செய்தி : தினமலர் (05/08/2012)
இப்படியும்
மின்சாரம் தயாரிக்கலாம்!
``````````````````````````````````
செய்தி
: தினமலர் (05/08/2012)
சாலையில்
போகும் வாகனங்களைக் கொண்டு, மின்சாரம் தயாரிக்கும்
அஸ்லம்: கோவையில் பொறியியல் படிப்பை முடித்து, கப்பலில்
வேலை பார்த்துக் கொண்டிருந்தேன். மின்வெட்டுப் பிரச்னை பற்றிப் பேச்சு
வந்த போது, "என்ன செய்யலாம்...' என
யோசித்தேன். காற்றாலை மின்சாரம் தயாரிக்க, காற்று தேவை; சோலார்
மின்சாரம் தயாரிக்க, சூரிய ஒளி தேவை.
ஆனால், இது எதுவுமே இல்லாமல்,
சாலையில் செல்லும் வாகனங்களை வைத்து, மின்சாரம் தயாரிக்கலாம்
என நினைத்தேன். நான் படித்த மெக்கானிக்கல்
படிப்பும், நண்பர்களும் உதவி செய்ய, கண்டுபிடிப்பில்
இறங்கினேன். தினமும் சாலையில் ஆயிரக்கணக்கான
வாகனங்கள் செல்கின்றன. சுங்கச்சாவடி, வேகத் தடை உள்ள
இடங்களில் நான் உருவாக்கியுள்ள கருவியைப்
பொருத்த வேண்டும். அது கிட்டத்தட்ட உயரமான
கார்ப்பெட் போன்று இருக்கும். பஸ்
வரும் போது, அந்தக் கருவி,
வாகன எடையை உள்வாங்கி அழுத்தமாக்கும்.
அதை, "ஆல்டர்னேட் டைனமோ' மின்சாரமாக மாற்றும்.
அதில் கிடைக்கும் அழுத்தம் மூலம், அரை மெகாவாட்
மின்சாரம் உருவாக்கி சேமிக்கலாம். தேவையான போது அதிகமாகவும்,
தேவையில்லாத போது, குறைவாகவும் பயன்படுத்திக்
கொள்ளலாம். இதனால், மாசு இல்லை;
எந்த எரிபொருளும் தேவை இல்லை; அணுமின்
நிலையம் போன்று, பாதுகாக்கத் தேவை
இல்லை. ஒரு மணி நேரத்தில்
இரண்டு மெகாவாட் மின்சாரம் கிடைத்தால், அதை, 15 வீடுகளுக்கு, 24 மணி
நேரமும் பயன்படுத்தலாம். கனடா அரசு, எங்களின்
செயல் திட்டத்தை ஆதரித்து, அனுமதி தந்துள்ளது. தமிழக
அரசு இந்த செயல் திட்டத்திற்கு
ஆதரவும், அங்கீகாரமும், அனுமதியும் தந்தால், பெரிய அளவில் இதைச்
செயல்படுத்தலாம். அரசின் ஒத்துழைப்பு இல்லாமல்,
இதை நடைமுறைப்படுத்த முடியாது. எங்கள் செயல் திட்டத்தில்,
தமிழகத் திற்கு தேவையான, 12,500 மெகாவாட்
மின் சாரத்தை தயாரிக்க முடியும்.
``````````````````````````````````````````
http://www.dinamalar.com/splpart_detail.asp?id=93
====================================================================================
1 comment:
windows mobile app dinamalar windows mobile app dinamalarr
Dinamalar Windows Phone app gives you latest news from Tamil Nadu, India, World & important districts news,
Cinema news, reviews, sports news & live cricket score, business news & NSE/BSE market update, Rasi palan and photo gallery
& video – News, Trailer… with some unique user experience
Post a Comment