நாம் கணினி மூலமாக இணையத்தில் பிரவுஸ் செய்துகொண்டிருப்போம் அல்லது வேறு பணியில் இருப்போம், ஆனால் அதே வேளையில் நமது கணினியை வேறுயாராவது தவறான நோக்குடன் நமக்கே தெரியாமல் ரகசியமாக இணைந்திருக்கலாம் அது நமக்கு தெரியாது . இதன் மூலம் தேவையில்லாத வைரஸ்கள் நிறுவப்படலாம் மற்றும் நமது கணினியின் வேகம் குறையலாம் அல்லது முழுவதுமாக செயலிழந்துபோகலாம்.
எனவே நாம்கவனமாக இருப்பது நல்லது. அது எவ்வாறு என இப்பதிவில் பார்ப்போம். இதனை அறிவது கடினமான செயல் அல்ல மிகவும் எளிதான ஒன்று.
மேலே படத்தில் உள்ளது போல் முதலில் நாம் START சென்று RUN மூலமாக COMMAND PROMPT-ஐ திறந்துகொள்ள வேண்டும்.( Start ---> Run ---> Command Prompt).
COMMAND PROMPT திறந்த உடன் அதில் “netstat -b 5 > sectretlog.txt” என டைப் செய்ய வேண்டும்.
Type செய்து என்டர் கீயினை தட்டிய பின் அடுத்து Ctrl+C (^C) -ஐ CMD திரையில் வைத்து அழுத்தவேண்டும். அதன் பின் மீண்டும் Command Prompt-இல்"sectretlog.txt” என டைப் செய்யவேண்டும்.
இவ்வாறு டைப் செய்த உடன் கீழே படத்தில் உள்ளது போன்று நோட் பேடில் ஒரு திரை தோன்றும்.
அதில் தற்பொழுது இணையத்தில் தொடர்பில் உள்ளவர்களை பற்றி காட்டும். இதனை நாம் பார்வையிட்டு அவற்றில் சந்தேகத்துடன் இருக்கும் அல்லது HACK செய்வதற்கான அறிக்குறி இருப்பின் அதனை நீக்கிவிடவேண்டும்.
முயற்சித்து பாருங்கள் அவ்வாறு ஏதாவது சந்தேகத்துக்குரியதாக இருப்பின் உடனடியாக அதனை நீக்கிவிடவும். இதனை தவிர வேறு முறை இருப்பின் எமக்கும் தெரிவியுங்கள்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
No comments:
Post a Comment