WEL COME...Tamilnet Live...தமிழ்நெட் லைவ் ..வருக வருக ...

Select Your Language

நிறைவான வாழ்க்கைக்கு.....

# உடலுக்கு கேடு விளைவிக்கும் உணவுகளை தவிருங்கள் . பழம் கீரை காய்கறிகளை அதிகம் உண்ணுங்கள் .

# நிறைய தண்ணீர் குடியுங்கள்.(காலை எழுந்தவுடன் கண்டிப்பாக)

# குறைந்தது 6 - 8 மணி நேரமாவது கவலையை அசைபோடாமல் தினமும் தூங்குங்கள்.

# முடிந்தவரை இயற்கைக்கு கேடு விளைவிக்காமல் வாழ முயற்சி செய்யுங்கள் .

# இயற்கையை நேசியுங்கள் . வருடத்திக்கு ஒரு மரக்கன்றையாவது நடுங்கள் .
# உங்களுக்கும் ,
உங்கள் குடும்பத்தினருக்கும் , நண்பர்களுக்கும் உண்மையாக இருக்க பாருங்கள் .

# வயது ஆக ஆக சிறுவர்களை போல எதாவது ஒரு விளையாட்டை வாரம் இருமுறையாவது விளையாடுங்கள் . (உடற்பயிற்சி செய்வதைவிட எளியது )
# அடுத்த தலைமுறைக்கு நல்ல கல்வியுடன் நேர்மையும் ஒழுக்கத்தையும் சொல்லி கொடுங்கள் .

# எந்த கஷ்டம் வந்தாலும் இதுவும் கடந்து போகும் என்று தைரியமாக இருங்கள் .

# கல்விக்கும் மருத்துவத்திகும் சிரமபடுபவர்க்கு சிறிது உதவி செய்யுங்கள் .

# நண்பர்களிடம் தொடர்பு வைத்திருங்கள்.நேரம் கிடைத்தால் சந்தியுங்கள் .

# வேலைகளுக்கிடையே குடும்பத்தினருடன் நேரத்தை செலவிடுங்கள் . 
விடுமுறை நாட்களில் வெளியில் அழைத்து செல்லுங்கள் .

# யாரையும் குறை கூறாதீர்கள் . தவறு செய்தவர்களை மன்னித்து தட்டி குடுங்கள் .

# மனம் விட்டு சிரியுங்கள் . மற்றவர்களையும் சிரிக்க வையுங்கள் . (மனம் விட்டு சிரித்தால் நோய்விட்டு போகும் )

# யாருடைய மனதையும் காயபடுத்தாதீர்கள் . அனைவரையும் நேசியுங்கள் .
# அரசியலையும் தெரிந்து கொள்ளுங்கள் . தேர்தலில் நல்ல வேட்பாளருக்கு ஒட்டு போடுங்கள் .

# நம் பெற்றோரிடமும் குழந்தைகளிடமும் தொடர்பு இடைவெளி(கம்யூனிகேசன் கேப்) அதிகம் இல்லாமல் பார்த்து கொள்ளுங்கள்.
# நம்மிடம் இருப்பதை வைத்து சந்தோசமாக இருக்க பழகிகொள்ளுங்கள் .மற்றவர்களுடைய வாழ்க்கையோடு ஒப்பிடாதீர்கள் .

# இவற்றுடன் முடிந்தால் உடல்பயிற்சியோ நடைபயிற்சியோ யோகாவோ செய்யுங்கள் :-)

No comments: