WEL COME...Tamilnet Live...தமிழ்நெட் லைவ் ..வருக வருக ...

Select Your Language

பிளாஸ்டிக் இல்லாம் வாழலாமே



பிளாஸ்டிக் இல்லாம் வாழலாமே ..
==================================
பிளாஸ்டிக், நம் கண் முன்னே வாழும் எமன். சுற்றுச் சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தி, மனித உயிர்களுக்கும், கடல் வாழ் உயிரினங்களுக்கும் மிகப் பெரிய அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ள, பேரழிவு சக்தி. உலகம் முழுவதும், சராசரியாக ஒரு ஆண்டுக்கு, 105 மில்லியன் டன் பிளாஸ்டிக்குகள் தயாரிக்கப்படுகின்றன. உலகில் உள்ள ஒவ்வொரு நபரும், சராசரியாக ஒரு ஆண்டுக்கு, 70 கிலோ அளவுள்ள பிளாஸ்டிக்குளை பயன்படுத்துகின்றனர்.


பிளாஸ்டிக்கை தயாரிப்பதற்கான செலவு குறைவு. மேலும், நாம் விரும்பும் எந்த ஒரு வடிவத்திலும், இதை எளிதாக உருமாற்றி விடலாம். ஆனால், இதை அழிப்பது அத்தனை எளிதான காரியம் அல்ல. இன்று, கடைகளில் வாங்கும் அனைத்து பொருட்களும், பிளாஸ்டிக் பைகளில் தான் கொடுக்கப்படுகின்றன. இவ்வாறு பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக்கு கள், பொதுமக்களால் வீதிகளில் தூக்கி எறியப்படுவதன் விளைவாக, பூமிக்குள் ஆங்காங்கே புதைந்து, நிலத்தில் பெய்யும் மழை நீர், பூமிக்குள் ஊடுருவாத வகையில், மிகப் பெரிய பிளாஸ்டிக் கேடயமாக மாறி விடுகிறது. இதனால், நிலத்தடி நீர் குறைந்து, பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது.


கடற்கரைகளில் தூக்கி வீசப்படும் பிளாஸ்டிக்குகள், கடலுக்குள் செல்வதால், கடலின் சுற்றுச் சூழலும் கடுமையாக பாதிக்கப்பட்டு, கடல் வாழ் உயிரினங்களின் உயிர்களுக்கு உலை வைக்கின்றன. இதனால் தான், "அணுகுண்டால் ஏற்படும் பாதிப்பை விட, பிளாஸ்டிக்கால் ஏற்படும் பாதிப்பு, மிகவும் பயங்கரமானது' என, நம் சுப்ரீம் கோர்ட், கடுமையான வார்த்தைகளை உபயோகப் படுத்தியது.ஆனால், பிளாஸ்டிக் இல்லாத வாழ்க்கையை, உங்களால் ஒரு நாளாவது வாழ்ந்து காட்ட முடியுமா?

No comments: