ஈமு கோழிகளும், சுவிசேஷ ஆவிகளும்: மோசடியின் நூறு முகங்கள்
மத்திய அமைச்சர் நாராயண சாமியால் திறந்து வைக்கப்பட்ட காங்கிரஸ் பிரமுகரின் ஈமு கோழி பண்ணை பொது மக்களின் 250 கோடி முதலீட்டை விழுங்கியது. தலைமறைவானார் குரு. இது வரை பாதிக்கப்பட்ட 2400 பேர் ஈரோடு மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளித்துள்ளனர். நமீதாக்கள், சரத்குமார்கள், அமலா பால்கள் திறந்த உடையுடனும், புன்னகையுடனும் திறந்த வைத்த ஈமு கோழி பண்ணைகள் தான் இப்போது பொது மக்களின் 2000 கோடிக்கு மேலான முதலீட்டை, அவர்களின் வாழ் நாள் சேமிப்பை சூறையாடி இருக்கின்றன. அதன் திருட்டு தலைவர்கள் தலைமறைவாகி விட்டனர். பொது மக்களின் சேமிப்பும், முதலீடும் மீண்டும் வழித்து சுரண்டப்பட்டு அவர்கள் நடை பிணமாக மீதி காலங்களை ஓட்ட வேண்டிய நிலைக்கு இவர்களை செலுத்தியது எது? ஏன்? மீண்டும் மீண்டும் ஏன் புதை குழியிலோ,திரும்ப வரவே வராத இடத்திலோ முதலீடு செய்து தங்கள் வாழ்க்கையை அபாய நெருக்கடிக்கு ஆளாக்கி கொள்ள வேண்டிய அவல நிலைக்கான காரணங்களை யோசிக்கலாம்.
வரலாறு:
எல்லா திருட்டுக்களைப்போலவே சங்கிலித்தொடர் திட்டங்களும், அது போன்ற நூதன திருட்டும் கம்யூனிஸம் தழைத்தோங்கிய ரஷ்யாவில் இருந்து தான் தொடங்குகிறது.ஜார் காலத்திய ரஷ்யாவில் இது போன்ற ஒரு மோசடி திட்டம் முதன் முதலில் நடைமுறைப்படுத்தப்பட்டு வெற்றி பெற்ற பின்னர் அமெரிக்காவிற்கு பயணிக்கிறது கூடவே தொழிற்புரட்சி ஏற்பட்ட ஐரோப்பாவிற்கும் பின்பு காலனி நாடுகளுக்கும் மெல்ல பாவிப் பரவுகிறது விஷ விதைகள்.ஆனால் 1855-57 கால கட்டங்களில் சார்லஸ் டிக்கன்ஸ் தன்னுடைய நாவல் தொடரான லிட்டில் டோரிட்டில் மல்டி லெவல் மார்கெட்டிங் பற்றிய ஆரம்ப கட்ட திட்டமிடலையும்,வாய்ப்புகளைப்பற்றியும் குறிப்பிட்டு எழுதுகிறார்.
தொழில் ரீதியில் திருட்டுத்தனம் செய்வதையும்,ஒருங்கிணைக்கப்பட்ட குற்றங்கள் இழைப்பதில் முன்னால் நிற்கும் இங்கிலாந்தும் இன்ன பிற ஐரோப்பிய,அமெரிக்க நாடுகளிலும் இத்திட்டங்கள் பெருமளவு முதலீடுகளையும், வளங்களையும் இழந்துள்ளதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. சங்கிலித்தொடர் மோசடிகள் ரஷ்யாவில் 1890-95 கால கட்டங்களில் 2ம் அலெக்ஸாண்டர் மற்றும் நிகோலஸின் ஆட்சிகாலங்களில் வெற்றிகரமாக செயல்படுத்தப் பட்டது. இப்போது ஈமுவில் ஏமாந்தது போல அப்போது மக்கள் சைக்கிள் வாங்க வேண்டும் என்ற ஆவலினால் பெருமளவு முதலீட்டை இழந்தனர்.
தொழிற்புரட்சிக்கு பிந்திய கால கட்டங்களில் பெருமளவு மேல் நடுத்தர மக்கள்,மற்றும் நடுத்தர மக்கள் சைக்கிளை ஒரு ஆடம்பர பொருளாக பயன் படுத்த துவங்கி இருந்தனர். மேம்படுத்தப்பட்ட 1870க்கு பிறகான சைக்கிள் மீது ஒட்டுமொத்த ஐரோப்பாவும் பித்தாக இருந்தது. அப்போது 3 வது பெரிய மக்கள் தொகை கொண்ட ரஷ்யாவில் இருந்த சிலர் சைக்கிளுக்கு இருந்த மதிப்பையும் மக்களின் ஏக்கத்தையும் தொடர்பு படுத்தி யோசித்து ஒரு புது திட்டத்தை அறிவித்தனர். அதன்படி அப்போதைய சைக்கிளின் தோராய விலை 50 ரூபிள் என இருக்கிறது.இந்த நிறுவனம் முன்வைத்த திட்டம் என்ன என்றால் 10 ரூபிள்களுக்கு சைக்கிள் என்ற கவர்ச்சிகரமான கோஷத்தை முன் வைக்கிறார்கள்.10 ரூபிள் கட்டும் நபருக்கு நிறுவனம் ஐந்து 10 ரூபிள் மதிப்புள்ள கூப்பன்களை வழங்கும் அவர்கள் அந்தக்கூப்பனுக்குறிய பணத்தை கொடுத்தார்களேயானால் அவர்களுக்கு 50 ரூபிள் மதிப்பிலான சைக்கிளும் அவர்களின் முதலீடான 10 ரூபிள் ஊக்கத்தொகையாகவும் கிடைக்கும்.
ஆகா எவ்வளவு அற்புதமான திட்டம் என்று மக்கள் குவிந்து இத்திட்டத்தில் முதலீடு செய்தனர்.ஒரு கட்டத்தில் கூப்பன்கள் தேக்கமடைந்தன. நிறவனம் என்ன சொல்கிறது நாங்கள் எங்கள் நடைமுறைப்படி சைக்கிள் தரத்தயாராக இருக்கிறோம். 5 கூப்பனுக்குரிய தொகையை பெற்றுத்தருபவர்களுக்கு உடனடியாக சைக்கிளும்,அவர்களின் முதலீடும் உடனே தர நாங்கள் தயார் என அறிவித்து விட்டு கம்பீரமாகவும்,சட்டப் படியும் பணத்தை எண்ணிக் கொண்டிருந்தனர்.கூப்பனை முழுதாக விற்காதவர்களின் பணம் முழுக்க நிறுவனத்திடம் தான் இருந்தது. 19 ம் நூற்றாண்டில் இந்த நிகழ்வு மாபெரும் மக்கள் வீழ்ச்சி என ரஷ்யா குறிப்பிடுகிறது,இதை அடியொற்றித்தான் அமெரிக்காவில் 1915-20 ல் பொன்ஸீ மோசடித்திட்டம் உருவாகி அமெரிக்க வணிக வாட்டத்தின் போது உச்சத்தை அடைந்து பின்பு முடிவுக்கு வராமல் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
பொன்ஸீ திட்டங்கள் என்பது என்ன?
ரெபரல் மார்கெட்டிங்,மல்டிலெவல் மார்கெட்டிங்,பிரமிட் திட்டங்கள் என்று வேறு,வேறு பெயர்களால் குறிப்பிடப்படும் பொன்ஸீ திட்டங்கள் என்பது மிக அதிகமான ஈவுத்தொகை,மற்றும் ஊக்கத்தொகை குறைந்த கால அவகாசத்திலோ,அல்லது தொடர்ச்சியாகவோ நடைமுறையில் உள்ளதை விட பல மடங்கு அதிகமான தொகையும் ஊக்கப்பரிசுகளும் வழங்கப் படுவதாகும். அந்தப்பணத்தை பிரமிடு அடுக்கில் அவருக்கு கீழ் உள்ள அடுக்கில் இருப்பவரின் முதலீட்டை பங்கிட்டு கொள்வதன் மூலமாக பெறப்படும். மிக அதிகமான ஈவுத்தொகை உறுதி அளிக்கப்பட்டு ஆரம்பத்தில் அளிக்கப்படும்.பின்பு ஒரு சுபயோக சுப தினத்தில் கம்பெனி கதவில் பூட்டு தொங்கும்.இது தான் நூற்றாண்டு கால நடைமுறை.தொன்று தொட்டு பாரம்பரியமாக ஏமாற்றும் புத்தி சாலிகள் கூட புது முறைகளை முயற்சி செய்வதில்லை.பொருள் வேண்டுமானால் சைக்கிளில் இருந்து இப்போது கார், தேக்கு மரம் ஈமு கோழி, சுவிசேஷ ஆவி, பாரின் கரன்ஸி டிரேடிங் என்று மாறாலாம். ஆனால் திட்டங்கள், நடைமுறைகள், கவர்ச்சிகள், விளம்பரங்கள்,தப்பி ஓடல்,முதலீட்டாளர்கள் கதறல்,பைத்தியம் பிடித்தல், தற்கொலைகள், இவற்றில் எல்லாம் நூற்றாண்டுகளாகவே ஒன்றும் மாற்றமில்லை. 1920ல் பொன்ஸீ திருடியது 20 மில்லியன் அமெரிக்க டாலர்கள்.1899லேயே அவரின் அமெரிக்க முன்னோடியான வில்லியம் மில்லர் திருடிய ஒரு மில்லியன் டாலரை விட 20 மடங்கு அதிகமாக திருடினார் நம் தியாக திரு விளக்கு சோனியா அம்மையாரின் சொந்த நாட்டுக்காரரான இத்தாலிய சார்லஸ் பொன்ஸீ.
அமைப்பு செயல்படும் முறை:
இந்த நடை முறைக்கு ஒவ்வாத ஏமாற்றும் பணம் பறிக்கும் மாய கண் கட்டு வித்தை உங்களின் நெருங்கிய நண்பர் மூலமாகவோ,உறவினர் மூலமாகவோ, பிரபலமான நட்சத்திரங்கள்,மற்றும் நாளிதழ்கள் மூலமாகவோ தான் உங்களை அணுகும். உங்களுக்கும்,அந்த நிறுவனத்திற்குமான தொடர்பு மிகவும் குறைவாகவே இருக்கும். இவற்றின் பண உருவாக்கம் மற்றும் விரிவாக்க செயல்களை புரிந்து கொள்ளலாம். இவற்றின் லாபம் என்பதே அதில் சேரும் தலைகளை பொறுத்து தான் அமையும்.எத்தனை பேர் சேர்கிறார்களோ அத்தனை லாபம். உற்பத்தி, விற்பனை, வியாபாரத்துக்கு பிந்திய சேவை எதுவும் தேவையில்லை.இது மேலிருந்து கீழாக பிரமாணடமாக விரிந்து செல்லும் பிரமிடின் தோற்றத்தை அடிப்படையாக கொண்டு கட்டமைக்கப்பட்டிருக்கும். பிரமிடின் அடித்தட்டில் இருப்பவர்கள் மிகவும் ஏமாளிகள், கொஞ்சம் மேல் அடுக்கில் உள்ளவர்கள் சுமாரான ஏமாளிகள்,மேலே உள்ளவர்கள் ஏமாற்றத் தெரிந்தவர்கள். அனுபவிக்கத் தெரிந்தவர்கள். தெளிவாகக் கூறினால் கடைசியில் இதில் சேர்பவருக்கு மேற்கொண்டு சேர்க்க வேறு நபர் கிடைக்கவில்லையெனில் அவர் மிகுந்த எதிர்பார்ப்புடன் களமிறங்கியதற்குப் பெருத்த ஏமாற்றம் தான் மிஞ்சும். அவ்வாறெனில் இறுதியாக உறுப்பினராகச் சேர்ந்த அடித்தட்டு நிலையில் இருக்கும் மக்கள் அனைவரும் கடுமையான நஷ்டத்திற்குள்ளாவர். இதனாலேயே சாதாரணமாக ஒரு நிறுவனம் ஈட்டும் வெற்றியை இந்த MLM நிறுவனங்கள் ஏட்டளவில் கூட ஈட்ட இயல முடிவதில்லை.இதில் மிகப் பெரும்பானமையாக பயன் பெறுபவர்கள் பிரமிடின் மேல் உள்ளவர்கள் மட்டும் தான். மேல் கூம்பில் உள்ளவர்களின் லாபம் பிரமிடின் கீழ் பரப்பு எவ்வளவு பெரிதாக இருக்கிறதோ அவ்வளவு மடங்கு பிரமாண்டமானதாக இருக்கும். சம்பளமில்லாத வேலைக்காரர்கள் முகம் தெரியாத முதலாளிக்கு ஓடி ஓடி சம்பாதிப்பார்கள். இல்லாத, புதிதாக இணையும் உறுப்பினர்களை ஓட்டாண்டி ஆக்கக்கூடிய MLM நிறுவனத்தை ஒரு நடத்துனரற்ற, வேகத்தடை வசதியில்லாமல் பயணிக்கக் கூடிய முழு வேகத்தில் செல்லும் ஒரு ரயிலுக்கு ஒப்பிடலாம்.
1. நம்ப இயலாத ,பிரமிக்கத்தக்க வாக்குறுதிகள்
நீங்கள் 6 பேரை மட்டும் உறுப்பினராக்கினால் போதும்,பின்பு நீங்கள் உங்கள் ஆயுசுக்கும் வேலையே செய்ய வேண்டாம்.2 டவுன் லைனை ஏற்படுத்தி விட்டால் போதும் அதுவே உங்கள் மிச்ச வாழ்க்கையில் பாலாற்றையும்,தேனாற்றையும் ஓட வைக்கும் என நம்ப வைக்கப்படும். பணம் கூரையைப் பிய்த்துக் கொண்டு கொட்டும். கார் பரிசாக கிடைக்கும், வெளி நாட்டு சுற்றுலா இலவசமாகவே கிடைக்கும்.பென்ஷன் திட்டமும் உண்டு. போன்ற பல திட்ட மாதிரிகள் சொல்லப்படும்.
2. புரியாத வகையில், நம்பத்தகுந்த வகையில் குழப்பமாக சொல்லப்படும் தொழில் பற்றிய விவரணை:
பாரின் பேங்குகளுக்கு உங்களிடம் வாங்கும் பணம் மூலம் கடன் கொடுத்து வட்டி வாங்கப் படுகிறது.அந்நிய செலாவணி ஈட்டித்தர பயன்படுத்தப்படுகிறது.ஈமு கோழி முட்டைகள் பெருமளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது. ஒரு கிலோ கறி 750 ரூபாய் என்பது போன்று பல வண்ணப்பொய்கள் சரிகை சுற்றப்பட்டு சொல்லப் படும். அடிப்படையான ஒரு கேள்வி என்னவென்றால், இந்த MLM நிறுவனங்கள் அளிக்கும் பொருள்களோ, அல்லது சேவையோ சிறப்பானதாக உள்ளது எனில் ஏன் இது பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளாகப் பயனளிக்கும் நுகர்வோர் சந்தையில் அறிமுகப் படுத்தப் படவில்லை? எங்கிருந்து உங்களுக்கு பணம் வருகிறது? ஏன் இது நான்கு சுவர்களுக்குள் ஒரு தனித்துவமிக்க வியாபார நோக்குடனேயே செயல்படுத்தப் படுகிறது என்பது சிந்திக்க வேண்டிய விஷயமாகும்.கணினியைப்பயன்படுத்தி MLM நிறுவங்கள் எப்படி வேலை செய்கிறது என்று ஆராய்ந்தால் பிரமிப்புடன் கூடிய அதிர்ச்சியே மிஞ்சும். ஏனெனில் MLM விளையாட்டில் வெற்றி என்பது தாளில் எழுதிப்பார்த்தால் கூட கிட்டாது.
3. மேலும் மேலும் ஆள் பிடியுங்கள்
ஒரு வியாபாரத்தின் இலாப வரவு அவ்வியாபாரம் சந்தைப்படுத்தும் பொருளின் தரத்தினைச் சார்ந்து அமையும். பொருள் தரமானதில்லை எனில் சந்தையில் வெகுநாள் தாக்கு பிடித்து நிற்காது. அதாவது தொடர்ந்து வெகுநாள் நுகர்வோரை ஏமாற்ற முடியாது. அது போல் வியாபாரத்தைப் பொறுத்தவரை அதன் உரிமையாளர் அப்பொருளை ஒருவருக்கு விற்பதோடு அந்த நுகர்வோருடன் உள்ள உறவு முடிந்து விடுகிறது. திரும்பவும் அந்த நுகர்வோர் விருப்பப்பட்டால்
அவ்வியாபாரியுடன் மீண்டும் அப்பொருளுக்காக தொடர்பு கொள்ளலாம். ஆனால் இங்கே ஒரு பொருளை அடுத்தவருக்கு விற்பதுடன் வியாபாரம் முடிந்து விடுவதில்லை. வாங்கிய பொருளுக்கான மதிப்பை நுகர்வோர் பெற வேண்டுமெனில் தன் முதுகில் மாட்டப்பட்ட தூண்டிலில் வேறு சிலரை இணைக்க தூண்டிலைக் கொண்டு அலைய வேண்டும். நிச்சயித்த அந்த ஒரு சிலர் தூண்டிலில் மாட்டவில்லை எனில் வாங்கிய பொருளுக்கு செலுத்திய காசு தண்டம் தான். எனவே இங்கு தான் நஷ்டம் அடையாமல் தப்பிக்க தான் ஏமாந்தது போல் வேறு ஒருவரை ஏமாற்ற அலைய வேண்டியுள்ளது. ஆகவே வருமானம் வருவதற்கு உள்ள ஒரே வழி மேலும் மேலும் ஆள்பிடிப்பது மட்டுமே.
4. முதலில் சேருபவருக்கு மட்டுமே லாபம்.
முதலில் சேருபவர்கள் மட்டுமே லாபம் ஈட்ட முடியும்.பின்னால் வருபவர்களுக்கு காண்பிப்பதற்காகவே முதலில் வருபவர்களுக்கு சலுகைகள் அளிக்கப்படும்.1 லச்சத்துக்கு மாதம் 8000 வீதம் எனில் 13 மாதங்களில் போட்ட அசல் வந்து விட்டால் அதன் பிறகு வருவது அனைத்தும் லாபம் தானே என்ற லாபக் கணக்கோடும்,குறைந்தது 13 மாதங்களாவது ஓடாமல் இருக்க வேண்டும் என்ற பிரார்த்தனையோடும் முதலீடு செய்வார்கள்.ஆனால் நடப்பது வேறாகத்தான் இருக்கும்.
MLM என்பது கணித விரிவாக்கத்தின் அடிப்படையில் வேலை செய்கிறது. நான்கு பேரில் ஒருவரை இழுக்க அடுத்த நான்கு பேர் வேண்டும். அவர்களில் ஒருவரை இழுத்துச் செல்ல அடுத்த நான்கு பேர். இதில் வலதிலோ இடதிலோ ஒரு பக்கச் சங்கிலியை ஒருவர் கழற்றிக்கொண்டு போனாலும் அதோ கதிதான். இதற்கு விரியும் அணிக்கோவை (Expanding Matrix) என்று பெயர்.சும்மா ஒரு கணக்கிற்கு வலதில் 5 பேரும் இடதில் 5 பேரும் என்று வைத்துக்கொண்டாலும் மூன்றடுக்கில் ஆயிரம் பேர். ஆறடுக்கில் ஒரு இலட்சம் பேர் பணம் பண்ணும் நப்பாசையில் சேர்ந்து கொண்டே செல்கின்றனர். யாருக்குப் பணம் சேருகிறதோ இல்லையோ, MLM நிறுவனர் காட்டில் மழைதான்.
5. பிரமிடு முறையில் மக்கள்
பல்லடுக்கு சந்தைப்படுத்துதலில் 6 பேராக தொடங்கி விரிவு படுத்திக்கொண்டு சென்றால் 14 அடுக்குகளுக்குள் உலகின் அனைத்து மக்கள் தொகையும் அடங்கிவிடும். எனவே இந்த முறையில் ஒருவர் இழக்கும் பணமே இன்னொருவருக்குக் கிடைக்கிறது. பணம் உண்மையில் உருவாக்கப் படுவதில்லை (No real generation of money) இதில் கண்டிப்பாக 84 விழுக்காட்டினர் பணம் இழக்க மட்டுமே செய்கின்றனர். எனவே இது ஒரு மோசடி.
99 சதவிகிதம் மக்கள் இந்தத் திட்டத்தால் பணத்தை இழந்ததுதான் மிச்சம் என்கின்றன புள்ளிவிவரங்கள். அமெரிக்கா, இங்கிலாந்து, ஃபிரான்ஸ், கனடா, மலேசியா, ஆஸ்திரேலியா போன்ற பல நாடுகளில் இந்தத் திட்டத்தை அதிகார பூர்வமாகத் தடை செய்திருக்கிறார்கள். எந்த நிறுவனத்திலும் எந்த வியாபாரத்திலும், லாபமும் இருக்கும், நஷ்டமும் இருக்கும். ஆனால், இந்த ‘எம்.எல்.எம்’-ல் மட்டும் நஷ்டமே இல்லை. பணத்தை முதலீடு செய்தால் போதும். உங்கள் வருமானம் பெருகிக்கொண்டே இருக்கும் என்கிறார்கள். ஆனால், அது எந்த வழியில் என்பதைத் தெரிவிப்பது இல்லை.
அதனால்தான் 10 ஆண்டுகளுக்கு முன் நிதி நிறுவனங்கள் பட்டை நாமம் போட்டன. சில ஆண்டுகளுக்கு முன் வீகேன், கோல்டு குவெஸ்ட் என்ற நிறுவனம் தங்கக்காசு தருகிறேன் என மோசடி செய்துள்ளது, தேக்கு மரம் தருவதாக சொன்ன மோசடி, நிலம் தருவதாக சொன்ன கலைமகள் சபா மோசடி,அதீத சக்கி தரும் காந்த படுக்கை மோசடி, சிநேகம் பைனான்ஸ், விவேக் கார்ஸ், ஸ்டெர்லிங் போன்ற நிறுவனத்தால் மக்கள் ஏமாற்றப் பட்டனர். இருந்தும் போய் ஈமு புதை குழியில் விழுகிறார்கள். இவையெல்லாம் ஊடகங்களால் அம்பலப்படுத்தப்பட்டாலும், நாளை இன்னொரு நிறுவனம் நிச்சயமாக இவர்களை ஏமாற்றவே செய்யும். அதுவும் ஊடகங்களில் வெளியாகவே செய்யும்.
குறுகிய காலத்தில் பணக்காரராகி விட வேண்டும் என்கிற ஆசை நடுத்தர & உயர் நடுத்தர வகுப்பினரிடம் இருப்பதைத் தங்களுக்குச் சாதகமாக்கிக் கொள்கின்றன இந்த நிறுவனங்கள். “எங்களிடம் பணத்தை முதலீடு செய்யுங்கள். அமேசான் ஆற்றங்கரையில் (!) உங்களுக்காக நாங்கள் தேக்கு மரக்கன்றுகள் நடுகிறோம். அது வளர்ந்தபிறகு உங்களுக்கு பல மடங்கு பணம் கிடைக்கும்” என முதலீட்டாளர்களை ஈர்த்தது அனுபவ் நிறுவனம். ஆனால், அதனிடம் முதலீடு செய்த மக்கள் பெற்ற அனுபவமோ வெறும் ஏமாற்றம் தான். சூடு கண்ட பூனை கூட அதே பால் பாத்திரங்களில் வாய் வைக்கத் தயங்கும். ஆனால், பலவடிவங்களிலான நிதி நிறுவனங்களிடம் ஏமாறும் மக்களோ மீண்டும் மீண்டும் அதே வகையான நிறுவனங்கள் மீது நம்பிக்கை கொண்டு தொடர்ந்து ஏமாறுகிறார்கள். மக்களை ஏமாற்றுவதற்காக புதுப்புது யுக்திகளைக் கையாள்கின்றன இந்த நிறுவனங்கள்.
சங்கிலித் தொடர் வணிகத்தின் முன்னோடியாக விளங்குவது ‘ஆம்வே’ என்கிற அமெரிக்க நிறுவனம். ஆக்டோபஸ் கால்கள் போல இந்தியாவிலும் கிளை பரப்பியுள்ள இந்த நிறுவனத்தை 1959இல் ஜாய் வான் ஆன்டேல், ரிச் டிவேஸ் எனும் இரு அமெரிக்கர்கள் உருவாக்கினார்கள். சுமார் 50 ஆண்டுகாலமாக இந்த நிறுவனம் தாக்குப் பிடித்திருக்கிறது. இதற்கு முக்கிய காரணம், இது மக்களின்அன்றாடப் பயன்பாட்டிற்கு உதவும் சோப்பு, எண்ணெய், ஷாம்பூ, தேயிலைத்தூள் போன்ற பொருட்களை மட்டுமே தனது சங்கிலி தொடர் வணிகத்தில் முன்னிலைப் படுத்துவது தான். இதில் பணம் செலுத்தி உறுப்பினராகி இத்தகையப் பொருட்களைப் பெற்றுக் கொள்கிறவர்களால் மேற்கொண்டு உறுப்பினர்களைச் சேர்க்க முடியாவிட்டாலும், கட்டிய காசுக்கு இதுவாவது கிடைத்ததே என திருப்திப்பட்டுக் கொண்டு ஷாம்பூவைத் தேய்த்து தலை முழுகிவிடலாம்.
ஆம்வே நிறுவனம் தாக்குப்பிடிப்பதற்கான காரணம் இதுவென்றாலும், அந்த நிறுவனமும் படாடோபமான விழாக்களை நடத்தி, “எங்கள் உறுப்பினர்கள் உலகப் பணக்காரரர்களாக இருக்கிறார்கள். நீங்களும் இந்த அற்புத உலகத்திற்கு வாருங்கள்” என ஜெபக் கூட்டங்களைப் போல ஆளை மயக்கும் பரப்புரைகளை நடத்தியே வருகிறது. அந்த விழாவுக்குச் செல்லும் ஆம்வே உறுப்பினர்கள் கோட் சூட் அணிந்து காரில் செல்வதைப் பார்க்கும் நடுத்தர வர்க்கம் நாமும் அந்த நிலைக்கு உடனடியாக வரவேண்டும் என்ற ஆசையில் உறுப்பினராக முன்வருகிறது. ஆனால், நடைமுறை அனுபவம் கசப்பாக இருப்பதால் சங்கிலித் தொடர் வணிகத்திலிருந்து அறுந்த சங்கிலி துண்டாக உதிர வேண்டிய நிலைமை ஏற்படுகிறது.
எத்தனை பேர் ஏமாந்தாலும் பெரிய பெரிய புள்ளிகளை தங்கள் நிகழ்ச்சிகளுக்கு அழைத்து, “இதோ பாருங்கள்.. இவரைப் போல நீங்களும் ஆகவேண்டாமா?” என ஆசை உணர்ச்சிகளைத் தூண்டிவிடும் கலையை சங்கிலித் தொடர் வணிக நிறுவனங்கள் நன்றாகவே கையாள்கின்றன. தங்கக்காசு மோசடியில் ஈடுபட்ட கோல்டு குவெஸ்ட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் விஜய ஈஸ்வரனுடன் மத்திய மந்திரிகள், உயரதிகாரிகள், திரைப்பட நட்சத்திரங்கள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மனைவியும், வழக்கறிஞருமான நளினி சிதம்பரம் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருக்கிறார்கள். பிரபல வழக்கறிஞர்கள், காவல்துறை உயரதிகாரிகள் எனப் பலரும் இந்த நிறுவனத்திற்கு ஆதரவாகப் பேசி, மக்களின் ஆசை உணர்ச்சிகளைத் தூண்டியதில் முக்கிய பங்கு வகித்திருக்கிறார்கள்.பொறுப்பில் இருக்கும் மத்திய அமைச்சர் நாராயண சாமியே வந்து திறந்து வைத்ததால் தான் சுசி ஈமு நிறுவனத்தில் 10 லட்சம் பணத்தை இடத்தை அடமானம் வைத்து போட்டேன் என சொல்லும் பாமர விவசாயியை என்ன சொல்வது?
ஐ.பி.எஸ். படித்த காவல்துறை உயரதிகாரிகள் கூட இப்படிப்பட்ட மோசடி நிறுவனங்களை அடையாளம் காணமுடியாமல் ஏமாறுகிறார்கள். பல கோடிகளை லஞ்சமாக பெற்றுக்கொண்டு கண்டும் காணாமலும் இருக்கும் காவல் துறையை என்ன சொல்வது? பாசி நிறுவத்திடம் 10 கோடியை லஞ்சமாக பெற்ற டி.எஸ்.பி, 3 கோடியை பெற்ற இன்ஸ்பெக்டர் இவர்கள் தான் மக்களை காப்பாற்ற வேண்டும்! என்ன செய்வது?
மேலும் இதுபோன்ற நிறுவனங்களில் அதன் நிர்வாக இயக்குநர் யார், போர்டு ஆஃப் டைரக்டர்ஸ் யார், என்பது எல்லாம் தெரியாது. வெறும் மண்டல அளவில் வட நாட்டுக்காரர்களைக் காட்டுவார்கள். அவரும் எங்கு இருக்கிறார் என்பது தெரியாது! மக்களிடம் இருந்து வாங்கும் பணம் என்ன ஆகிறது, எங்கு போகிறது என்பது தெரியாது. பணம் வாங்கியதற்கும், பணம் கொடுத்ததற்கும் எந்த ஒரு கணக்கு வழக்கும் கிடையாது.யார் முதலாளி, சங்கிலி அமைப்பின் இறுதிக் கண்ணியாக யார் இருக்கிறார்கள், எப்போது சம்பளம், எப்படி கமிஷன் என்பது எல்லாம் அந்தப் பரம்பொருளே அறியாத சங்கதிகள்!.பொருட்கள் தரமானதுதானா, எந்தப் பொருளுக்கு எங்கு தடை விதிக்கப்பட்டு இருக்கிறது, அந்தப் பொருளை ஏன் இங்கு விற்கிறார்கள், அதை அனுமதித்தது யார் என்பதல்லாம் தகவல் அறியும் உரிமைச் சட்டம்கூட வெளிக்கொண்டு வர முடியாத தகவல்கள்! ஏதேனும் ஒரு நிலையில், இந்தச் சங்கிலி அமைப்பு நிச்சயமாக உடைபடும். அப்போது யார், எங்கு, எப்படி, என்னவென்று புகார் அளிக்க முடியும் என்பது கேள்விக்குறி!.
இது போன்ற திட்டங்களில் முதலீடு செய்து விட்டு பின்பு வழி தெரியாது விழி பிதுங்கும் எத்தனையோ நபர்களை கண்டும்,கேட்டும் நம் மன நிலையை நாம் மாற்றிக்கொள்ள வேண்டும்.அனைத்து குறுக்கு வழிகளும் நேர் வழியை விட மிக மிக நீளமானவை. உடனடி லாபம், அபரிமிதமான பரிசுப் பொருட்கள் இதெல்லாம் சாத்தியமல்ல.போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து. உழைப்பே உயர்வு தரும் என்பன போன்ற மொழிகள் எல்லாம் நமக்காக நம் முன்னோர்கள் ஆழ்ந்து அனுபவித்து சொன்னது தான். கவனத்தில் கொள்ளுவோம். கடந்த பத்தாண்டுகளில் தமிழகத்து மக்கள் வெவ்வேறு வகையான மோசடி முதலீட்டு தீட்டங்களில் இழந்தது சுமாராக 24000 கோடி ரூபாய். ஆனாலும் அரசு இது சம்பந்தமாக வழக்கம் போலவே மெளனமாக இருந்து தம் மக்கள் படும் வேதனைகளை அமைதியாக பார்த்து கொண்டு அடுத்த கொள்ளைக்கு தயாராகி விடுகிறது. நாமும் கட்டுரையை படித்து விட்டு வேறு புது மாதிரியாக ஏமாற தயாராக இருப்போம்.
Thanks to: http://www.tamilhindu.com/2012/08/scamsters-in-all-hues/
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

தமிழக, ஆந்திர,கேரள மக்கள் தொடர்ந்து ஏதாவது ஒரு ஏமாற்றுத்திட்டத்திற்கு பலியாகி தங்களின் ஆதார சேமிப்பையும், சொத்துக்களையும் இழந்து கொண்டே தான் வருகிறார்கள்.ஈமுவில் ஏமாந்தது தான் கடைசி என்று இதோடு நிறுத்தி விட மாட்டார்கள். இன்னும் எத்தனை வகையான மோசடித்திட்டங்கள் வந்தாலும் அத்தனையிலும் பணத்தை போட்டு விட்டு டீ.வி.மைக் முன்னால் சோக ராகம் பாடுவதை நிறுத்தப் போவதில்லை.ஜீவிலும், நேஷனல் ஜியாகரஃபி சேனலிலும் மட்டுமே பார்த்து இருந்த ஆஸ்திரேலிய பறவை இனத்தை எதை நம்பி அது பொன்முட்டையிடும் என்று தமிழர்கள் நம்பினார்கள் என புரிந்து கொள்வது மிகவும் கடினமாக இருக்கிறது.இவர்களின் குறி எல்லாம் நடுத்தர வர்க்க,கீழ்,மேல் மத்திய தர வர்க்க மாணவர்கள் மற்றும் ரிட்டையரான அரசு ஊழியர்கள் தான். நடுத்தர வர்க்க மக்களின் மேல் தட்டு கனவை நனவாக்கவும்,ஆடம்பரத்தை அனுபவிக்க தூண்டுதலும்,அரசு ஊழியர்களின் பாதுகாப்பின்மை,எதிர்கால பாதுகாப்பு இவற்றின் மீது தான் இந்த நய வஞ்சகமே கட்டமைக்கப் படுகிறது. எப்படியாவது பணத்தைப் பெருகச்செய்து, வசதி வாய்ப்புகளை அனுபவித்து விடவேண்டும் என நினைக்கிறார்கள் மக்கள். எப்படியெல்லாம் ஏமாற்றி அவர்களின் பணத்தைச் சுருட்டிக் கொண்டு ஓடலாம் என திட்டம் போட்டுச் செயல்படுத்துகின்றன பண சுழற்சி நிறுவனங்கள்.படிப்பறிவு குறைவான மக்களை கூட ஏமாற்ற கொஞ்சம் கஷ்டப்பட வேண்டும் போல இருக்கிறது ஆனால். படித்தவர்களை ஏமாற்றுவதற்கு இத்தனை சிரமங்கள் இல்லை. “உங்கள் பணத்தை எங்களிடம் கொடுங்கள். ஓர் ஆண்டுக்குள் 2 மடங்கு, 3 மடங்கு ஆக்கிக் காட்டுகிறோம்” என்று சொன்னால் போதும் கோடிக்கணக்கில் கொட்டி ஏமாறுவதற்கு படித்தவர்கள் தயாராகவே இருக்கிறார்கள்.
1990 களில் அசத்தும் ஆடு வளர்ப்பு திட்டங்கள் சில கோடிகளை மேய்ந்தது.பின்பு ஏலச்சீட்டு ஏமாற்றம்.அதன் பின் 7 ஸ்டார் நிறுவனத்தின் எலக்ட்ரானிக் பொருட்கள் மோசடி, ஆம்வே திருட்டு தனங்கள், தேக்கு மரத்திட்டங்கள், அனுபவ் பிளாண்டேஷன், ஸ்டெர்லிங் டிரீ மேக்னம்,கோழி வளர்ப்பு, சினேகம் சிட்பண்ட்ஸ், விவேகம் சிட்பண்ட்ஸ், ரமேஸ் கார்ஸ் போன்ற நிறுவனங்களின் அதிக வட்டி அசலுக்கு வேட்டு, நில மோசடி கலைமகள் சபா, ரிசார்ட்கள், கிளப் மோசடிகள், டி.எல்.சியின் இன்ஸீரன்ஸ் மோசடி, ராயப்பேடை பெனிபிட் பண்டு போன்ற நிதி நிறுவன மோசடி, v-can மோசடி, காந்த படுக்கை மோசடிகள், கோனிபயோ தங்க காசு மோசடி, கோல்ட் குவெஸ்ட்டின் மோசடி, பாரம்பரியமான பண்ட் மோசடிகள், சின்ன அளவிலான பலகாரச்சீட்டு மோசடிகள், ஆரோக்கிய பானங்கள், துணைப்பொருட்கள், மருந்துகள் விற்கும் மோசடிகள். உடல் நலன் சார்ந்த குடிப்புகள் மற்றும் இணைப்புகள், அற்புத சுகமளிக்கும் சுவிசேஷ ஆவிக்கூட்டங்கள், பூரண சுகமளிக்கும் புனித ஜபக்கூட்டங்கள். தொடர்ந்து ஏமாறும் ஏலச்சீட்டு மோசடிகள், பங்கு சந்தை சார்ந்த நிதி முதலீட்டு மோசடிகள், மியுச்சுவல் பண்ட் மோசடிகள், பாரின் கரன்ஸி ட்ரேடிங் பாஸி மோசடி, கடைசியாக ஈமு இதெல்லாம் எனக்கு தெரிந்தது மட்டும். இத்தனைக்கு பிறகும் ஏமாற நாங்கள் தயாராகவே இருக்கிறோம் என அறைகூவல் விடுக்கும் மக்களை என்ன செய்வது?
அடுத்தவர்களின் பணத்தில் விளையாடப்படும் இது போன்ற விளையாட்டுக்கள் பெரும் உண்மைபோல் தோன்றச்செய்யும் கணக்குகளும்,சினிமா,மீடியா கவர்ச்சிகளும் துணை நின்று மெய் நிகர் உலகை படைத்து மாய வலையில் சிக்க வைத்து உங்களை காலம் முழுக்க குற்ற உணர்வில் புழுங்கி நொந்து போக செய்வதல்லாமல் வேறொன்றும் செய்யப் போவதில்லை. 250க்கும் மேற்பட்ட நிறுவனங்களின் மீது சுமத்தப்பட்டிருக்கும் மோசடிப் புகாரின் மொத்த மதிப்பு 2000 கோடியை தொடுகிறது.சமீபத்தில் வந்த பாஸி நிறுவனம் மோசடி செய்த தொகை 4750 கோடி மட்டுமே.
அதனால்தான் 10 ஆண்டுகளுக்கு முன் நிதி நிறுவனங்கள் பட்டை நாமம் போட்டன. சில ஆண்டுகளுக்கு முன் வீகேன், கோல்டு குவெஸ்ட் என்ற நிறுவனம் தங்கக்காசு தருகிறேன் என மோசடி செய்துள்ளது, தேக்கு மரம் தருவதாக சொன்ன மோசடி, நிலம் தருவதாக சொன்ன கலைமகள் சபா மோசடி,அதீத சக்கி தரும் காந்த படுக்கை மோசடி, சிநேகம் பைனான்ஸ், விவேக் கார்ஸ், ஸ்டெர்லிங் போன்ற நிறுவனத்தால் மக்கள் ஏமாற்றப் பட்டனர். இருந்தும் போய் ஈமு புதை குழியில் விழுகிறார்கள். இவையெல்லாம் ஊடகங்களால் அம்பலப்படுத்தப்பட்டாலும், நாளை இன்னொரு நிறுவனம் நிச்சயமாக இவர்களை ஏமாற்றவே செய்யும். அதுவும் ஊடகங்களில் வெளியாகவே செய்யும்.
குறுகிய காலத்தில் பணக்காரராகி விட வேண்டும் என்கிற ஆசை நடுத்தர & உயர் நடுத்தர வகுப்பினரிடம் இருப்பதைத் தங்களுக்குச் சாதகமாக்கிக் கொள்கின்றன இந்த நிறுவனங்கள். “எங்களிடம் பணத்தை முதலீடு செய்யுங்கள். அமேசான் ஆற்றங்கரையில் (!) உங்களுக்காக நாங்கள் தேக்கு மரக்கன்றுகள் நடுகிறோம். அது வளர்ந்தபிறகு உங்களுக்கு பல மடங்கு பணம் கிடைக்கும்” என முதலீட்டாளர்களை ஈர்த்தது அனுபவ் நிறுவனம். ஆனால், அதனிடம் முதலீடு செய்த மக்கள் பெற்ற அனுபவமோ வெறும் ஏமாற்றம் தான். சூடு கண்ட பூனை கூட அதே பால் பாத்திரங்களில் வாய் வைக்கத் தயங்கும். ஆனால், பலவடிவங்களிலான நிதி நிறுவனங்களிடம் ஏமாறும் மக்களோ மீண்டும் மீண்டும் அதே வகையான நிறுவனங்கள் மீது நம்பிக்கை கொண்டு தொடர்ந்து ஏமாறுகிறார்கள். மக்களை ஏமாற்றுவதற்காக புதுப்புது யுக்திகளைக் கையாள்கின்றன இந்த நிறுவனங்கள்.
சங்கிலித் தொடர் வணிகத்தின் முன்னோடியாக விளங்குவது ‘ஆம்வே’ என்கிற அமெரிக்க நிறுவனம். ஆக்டோபஸ் கால்கள் போல இந்தியாவிலும் கிளை பரப்பியுள்ள இந்த நிறுவனத்தை 1959இல் ஜாய் வான் ஆன்டேல், ரிச் டிவேஸ் எனும் இரு அமெரிக்கர்கள் உருவாக்கினார்கள். சுமார் 50 ஆண்டுகாலமாக இந்த நிறுவனம் தாக்குப் பிடித்திருக்கிறது. இதற்கு முக்கிய காரணம், இது மக்களின்அன்றாடப் பயன்பாட்டிற்கு உதவும் சோப்பு, எண்ணெய், ஷாம்பூ, தேயிலைத்தூள் போன்ற பொருட்களை மட்டுமே தனது சங்கிலி தொடர் வணிகத்தில் முன்னிலைப் படுத்துவது தான். இதில் பணம் செலுத்தி உறுப்பினராகி இத்தகையப் பொருட்களைப் பெற்றுக் கொள்கிறவர்களால் மேற்கொண்டு உறுப்பினர்களைச் சேர்க்க முடியாவிட்டாலும், கட்டிய காசுக்கு இதுவாவது கிடைத்ததே என திருப்திப்பட்டுக் கொண்டு ஷாம்பூவைத் தேய்த்து தலை முழுகிவிடலாம்.
ஆம்வே நிறுவனம் தாக்குப்பிடிப்பதற்கான காரணம் இதுவென்றாலும், அந்த நிறுவனமும் படாடோபமான விழாக்களை நடத்தி, “எங்கள் உறுப்பினர்கள் உலகப் பணக்காரரர்களாக இருக்கிறார்கள். நீங்களும் இந்த அற்புத உலகத்திற்கு வாருங்கள்” என ஜெபக் கூட்டங்களைப் போல ஆளை மயக்கும் பரப்புரைகளை நடத்தியே வருகிறது. அந்த விழாவுக்குச் செல்லும் ஆம்வே உறுப்பினர்கள் கோட் சூட் அணிந்து காரில் செல்வதைப் பார்க்கும் நடுத்தர வர்க்கம் நாமும் அந்த நிலைக்கு உடனடியாக வரவேண்டும் என்ற ஆசையில் உறுப்பினராக முன்வருகிறது. ஆனால், நடைமுறை அனுபவம் கசப்பாக இருப்பதால் சங்கிலித் தொடர் வணிகத்திலிருந்து அறுந்த சங்கிலி துண்டாக உதிர வேண்டிய நிலைமை ஏற்படுகிறது.
எத்தனை பேர் ஏமாந்தாலும் பெரிய பெரிய புள்ளிகளை தங்கள் நிகழ்ச்சிகளுக்கு அழைத்து, “இதோ பாருங்கள்.. இவரைப் போல நீங்களும் ஆகவேண்டாமா?” என ஆசை உணர்ச்சிகளைத் தூண்டிவிடும் கலையை சங்கிலித் தொடர் வணிக நிறுவனங்கள் நன்றாகவே கையாள்கின்றன. தங்கக்காசு மோசடியில் ஈடுபட்ட கோல்டு குவெஸ்ட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் விஜய ஈஸ்வரனுடன் மத்திய மந்திரிகள், உயரதிகாரிகள், திரைப்பட நட்சத்திரங்கள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மனைவியும், வழக்கறிஞருமான நளினி சிதம்பரம் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருக்கிறார்கள். பிரபல வழக்கறிஞர்கள், காவல்துறை உயரதிகாரிகள் எனப் பலரும் இந்த நிறுவனத்திற்கு ஆதரவாகப் பேசி, மக்களின் ஆசை உணர்ச்சிகளைத் தூண்டியதில் முக்கிய பங்கு வகித்திருக்கிறார்கள்.பொறுப்பில் இருக்கும் மத்திய அமைச்சர் நாராயண சாமியே வந்து திறந்து வைத்ததால் தான் சுசி ஈமு நிறுவனத்தில் 10 லட்சம் பணத்தை இடத்தை அடமானம் வைத்து போட்டேன் என சொல்லும் பாமர விவசாயியை என்ன சொல்வது?
ஐ.பி.எஸ். படித்த காவல்துறை உயரதிகாரிகள் கூட இப்படிப்பட்ட மோசடி நிறுவனங்களை அடையாளம் காணமுடியாமல் ஏமாறுகிறார்கள். பல கோடிகளை லஞ்சமாக பெற்றுக்கொண்டு கண்டும் காணாமலும் இருக்கும் காவல் துறையை என்ன சொல்வது? பாசி நிறுவத்திடம் 10 கோடியை லஞ்சமாக பெற்ற டி.எஸ்.பி, 3 கோடியை பெற்ற இன்ஸ்பெக்டர் இவர்கள் தான் மக்களை காப்பாற்ற வேண்டும்! என்ன செய்வது?
மேலும் இதுபோன்ற நிறுவனங்களில் அதன் நிர்வாக இயக்குநர் யார், போர்டு ஆஃப் டைரக்டர்ஸ் யார், என்பது எல்லாம் தெரியாது. வெறும் மண்டல அளவில் வட நாட்டுக்காரர்களைக் காட்டுவார்கள். அவரும் எங்கு இருக்கிறார் என்பது தெரியாது! மக்களிடம் இருந்து வாங்கும் பணம் என்ன ஆகிறது, எங்கு போகிறது என்பது தெரியாது. பணம் வாங்கியதற்கும், பணம் கொடுத்ததற்கும் எந்த ஒரு கணக்கு வழக்கும் கிடையாது.யார் முதலாளி, சங்கிலி அமைப்பின் இறுதிக் கண்ணியாக யார் இருக்கிறார்கள், எப்போது சம்பளம், எப்படி கமிஷன் என்பது எல்லாம் அந்தப் பரம்பொருளே அறியாத சங்கதிகள்!.பொருட்கள் தரமானதுதானா, எந்தப் பொருளுக்கு எங்கு தடை விதிக்கப்பட்டு இருக்கிறது, அந்தப் பொருளை ஏன் இங்கு விற்கிறார்கள், அதை அனுமதித்தது யார் என்பதல்லாம் தகவல் அறியும் உரிமைச் சட்டம்கூட வெளிக்கொண்டு வர முடியாத தகவல்கள்! ஏதேனும் ஒரு நிலையில், இந்தச் சங்கிலி அமைப்பு நிச்சயமாக உடைபடும். அப்போது யார், எங்கு, எப்படி, என்னவென்று புகார் அளிக்க முடியும் என்பது கேள்விக்குறி!.
இது போன்ற திட்டங்களில் முதலீடு செய்து விட்டு பின்பு வழி தெரியாது விழி பிதுங்கும் எத்தனையோ நபர்களை கண்டும்,கேட்டும் நம் மன நிலையை நாம் மாற்றிக்கொள்ள வேண்டும்.அனைத்து குறுக்கு வழிகளும் நேர் வழியை விட மிக மிக நீளமானவை. உடனடி லாபம், அபரிமிதமான பரிசுப் பொருட்கள் இதெல்லாம் சாத்தியமல்ல.போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து. உழைப்பே உயர்வு தரும் என்பன போன்ற மொழிகள் எல்லாம் நமக்காக நம் முன்னோர்கள் ஆழ்ந்து அனுபவித்து சொன்னது தான். கவனத்தில் கொள்ளுவோம். கடந்த பத்தாண்டுகளில் தமிழகத்து மக்கள் வெவ்வேறு வகையான மோசடி முதலீட்டு தீட்டங்களில் இழந்தது சுமாராக 24000 கோடி ரூபாய். ஆனாலும் அரசு இது சம்பந்தமாக வழக்கம் போலவே மெளனமாக இருந்து தம் மக்கள் படும் வேதனைகளை அமைதியாக பார்த்து கொண்டு அடுத்த கொள்ளைக்கு தயாராகி விடுகிறது. நாமும் கட்டுரையை படித்து விட்டு வேறு புது மாதிரியாக ஏமாற தயாராக இருப்போம்.
Thanks to: http://www.tamilhindu.com/2012/08/scamsters-in-all-hues/
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
No comments:
Post a Comment