WEL COME...Tamilnet Live...தமிழ்நெட் லைவ் ..வருக வருக ...

Select Your Language

நடுத்தர வர்க்கம் – செலவு சேமிப்பு



family 279x300 நடுத்தர வர்க்கம்   செலவு சேமிப்புந்திய மக்களிடையே சேமிக்கும் பழக்கம் முன்பு இருந்தே உள்ளது ஆனால், தற்போதைய பொருளாதாரக் கொள்கைகளால், பல வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் கடை விரித்து, மக்களின் பணத்தை காலி செய்வதிலேயே குறியாக இருக்கின்றன. அதாவது நம்மை செலவு செய்யத் தூண்டும் காரணிகள் அதிகமாகிக் கொண்டு செல்கின்றன. நாம் சும்மா இருந்தாலும், விளம்பரங்கள் செய்து ஆசை காட்டி நம் பணத்தை வசூல் செய்து விடுகிறார்கள். இதில் அதிகம் பாதிக்கப்படுவது நடுத்தர வர்க்கம் தான். Image Credit http://www.dreamstime.com
எப்படி செலவைக் கட்டுக்குள் கொண்டு வருவது என்பது பற்றி பார்ப்போம்.
திட்டமிடுதல்
வடிவேல் சொல்வாரே.. “எதையும் ப்ளான் பண்ணி பண்ணனும்” என்று, அது மாதிரி திட்டமிடுதல் என்பது ரொம்ப முக்கியம். திட்டமிடுதல் என்ற ஒரு விஷயம் இல்லை என்றால் எதுவுமே சரியாக வராது. எனவே நமது மாத பட்ஜெட் என்ன? அதில் நாம் எப்படி நமது செலவுகளை பிரிக்கலாம் என்பதை முடிவு செய்ய வேண்டும். இதற்காக திட்டமிடும் போதே, நமது அனைத்து செலவிற்கும் சேர்த்து திட்டமிட வேண்டும், அப்போது தான் இறுதியில் பிரச்சனை இல்லாமல் இருக்கும். சம்பளம் வந்த முதல் இரண்டு வாரம் ஜாலியாகவும் கடைசி இரண்டு வாரம் நெருக்கடியாகவும் ஆவதற்கு திட்டமிடுதல் இல்லாமையே காரணம்.
புதுச் செலவை என்ன செய்வது?
திட்டமிட்டுத் தான் செய்கிறோம் ஆனால், சில நேரங்களில் திட்டமிடுதலில் இல்லாத செலவுகளும் திடீர் என்று வந்து விடுகின்றன, அப்போது என்ன செய்வது? இது நியாயமான கேள்வி தான். என்ன தான் திட்டமிட்டாலும், சில நேரங்களில் நம்மையும் மீறி புதிய அத்தியாவசிய செலவுகள் [நண்பர்கள் திருமணம், மருத்துவம், பரிசுப்பொருள்] வந்து விடும். இந்த நேரங்களில் நமது சேமிப்பில் இருந்து எடுக்கலாம் அல்லது நண்பர்களிடையே கடனாக பெற வேண்டியது இருக்கும். இது போல் என்ன செலவானாலும் அடுத்த மாதத்தில் குறைக்கக்கூடிய செலவுகளில் கையை வைத்துத் தான் ஆக வேண்டும், அப்போது தான் சமாளிக்க முடியும், இல்லை என்றால் கடன் என்பது தொடர் கதையாகி விடும். நம்மால் திரும்ப கொடுக்க முடியும் என்றால் மட்டுமே கடன் வாங்குவது நமக்கு நல்லது.
கடன் விசயத்தில் எனக்கு நிறைய அனுபவம் இருக்கிறது, எனவே தான் கூறுகிறேன். வாய்ப்பு கிடைக்கும் போது இது பற்றி விரிவாகக் கூறுகிறேன்.
ஆசைப்படலாமா?
என்றுமே வரவுக்கு மீறி செலவு செய்யவே கூடாது, இவ்வாறு செய்யப்படும் செலவுகளே நம்மை சிக்கலில் மாட்டி விடும். புத்தர் கூறியது போல “ஆசையே நமது துன்பத்திற்குக் காரணம்”. அப்ப என்ன ஆசையே படக்கூடாதா? தாராளமாகப் படலாம். என்னங்க கிரி! இப்பத் தான் ஆசைப்படக் கூடாது என்று சொன்னீங்க ஆனால், இப்ப ஆசைப்படலாம் என்று கூறுகிறீர்களே! என்று கேட்கறீர்களா! icon smile நடுத்தர வர்க்கம்   செலவு சேமிப்பு ஆசைப்படலாம்! ஆனால், அதற்குண்டான நம் தகுதிகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். நமது சம்பாதிக்கும் திறனை அதிகரிக்க வேண்டும்.
அதாவது நம்மில் பெரும்பாலனர்கள் வாங்கும் சம்பளமே போதும்! என்று அடுத்த கட்டத்திற்கு செல்ல முயற்சிக்கவே மாட்டார்கள். காலம் முழுவதும் ஒரே நிலையில் இருந்து, அதே நிலையிலேயே தங்கள் வாழ்வை முடித்துக்கொள்வார்கள். எப்பப்பார்த்தாலும் பஞ்சப்பாட்டாகவே இருக்கும். இதை எப்படி கடந்து வருவது?
முதலில் நாம் அடுத்த நிலைக்கு செல்ல வேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும்? என்பதைக் கண்டறிய வேண்டும். எடுத்துக்காட்டாக ஒரு பொறுப்பில் இருக்கிறீர்கள், அடுத்த நிலைக்கு செல்ல வேண்டும் என்றால் ஒரு Certification / மேல் படிப்பை முடிக்க வேண்டியது இருக்கும். அப்படி என்றால், நாம் அந்தப் படிப்பை முடிக்க என்ன செய்யலாம் என்பதை யோசித்து அதை நோக்கி நமது திட்டங்களை வகுக்க வேண்டும். குண்டு சட்டியிலே குதிரை ஓட்டிக்கொண்டு இருக்கக் கூடாது. குண்டு சட்டி குதிரை அப்படின்னா என்ன? என்றெல்லாம் யோசிக்கக்கூடாது. பழமொழி சொன்னா அனுபவிக்கனும் ஆராயக்கூடாது icon smile நடுத்தர வர்க்கம்   செலவு சேமிப்பு .
இதற்கு முதல் எதிரி சோம்பேறித்தனம், முயற்சியின்மை. கஷ்டப்படாம எதுவும் கிடைக்காதுங்க… நாம ஒரு நல்ல நிலைக்கு வர வேண்டும் என்றால், அதற்கு கடுமையா உழைக்கணும். நம்ம ஆளுங்க முயற்சியும் செய்ய மாட்டாங்க.. பணமும் நிறைய வேண்டும் என்பார்கள். இது எப்படிங்க நடக்கும்? அதிர்ஷ்டம் இருந்தால் நடக்கும் ஆனால், அது நிரந்தரம் அல்ல. எனவே எப்போதுமே ஒரு நிலையில் இருப்பதை தொடராமல், அடுத்த கட்டத்திற்கு செல்வது எப்படி? என்பதை யோசித்து அதற்குண்டான முயற்சிகளில் ஈடுபடலாம். இப்பச் சொல்லுங்க ஆசை படுவதில் தவறில்லை தானே! icon smile நடுத்தர வர்க்கம்   செலவு சேமிப்பு அளவோடு ஆசைப்படுங்க.. அளவுக்கு மீறினால் என்ன ஆகும் என்பதை பல செய்திகளில் படித்து இருப்பீர்கள்.
சேமிப்பது சிரமமா?
நிறையப் பேர், சேமிப்பது ரொம்பக் கஷ்டம் என்று நினைத்துக் கொண்டுள்ளார்கள், இல்லவே இல்லை. சேமிக்க ஆரம்பித்தால் நமக்கே தெரியாமல் பணம் சேர்ந்து விடும். சேமிக்க எவ்வளவோ வழிகள் இருக்கிறது. இதில் நமக்கு எது சரிப் பட்டு வருதோ அதில் நாம் இணையலாம். முதலில் பணம் கட்ட சிரமமாக இருக்கும், பின்னர் அது அப்படியே நமக்கு ஒரு பழக்கமாகி, சிரமமில்லாத ஒன்றாகி விடும். ஒரு நாள் பார்த்தால், அட! இவ்வளவு சேமித்து விட்டோமா! என்ற ரொம்ப ஆச்சர்யமாக இருக்கும். பின்னர் ஏற்படும் பெரிய செலவிற்கு இந்த சேமிப்பு மிக உதவியாக இருக்கும். இதைப் படிக்கும் பலருக்கு தங்களின் சேமிப்பு மனக்கண்ணில் வந்து செல்லும் என்று நினைக்கிறேன்.
அனாவசிய செலவு தடுப்பது எப்படி?
நம்மில் பலர் செய்யும் செலவுகள் தேவையற்ற வீண் செலவுகளாக இருக்கும் ஆனால், அது அவர்களுக்கு தெரியவே தெரியாது. மச்சி! என்ன செலவு ஆகுதுன்னே தெரியல, பணம் தண்ணீர் மாதிரி போகிறது என்று கூறுவார்கள். இதை ஒரு முறையாவது உங்கள் வாழ்வில் யாரிடமாவது கேட்டு இருப்பீர்கள். இதற்குக் காரணம், எந்த திட்டமிடுதலும் இல்லாமல் மனம் போன போக்கில் செலவு செய்வதாகும். இதைத் தடுக்க கூச்சம், சோம்பேறித்தனம் பார்க்காமல் தினமும் நாம் என்னென்ன செலவு செய்கிறோம் என்பதை ஒன்றுவிடாமல் எழுதி வைக்க வேண்டும். கிரி இதெல்லாம் நடக்கிற காரியமா? என்று கேட்பவர்களுக்கு, உங்கள் செலவை கட்டுக்குள் கொண்டு வரவேண்டும் என்றால் இதைப் பின்பற்றியே ஆக வேண்டும்.
ஒரு மாதம் எழுதினாலே நமக்குத் தெளிவாகப் புரிந்து விடும். நாம் என்னென்ன வெட்டிச் செலவுகள் செய்து கொண்டு இருக்கிறோம் என்று. இதைப் பார்த்தாலே நாம் அதிர்ச்சி ஆகி விடுவோம். அட! எதுக்கு இதற்கு இவ்வளவு செலவு செய்கிறோம்? மாம்ஸ் தம் / தண்ணி அடிக்கிறதை குறைக்கனும்டா.. ஓவரா போயிட்டு இருக்கு போல. ஆஹா! நாம வாங்குற நொறுக்கு தீனிக்கு, ஒரு மாட்டுக்கே தீனி போட்டுடலாம் போல இருக்கே! என்று அதிர்ச்சியாக வாய்ப்புண்டு icon smile நடுத்தர வர்க்கம்   செலவு சேமிப்பு .
நீங்க சாப்பிடுவதோடு, குழந்தைகளுக்கும் நொறுக்குத் தீனி வாங்கித் தந்து பழக்கப்படுத்தாதீர்கள். அது உடலுக்கு மிகக் கெடுதல், சிறு வயதிலேயே உடல் பருமனாக இந்த நொறுக்குத்தீனி மிக முக்கியக்காரணம். நீங்கள் உங்கள் செலவுகளை எழுதி வைத்தால், கண்டிப்பாக உங்கள் செலவுகள் உங்கள் கட்டுப்பாட்டிற்குள் வரும், இதை என்னால் உறுதியாகக் கூற முடியும். எப்படித்தான் செலவு ஆகுதுன்னே புரியலையே! என்று நீங்கள் கூறுவது நின்று விடும். எழுதி வைத்தால் மட்டும் போதாது, அதில் என்ன செலவு தேவையற்ற செலவு, அதிகம் செய்யும் செலவு என்று பார்த்து அதை தவிர்க்க / குறைக்க முயற்சிக்க வேண்டும்.
குழந்தைகளுக்கு, கேட்டதெல்லாம் வாங்கித் தந்து பழக்கப்படுத்தாதீர்கள். இது குழந்தைகளை கெடுப்பதோடு அவர்கள் வளர்ந்து பெரியவர்கள் ஆனாலும், இதே போல செலவு செய்து பழக்கப்பட்டு விடுவார்கள். குழந்தைகளுக்கு எப்போதுமே பணத்தின் அருமையை சொல்லிக்கொடுங்கள். உங்கள் குடும்பத்தின் சிரமங்களை அவர்களுக்கு அறியப்படுத்துங்கள். இது பெரியவர்கள் சமாச்சாரம் என்று அவர்களை ஒதுக்கினால், குடும்பக் கஷ்டமே உணராமல் வளர்ந்து விடுவார்கள். செலவுகள் செய்யும் போது அவர்களையே செய்யச் சொல்லுங்கள், அப்போது தான் அவர்களுக்கும் ஒரு பொறுப்பு இருக்கும்.
சேமிப்பின் அவசியம்
நம் ஒவ்வொருவருக்கும் சேமிப்பு என்பது மிக அவசியம் ஆகும். சேமிப்பு என்பது எப்படி வேண்டும் என்றாலும் இருக்கலாம் பணமாக, தங்கமாக, நிலமாக என்று உங்களுக்கு எது சரிப்பட்டு வருகிறதோ / லாபம் என்று தோன்றுகிறதோ அந்த வகையில் உங்கள் சேமிப்பை தொடரலாம். சில நேரங்களில் சேமிப்பிற்காக பணம் ஒதுக்குவது கடுப்பாகவே இருக்கும், அதுவும் பணப் பற்றாக்குறையான சமயங்களில். இதுக்கு வேற மாசாமாசம் கொடுக்க வேண்டியதாக இருக்குதே! என்று எரிச்சலாக இருக்கும். நமக்கு இந்தப்பணம் மொத்தமாக கிடைக்கும் போது தான், இதனுடைய அருமை புரியும். எனவே சேமியுங்க! சேமிக்கப் பழகுங்கள். அனாவசிய செலவை குறைக்க முயலுங்கள். நீங்கள் நடுத்தர வர்க்கம் என்றால் இது ரொம்ப அவசியம்.


~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ 

No comments: