கூகுள் தன் தேடல் தளத்தில், விடுமுறை நாட்களிலும், சிறப்பு நிகழ்வுகள் கொண்ட நாட்களிலும், தன் கூகுள் லோகோவினை அந்த நாளுக்கேற்ப உருவாக்கும்.
இதனை டூடில் (“Doodle”) என அழைக்கின்றனர். இது பார்ப்பதற்கு ரசிக்கும் வகையில் இருக்கும். பின்னர் அந்த நாளுக்குப் பின்னர், வழமையான லோகோ காட்டப்படும்.
"அடடா! மிக நன்றாக, வேடிக்கையாக இருந்ததே; காப்பி செய்திடாமல் போய்விட்டோமே' என்று கவலைப்படுபவர்கள் பலர் இருக்கின்றனர்.
இவர்களின் கவலையைப் போக்கும் வகையில் கூகுள் ஓர் ஏற்பாடு செய்துள்ளது. கூகுள் தளம் செல்லுங்கள். சர்ச் கட்டத்தில் “Google
Doodles” என டைப் செய்திடுங்கள். முதல் விடையாக Click : www.google.com/doodles/
என்ற தளம் காட்டப்படும்.
இந்த தளம் சென்றால், கூகுள் டூடில்ஸ் அனைத்தும் சேர்த்து வைத்திருப்பதனைக் காணலாம். இடது பக்கம் ஆண்டு வாரியாகத் தேடிக் காணும் வசதியும், வலது பக்கம் நாடு வாரியாகக் காணும் வசதியும் தரப்பட்டிருக்கும்.
இதில் நமக்குத் தேவையானதைக் கிளிக் செய்து காணலாம். இதில் ஏதாவது ஒரு டூடிலில் கிளிக் செய்தால், அதனை ஏன்,எதற்காக, எப்படி உருவாக்கினார்கள் என்ற தகவல் கட்டுரையையும், டூடில் உருவாகும் பல்வேறு படிநிலைகளையும் காணலாம்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
No comments:
Post a Comment