் ஒரு முழுமையான யூசர் ப்ரண்டிலி(User Friendly) மென்பொருள் என்பதில் சந்தேகம் இல்லை..
9 MB அளவுள்ள இந்த மென்பொருளை டவுன்லோட் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
நன்றி : http://softwareshops.blogspot.in/2012/06/automatic-file-save-software.html
No comments:
Post a Comment